- Prep
- 20 min
- Cook
- 40 min
- Total
- 1h
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
நமது அன்றாட வாழ்க்கையில் நாம் சாப்பிடும் உணவுகளில் கண்டிப்பாக ஒரு முறையாவது இனிப்பை சுவைத்து விடாமல் அந்த நாள் முடிவதில்லை. அந்த அளவுக்கு இனிப்பு பொருட்கள் முடிவதில்லை. வாழ்வோடு ஒன்றிணைந்து வருகிறது. எந்தவித நல்ல காரியங்களும் மற்றும் சுப நிகழ்ச்சிகளும் நடந்தாலும் இனிப்பில்லாமல் அந்த நிகழ்ச்சி நடக்காது. ஆம் நாம் பொதுவாக இனிப்பு உணவுகளை நாம் கடைகளில் சென்று தான் வாங்கி சாப்பிடுவோம்.
இதையும் படியுங்கள் : தேவாமிர்தம் போல் லட்டு செய்வது எப்படி ?
ஆனால் இனிப்பு சாப்பிடுவதற்கு கடைகளில் தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் ஏதுமில்லை. நாம் நம் வீட்டிலேயே இனிப்ப உணவுகள் செய்து சாப்பிடலாமா அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது தித்திக்கும் சுவையுடன் அரிசி அல்வா செய்வது எப்படி, தேவையான பொருட்கள், செய்முறை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.
English Overview: arisi halwa is one of the most important sweet in south india. arisi halwa recipe or aridi halwa seivathu eppadi or arisi helwa recipe in Tamil are a few important terms to describe this recipe in the tamil.
Ingredients
Method
முதலில் அல்வா செய்வதற்காக அரைக்கப் பச்சரிசியை ஒரு பவுளில் எடுத்துக் கொண்டு தேவையா அளவு தண்ணீர் ஊற்றி இரண்டு முறை நன்கு அலசி கொள்ளுங்கள். அதன் பிறகு சிறு தண்ணீர் சேர்த்து அரிசியை இரண்டு மணி நேரங்கள் நன்றாக ஊற வைத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு துருவிய வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பை பற்ற வைத்துக் கொள்ளுங்கள். பின்பு இந்த வெள்ளத்துடன் அரைக்கப் தண்ணீர் சேர்த்து வெள்ளம் உருகி பாகு போல் வரும் வரை நன்றாக கிளறி விடுங்கள்.
பின் வெல்லம் உருகி வெல்ல பாகு மாறியதும் அல்வா செய்ய வைத்திருக்கும் கடாயில் அரிப்பை வைத்து வடிகட்டி ஊற்றிக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தாளிப்பு கரண்டியில் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றி அதில் 10 முந்திரி பருப்பை உடைத்து சேர்த்துக் கொள்ளுங்கள்.
பின்பு முந்திரி பருப்பு பொன்னிறமாக வரும் வரை நன்றாக வறுத்து எடுத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு பச்சரிசி 2 மணி நேரம் தண்ணீரில் நன்கு ஊறியதும் அதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறு தண்ணீர் ஊற்றி நன்றாக மை போல் அரைத்துக் கொள்ளுங்கள்.
பின் நாம் வெல்ல பாகு வைத்திருக்கும் கடாயை அடுப்பில் வைத்து அதனுடன் ஒன்றரை கப் தேங்காய் பால் சேர்த்து, அதனுடன் அரைத்து வைத்த அரிசிமாவையும் சேர்த்து கடைசியாக, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருந்தால்.
நீங்கள் எவ்வளவு கிளறி விட்டுக் கொண்டே இருக்கிறீர்களோ அவ்வளவு வேகமாக அல்வா தயாராகும். அல்வா ஒரு பத்து நிமிடம் கழித்து கடாயில் ஒட்டாமல் அல்வா பதத்திற்கு வந்த பின் அதனுடன் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்து மறுபடியும் கிளறி விடுங்கள்.
இப்படியே 20 நிமிடம் நன்றாக கிளறி விட்டு அதன் பின் இதனுடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் தூளும் மற்றும் நாம வறுத்து வைந்ந முந்திரி பருப்புகளையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் நன்றாக கிளறி விட்டு இறக்கி விடுங்கள் அவ்வளவுதான் சுவையான அரிசி அல்வா இனிய தயாராகி விட்டது.






