அப்போலோ சிக்கன் அப்படினா என்னனு நிறைய பேருக்கு ஒரே குழப்பமா இருக்கும். சிக்கன்ல நம்ம எது செஞ்சாலும் ருசி ரொம்பவே சூப்பரா இருக்கும் அந்த வகையில இன்னைக்கு ஹைதராபாத் பேமஸ் ஆன அப்போலோ சிக்கன் தான் செய்யப் போறோம். இந்த அப்பல்லோ சிக்கன் செய்வது ரொம்ப ஈஸி தான் நிறைய பேரு இத ரெஸ்டாரண்ட்ல சாப்பிட்டு இருப்பீங்க ஆனா ஒரு சில சுத்தமா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஆனா ஒரு தடவ வீட்ல மட்டும் இத செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் ரெஸ்டாரன்ட்கே போக மாட்டீங்க அவ்வளவு ருசியா வீட்லையே செய்யலாம். இந்த அப்பல்லோ சிக்கன் ரெசிப்பியை சின்ன குழந்தைகள் அந்த பெரியவங்க வரைக்கும் யாருக்கு வேணாலும் கொடுக்கலாம் அவ்வளவு விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த அப்பொழுது சிக்கன் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
அப்போலோ சிக்கன் | Apollo Chicken Recipe In Tamil
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
தேவையான பொருட்கள்
- 1/2 கி சிக்கன்
- 1 கப் தயிர்
- 1 முட்டை
- 1 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1/2 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
- 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1 டீஸ்பூன் சோள மாவு
- 5 பல் பூண்டு
- 1 துண்டு இஞ்சி
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 2 பெரிய வெங்காயம்
- 1 டீஸ்பூன் சில்லி சாஸ்
- 1 டீஸ்பூன் தக்காளி சாஸ்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கழுவிய சிக்கனை சேர்த்து அதனுடன் ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் காஷ்மீரி மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு, மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது முட்டை சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பொரித்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிய பிறகு தயிர் சில்லி சாஸ் தக்காளி சாஸ் உப்பு சேர்த்து நன்றாக கிளறி பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடத்திற்கு கிளறி எடுத்தால் சுவையான அப்போலோ சிக்கன் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : கச்சிதமான காக்கிநாடா சிக்கன் கிரேவி ஒரு தரம் இப்படி காரசாரமான ருசியில் செஞ்சி பாருங்க!