- Prep
- 5 min
- Cook
- 15 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
விநாயகர் குழந்தை வடிவமானவர். அவருக்கு விருப்பமான உணவுகளை படைத்து வழிபட்டாலே ஓடி வந்து அருள் செய்யக் கூடியவர். விநாயகருக்கு பலகாரங்கள் என்றால் அலாதி பிரியம். எனவே விநாயகர் சதுர்த்தியன்று வித விதமான பலகாரங்களை தயாரித்து விநாயகருக்கு படைப்போம். விநாயகருக்கு கொழுக்கட்டை என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் கொழுக்கட்டை மட்டும் பிடித்தமான உணவு பொருள் இல்லை. விநாயகருக்கு பிடித்தமான உணவுகள் பல உண்டு. விநாயகப் பெருமானுக்கு கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை மிகவும் விருப்பமான உணவுகளாக சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த பதிவில் விநாயகருக்கு மிகவும் பிடித்தமான அரிசி பாயாசம் எப்படி செய்வதென்று பார்ப்போம்.
பொதுவா நம்முடைய வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தால் நாம் கேசரி செய்வோம் இல்லையென்றால் பால் பாயாசம் செய்வோம். ஆனால் சட்டுன்னு ஏதாவது ஒரு ஸ்வீட் செய்யணும்னா வீட்டில் பச்சரிசி இருந்தால் அதை வைத்து அரிசி பாயாசம் செய்யுங்கள். இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் வீட்டில் செய்து சாப்பிடும் இனிப்புகள் என்றால் அது ஒரு தனி அனுபவம்தான். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய அரிசி பாயாசம். இது சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. இந்த பாயாசத்தை விஷேச தினங்களில் மட்டும் செய்யாமல் நமக்கு தோன்றும் போதெல்லாம் செய்து கொள்ளலாம்.
வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தால் கூட இந்த ரெசிபியை செஞ்சு கொடுக்கலாம். பள்ளி விட்டு வர குழந்தைகளுக்கு ஏதாவது இனிப்பா ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்கணும்னா ஆசைப்பட்டால் கூட இந்த பாயாசத்தை ட்ரை பண்ணி பாருங்கள். இந்த ரெசிபியை ஒரு தடவை செஞ்சு பாருங்கள் அதுக்கப்புறம் உங்க வீட்ல அடிக்கடி இந்த அரிசி பாயாசம் ரெசிபி இருக்கும் அந்த அளவுக்கு இந்த அரசி பாயாசம் சூப்பரா இருக்கும். இப்போது வாருங்கள் எல்லா குழந்தைகளுக்கும் பெரியவங்களுக்கும் ரொம்ப ரொம்ப பிடிச்ச மாதிரியான ஸ்வீட் ரெசிபியான அரிசி பாயாசம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : நேந்திர வாழைப்பழ பாயாசம்
Ingredients
Method
முதலில் அரிசியை நன்கு அலசி ஒரு துணியில் காய வைத்து, பின் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து அரைத்த அரிசி மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு வேக விடவும்.
பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் முந்திரி, திராட்சை, தேங்காய் சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெல்லம் மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு பாகு காய்ச்சி அதனை அரிசியில் சேர்த்து பத்து நிமிடங்கள் வேக விடவும்.
பின் வறுத்த முந்திரி, திராட்சை, தேங்காய் மற்றும் ஏலக்காய் தூள் எல்லாம் சேர்ந்து நன்கு கலந்து ஐந்து நிமிடங்கள் கழித்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான அரிசி பாயாசம் தயார்.






