- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast
நம்மில் பலர் உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைத்து பல முயற்சிகளை மேற்கொள்வது உண்டு. ஆனால் என்ன செய்தாலும், எடை குறைந்தபாடு இல்லை என சிலருக்கு சலிப்பு தட்டக்கூடும். அவர்கள் உடற்பயிற்சி மேற்கொள்வார்கள், ஆனால் நல்ல உணவு முறைகளை பின்பற்ற தவறுவதால், உடல் எடை குறைய தாமதம் ஏற்படும். உடல் எடையை குறைக்க உடற்பயிற்சிகளோடு நல்ல ஆரோக்கியமான உணவை பின்பற்ற வேண்டும். கல்சியம், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
அந்த வகையில், உடல் எடையை குறைக்க நினைப்பவர்களின் டயட்டில் சேர்க்க வேண்டிய ஒரு உணவு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். காலையில் உணவு உண்பது மிகவும் முக்கியமாகும். இந்த காலை உணவை தோசை இட்லி என செய்து அதிகமாக சாப்பிடுவார்கள். தோசை பல வகையாக செய்யப்படும். ஆனால் இவை ஆரோக்க்கியத்தில் சிறந்ததா? என கேட்டால் ஆரோக்கியத்தில் சிறந்த தோசை என்றால் அதில் பல சத்து பொருட்கள் சேர்க்கப்பட வேண்டும். அப்படியான ஒரு ரெசிபி தான் அடை. பீட்ரூட் சேர்த்து அடை எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
இந்த அடை தோசை மிகவும் சுவையாக இருப்பதோடு, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும். இந்த இன்ஸ்டன்ட் அடை தோசைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி போன்றவை பிரமாதமாக இருக்கும். முக்கியமாக இந்த அடை தோசை வீட்டில் உள்ள சில பொருட்களைக் கொண்டே 10 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு மிகவும் சுலபமாக இருக்கும். இப்போது ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் அடை எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : காலை டிபனுக்கு சூப்பரான பீட்ரூட் இடியாப்பம் ஒரு முறை இப்படி வீட்டில் செஞ்சி பாருங்கள்!
Ingredients
Method
முதலில் பெரிய வெங்காயம், இஞ்சி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பீட்ரூட்டை வேகவைத்து, பின் அதனை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பவுளில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகம், ஓமம் மற்றும் நாம் நறுக்கி வைத்துள்ளதை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் அரைத்து வைத்துள்ள பீட்ரூட் விழுதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
ஒரு தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் ஒரு கரண்டி மாவை அடையாக வார்த்து சுற்றி நெய் விட்டு எடுக்கவும். அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான பீட்ரூட் அடை தயார்.






