பொங்கலில் பலவகை உண்டு. அதில் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல், மிளகு பொங்கல், மற்றும் புளி பொங்கல் குறிப்பிடத்தக்கது. அதில் இன்று நாம் இங்கு காண இருப்பது அவல் வெண்பொங்கல். வெண்பொங்கல் தென்னிந்தியாவின் பாரம்பரியமான ஒரு உணவு வகை. இதை பெரும்பாலும் விசேஷ நாட்களில் அவரவர் வீடுகளில் மக்கள் காலை நேர டிஃபனாக செய்து உண்கிறார்கள்.
குறிப்பாக பொங்கல் பண்டிகையன்று வெண்பொங்கல் அல்லது சர்க்கரைப் பொங்கல் கட்டாயம் தென்னிந்தியாவில் உள்ள பெரும்பாலானோர் இல்லங்களில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும். இவை பெரும்பாலும் சாம்பார் மற்றும் தேங்காய் சட்னியோடு சேர்த்துதான் பரிமாற படுகிறது. வெண்பொங்கலோடு மெது வடை காம்பினேஷன் தென்னிந்தியா முழுவதும்படு ஃபேமஸ். இந்த காம்பினேஷன்க்கு என்று ஒரு தனி கூட்டம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் உண்டு.
அவல் வெண்பொங்கல் | Aval Venpongal
Equipment
- 1 கடாய்
- 1 பவுள்
- 1 கரண்டி
தேவையான பொருட்கள்
- 1 1/2 கப் வெள்ளை அவல்
- 1/2 கப் பாசிப்பருப்பு
- 1/2 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- 10 முந்திரி
- 1/2 டீஸ்பூன் நறுக்கிய இஞ்சி
- 2 டேபிள் ஸ்பூன் நெய்
- கறிவேப்பிலை சிறிதளவு
- உப்பு தேவையானஅளவு
செய்முறை
- முதலில் பயத்தம்பருப்பு அல்லது பாசிப்பருப்பை நன்கு வேக வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் மெல்லிசான அவலை எடுத்து தண்ணீரில் நன்றாக கழுகி கொஞ்சம் தண்ணீருடன் அப்படியே 5 நிமிடம் ஊற விடவும்.
- அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றி மிளகு, சீரகம், இஞ்சி, முந்திரி சேர்த்து வறுக்கவும்.
- அத்துடன் கருவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே வாணலியில் பயத்தம் பருப்பு, மற்றும் தேவையான உப்பு சேர்த்து கிளறிய பிறகு ஊற வைத்த அவல் சேர்த்து நன்றாக கிளறி கலந்து விடவும். அவல் நன்றாக ஊறி பஞ்சு போல் இருக்கும்.
- இப்பொழுது அருமையான அவல் பொங்கல் தயார். கட்டியாக இருந்தால் கொஞ்சம் சுடு தண்ணீர் ஊற்றி கலந்துக்கவும்.
- பொங்கல் குழைவாக இருந்தால் தான் நன்றாக இருக்கும். அத்துடன் வறுத்து வைத்திருக்கும் தாளிப்பு சேர்க்கவும்.
- சுவையான அவல் பொங்கல் தயார். அருமையான சுவையுடன் கூடின அவல் பொங்கலை 10 நிமிடத்தில் செய்து முடித்து விடலாம்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான ரோட்டு கடை வெண்பொங்கல் ரகசியம் இது தான்! காலை உணவுக்கு இப்படி செய்து பாருங்க!!