குடிபோதையை குறைக்க உதவும் நம் வீட்டில் இருக்கும் அற்புத மூலிகை விதை!

- Advertisement -

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாதுன்னு சொல்வாங்க. அந்த அளவுக்கு வீரியம் உள்ளது கடுகு. தமிழர்களோட அன்றாட சமையல்ல கடுகு நிச்சயமா இருக்கும். அஞ்சறைப்பெட்டியில இருக்கக் கூடிய இந்தக் கடுகை சமையல்ல வேற எதுக்கும் பயன்படுத்துறோமோ, இல்லையோ தாளிக்கிறதுக்காக நிச்சயமா பயன்படுத்துவோம். கடுகை துவையல் செஞ்சி சாப்பிடலாம். வெறும் கடுகா இல்லாம புளி, உளுந்து, தேங்காய் சேர்த்து எல்லாத்தையும் வறுத்து துவையல் செஞ்சி சாப்பிட்டா செரிமானக்கோளாறுகள் சரியாகும். அதேமாதிரி கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் பருமனைக் குறைக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கக்கூடிய தன்மையும் கடுகுக்கு இருக்கு.

-விளம்பரம்-

சத்துகள் நிறைந்தது

கடுகுல வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய இருக்கு. கடுகை எதாவது ஒரு வகையில ரத்த சர்க்கரை அளவைக் குறைக்கிறதோட நோய்த்தொற்று பாதிப்புகள்ல இருந்து பாதுகாக்கும். தோல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. முக்கியமா முகப்பரு பிரச்சினைகளை சரிபண்றதுக்கு கடுகு ரொம்பவே உதவியா இருக்கும். ஒற்றைத்தலைவலி பிரச்சினைகள்ல இருந்து நிவாரணம் தரக்கூடியது கடுகு. எலும்பு, பற்கள், ஈறுகளை வலுப்படுத்தவும் கடுகு உதவியா இருக்கும். நகம், முடியை வலுப்படுத்துறதுக்கும் கடுகு ரொம்பவே நல்லது.

- Advertisement -

செரிமானக்கோளாறு

கடுகை துவையல் செய்ற மாதிரி சட்னி செஞ்சும் சாப்பிடலாம். வழக்கமா நாம செய்யக்கூடிய தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, வேர்க்கடலை சட்னி மாதிரியே இதையும் செய்யலாம். வரமிளகாய், கருவேப்பிலை, தோல் உரிச்ச பூண்டுப்பல், நெல்லிக்காய் அளவு புளி, துருவுன தேங்காய் 4 டேபிள் ஸ்பூன் சேர்த்து அரைச்சி உப்பு சேர்த்து தாளிச்சி சாப்பிடலாம். கடுகோட கசப்பு தெரிஞ்சா கொஞ்சமா வெல்லம் சேர்த்துக்கிடலாம். ஏற்கெனவே சொன்னமாதிரி செரிமானக்கோளாறு உள்பட பல பிரச்சினைகளை சரிபண்ணும்.

வலி, வீக்கம் குறைக்கும்

வலி, வீக்கத்தைக் குறைக்கிறதுக்கு கடுகு நல்ல மருந்து. முக்கியமா மூட்டு வலி உள்ளவங்க கடுகுகூட கொஞ்சமா தண்ணி விட்டு அரைச்சு வலி உள்ள இடத்துல பற்று போட்டுட்டு வந்தா வலி சரியாகும். ஆனா, வலி சரியானதும் கடுகுப் பற்றை கழுவிடணும். இதே மாதிரி கடுகை அரைச்சு தண்ணி சேர்த்து கொதிக்க வச்சி பற்று போடலாம். ஆனா இந்த மருத்துவத்தை செய்யும்போது கவனமா இருக்கணும். அதாவது வலி இல்லாத இடத்துல பற்று போட்டா அந்த இடம் வெந்து போயிரும். அதனால கவனமா இருக்கணும்.

ஜன்னி, இழுப்பு நோயை விரட்டும்

சிலபேருக்கு ஜன்னி வந்து கை-கால் இழுத்துட்டுப் போனா கடுகை வச்சி ஒரு மருந்து தயாரிக்கலாம். அது எப்படின்னா… முருங்கப்பட்டை கைப்பிடி அளவு எடுத்து அதே அளவு கடுகை எடுத்து அதோட சேர்த்து அரைக்கணும். அதை நோயாளியோட ரெண்டு உள்ளங்கையில அடை மாதிரி வச்சி கட்டணும். கொஞ்ச நேரத்துல ஜன்னியும், இழுப்பும் சரியாயிடும். சரியானதும் அடையை எடுத்துடணும். ஜன்னி, இழுப்பு நோய்களுக்கு இது ரொம்ப சாதாரணமா செய்யக்கூடிய வைத்தியம். இதே மாதிரி கடுகு, முருங்கப்பட்டை, வெள்ளைப்பூண்டு, இஞ்சி எல்லாத்தையும் சம அளவு எடுத்து நைசா அரைச்சு கை கால் பெருவிரல்ல கனமா வச்சி கட்டுனா ஜன்னி இறங்கிரும். ஜன்னி இறங்குனதும் கடுகுப் பற்றை எடுத்திடுறது நல்லது. இதே மாதிரி நிறைய நோய்களை சரி பண்றதுக்கு கடுகை பயன்படுத்துறாங்க.

-விளம்பரம்-

குடி போதையை குறைக்கும்

இன்னைக்கு சூழல்ல குடிபோதைக்கு அடிமையான பல பேர் இருக்காங்க. இந்தமாதிரி குடிபோதைக்கு அடிமையானவங்களுக்கு கடுகு தண்ணி சேர்த்து அரைச்சு குடிக்கக் கொடுக்கணும். கடுகு உள்ள போனதும் வாந்தி எடுப்பாங்க. வாந்தியோட மதுவும் வெளியேறும். இதனால போதை இறங்கிரும். இந்த மாதிரி செஞ்சிட்டு வந்தா போதை ஆசாமிகளுக்கு மதுபானம்மேல விருப்பம் இல்லாமப் போயிரும். விஷம் குடிச்சவங்களுக்கும் இதே மாதிரி கடுகை அரைச்சி குடிக்கக் கொடுத்தா வாந்தி எடுக்கும். விஷம் வெளியே வந்திரும். இதை ஒரு முதலுதவி மாதிரி செய்யலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here