படுக்கை அறையில் இந்த நிற பெயின்ட் இருந்தால் திருமண வாழ்க்கையில் பிரச்சனையே வராதம்!

- Advertisement -

பொதுவாக நாம் ஒரு வீடு கட்டும்போது அந்த வீட்டிற்கு என்ன விதமான கலரில் பெயிண்ட் அடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து வைத்திருப்போம். குறிப்பாக ஒவ்வொரு அறைக்கும் நாம் ஒவ்வொரு விதமான நிறத்திலோ அல்லது ஒரே நிறத்திலோ பெயிண்ட் அடிக்க விரும்புவோம் அது ஒவ்வொருவரின் எண்ணத்தை பொறுத்தது. ஒவ்வொரு நிறத்திற்கும் ஒவ்வொரு அறிவியல் சார்ந்த காரணங்கள் உண்டு. அந்த வகையில் வெள்ளை நிறம் என்பது மன அமைதியையும் தூய்மையையும் குறிக்கும். ஒரு சில நிறங்கள் நம்மை எரிச்சல் ஊட்ட வைக்கும் ஆனால் ஒரு சில நிறங்கள் நம் மனதை அமைதிப்படுத்தும். அறிவியல் பூர்வமாக ஒவ்வொரு நிறத்திற்கும் ஒரு காரணம் உண்டு. வாஸ்து சாஸ்திரத்தின் படி நாம் வீட்டில் அடிக்கும் சில வண்ணங்களால் நமக்கு நன்மைகளும் வந்து சேரும் தீமைகளும் வந்து சேரும். எனவே நம் வீட்டில் மிகவும் முக்கியமான நாம் ஓய்வெடுக்கக்கூடிய பெட்ரூமில் இருக்க வேண்டிய ஐந்து வாஸ்து நிறங்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

பெட்ரூம் மேல் இருக்க வேண்டிய ஐந்து வாஸ்து நிறங்கள்

பெட்ரூமில் வெள்ளை நிறத்தால் பெயிண்ட் அடிப்பது பலவிதமான நன்மைகளை நமக்கு கொடுக்கும். பொதுவாக வெள்ளை நிறம் என்பது தூய்மையையும் மன அமைதியையும் குறிக்கும். எனவே கணவன் மனைவிக்குள் ஏதேனும் சண்டை இருந்தால் கண்டிப்பாக அனைத்தும் சரியாகிவிடும். திருமண வாழ்க்கையில் நன்மைகளே நமக்கு உண்டாகும்.

- Advertisement -

பெட்ரூமில் பழுப்பு நிறத்தால் பெயிண்ட் அடித்திருந்தாலோ அல்லது பழுப்பு நிறத்தால் ஆன ஏதேனும் பொருட்களை வைத்திருந்தாலும் நிம்மதியாக ஓய்வெடுக்க முடியும் மற்றும் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவும் தாம்பத்திய வாழ்க்கையும் மிகவும் சிறப்பாக அமையும்.

பொதுவாக பெட்ரூமில் பச்சை நிறத்தால் பெயிண்ட் அடிப்பது பலருக்கு பிடிக்காது எனவே பச்சை நிறத்தாலான ஏதேனும் தாவரங்களையோ அல்லது பொருட்களையோ வாங்கி வைத்தால் அது மனதிற்கு நிம்மதியையும் நேர்மறையான எண்ணங்களையும் நமக்கு தரும்.

பொதுவாக அனைவருக்கும் பிடித்த ஒரு நிறம் என்றால் அது பிங்க் தான். ஒரு சிலர் என்ன பொருள் வாங்கினாலும் அதை பிங்க் நிறத்தில் தான் வாங்குவார்கள். இது அழகான ஒரு நிறமாக கருதப்படுகிறது. எனவே நம்முடைய பெட்ரூமில் பிங்க் நிறத்தாலான பெயிண்டும் நிறத்தால் ஆன பொருட்களும் இருந்தால் கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் ஏற்படும். எனவே பிங்க் நிறத்தையும் பெட்ரூமில் பயன்படுத்தலாம்.

-விளம்பரம்-

பிங்க் நிறத்தை போலவே நீல நிறமும் அனைவருக்கும் பிடித்த ஒரு நிறமாகும். நீல நிறத்தை நம் பெட்ரூமில் உபயோகிப்பதால் நேர்மறையான எண்ணங்களும், நேர்மறையான ஆற்றலும் அமைதியும் நிதானமும் நிலைக்கும்.

இதனையும் படியுங்கள் : உங்களால் திருப்பி கொடிக்க முடியாத கடன்‌ தீர்ந்து செல்வம் சேர இந்த 8 வாஸ்து குறிப்புகளை கட்டாயம் கடைபிடியுங்கள் போதும்!