நம் உடலில் பலபல அற்புதங்கள் புரியும் உருளைக்கிழங்கின் மகத்துவம் பற்றி தெரியுமா ?

- Advertisement -

உருளைக்கிழங்கு….சின்னப்பசங்கள்ல இருந்து பெரியவங்க வரைக்கும் பலபேருக்கு ரொம்ப பிடிச்ச உணவுகள்ல இதுவும் ஒண்ணு. அரிசி, கோதுமைக்கு அடுத்ததா உருளைக்கிழங்கைத்தான் அதிகமா சாப்பிடுறதா ஒரு ஆய்வுல தெரியவந்திருக்கு. இன்னைக்கும் வடமாநிலத்தைச் சேர்ந்தவங்க உருளைக்கிழங்கைத்தான் குழம்பு, கூட்டுன்னு சமைச்சி சாப்பிடுறாங்க. எல்லா சூழல்லயும் வளரக்கூடிய உருளைக்கிழங்குல புரதச்சத்து, கொழுப்புச்சத்து, நார்ச்சத்து மட்டுமில்லாம கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, தாது உப்புகள், கார்போஹைட்ரேட் எல்லாம் இருக்கு.

-விளம்பரம்-

உருளைக்கிழங்கின் ருசி

பொதுவா கிழங்குன்னாலே அது வாய்வை உண்டாக்கும், வாத நோயை வரவழைக்கும்னு சொல்லி நம்மள்ல பலபேர் ஒதுக்கி வைப்போம். ஆனாலும் அதையும் மீறி உருளைக்கிழங்கைச் சாப்பிடுறவங்க பலபேர் இருக்காங்க. பல வீடுகள்ல உருளைக்கிழங்கு இல்லாம கறிக்குழம்பு ருசிக்காது. அதேமாதிரிதான் சாம்பார், புளிக்குழம்பு, கூட்டு, பொரியல்னு எல்லாத்துலயும் உருளைக்கிழங்கு இருக்கும். காரணம் உருளைக்கிழங்கின் ருசி அப்படி. இஞ்சி, பூண்டு சேர்த்து சமைக்கிறதோட உருளைக்கிழங்கு சாப்பிட்ட பிறகு ஓமம், வெற்றிலை சாப்பிட்டா பிரச்சினை ஏதும் வராது. புதினாவை துவையல், ஜூஸ் செஞ்சி சாப்பிட்டு வந்தாலும் வாய்வுத்தொல்லை உண்டாகாம பார்த்துக்கிடலாம். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சா மாறும்கிறதை புரிஞ்சிக்கிட்டு அளவோட சாப்பிட்டு வந்தா எந்தப்பிரச்சினையும் வராது.

- Advertisement -

உடல் எடை அதிகரிக்கும்

வளர்ற குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை நல்லா வேக வச்சி அப்பப்போ கொடுத்துட்டு வந்தா உடல் பலம் அதிகமாகும். ரெண்டு வயசு ஆனதும் வெறும் உருளைக்கிழங்கை மட்டும் வேக வச்சி மசிச்சி கொடுப்பாங்க. கொஞ்சம் வளர்ந்து பெரிய குழந்தைகளா ஆனதும் நெய் விட்டு வதக்கி, மிளகுத்தூள், உப்பு சேர்த்துக் கொடுத்துட்டு வந்தா நல்லது. இந்த மாதிரி கொடுத்துட்டு வந்தா நல்லா ஊட்டம் கிடைக்கும். கார்போஹைட்ரேட் அதிகமாவும் புரதம் குறைவாவும் உள்ள உருளைக்கிழங்கை மெலிந்த தேகம் உள்ளவங்க சாப்பிடுறது நல்லது. உடல் எடையை அதிகரிக்க உருளைக்கிழங்கு நிச்சயம் உதவும்.

மொறுமொறு

சாப்பிட சுவையா இருக்கும்கிறதுக்காக சில குழந்தைங்க அதுக்கு அடிமைப்பட்டு தினமும் உருளைக்கிழங்கை கேட்டு அடம்பிடிப்பாங்க. அந்தமாதிரி சாப்பிடக்கூடிய சில குழந்தைகளுக்கு வாய்வுக்கோளாறு உண்டாக வாய்ப்பு இருக்கு. ஏன்னா, சிலபேர் உருளைக்கிழங்கு சிப்ஸ், வற்றல்னு நல்லா மொறுமொறுன்னு சாப்பிடுவாங்க. அதுமட்டுமில்லாம எண்ணெய் உணவுகளையும் உருளைக்கிழங்கையும் அடிக்கடி சாப்பிட்டுவந்தா ஆபத்துதான்.

இதய நோய்க்கு நல்லது

உருளைக்கிழங்குல பொட்டாசியம் சத்து அதிகம் இருக்கிறதால அது இதய நோயாளிகளுக்கும், ரத்தக்கொதிப்பு உள்ளவங்களுக்கும் ரொம்ப நல்லது. வயிற்றுக்கோளாறுகள், வயிற்றுப்புண், குடல் கோளாறுகள், இரைப்பைக் கோளாறுகள் உள்ளவங்களுக்கு உருளைக்கிழங்கு நல்ல உணவாவும், மருந்தாவும் செயல்படும். தோலோட உருளைக்கிழங்கை வேக வச்சி சாப்பிடுறது நல்லது. இந்தமாதிரி சாப்பிட்டா அதுல இரும்புச்சத்து அதிகமா இருக்கும். இதைச் சாப்பிட்டா உடல் நல்லா தளதளன்னு மாறும்.

-விளம்பரம்-

உருளை கட்லெட்

உருளைக்கிழங்குல எல்லோரும் விரும்பி சாப்பிடக்கூடிய கட்லெட் தயார் பண்ணலாம். முதல்ல உருளைக்கிழங்கையும் முட்டையையும் சேர்த்து வேக வச்சி எடுத்துக்கிடணும். அதோட நறுக்குன வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை, மிளகாய்த்தூள், கரம் மசாலா, பெருங்காயத்தூள், உப்பு எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்துப் பிசைஞ்சி பிரட் தூள்ல புரட்டி எடுத்து பொரிச்சி சாப்பிட்டா அவ்வளவு சுவையா இருக்கும். மாலைநேர சிற்றுண்டியா நம்ம வீடுகள்ல நாமே தயாரிச்சு சாப்பிட்டா தப்பில்லை. இதை கடைகள்ல சாப்பிட்டா அதோட வேற சில சுவையூட்டிகளை சேர்த்து நம்ம வயித்தைக் கெடுத்திருவாங்க, அதனால கவனம்.

அலர்ஜிக்கு நல்லது

உருளைக்கிழங்கை வேக வைக்காம பச்சையா மருத்துவத்துக்கு பயன்படுத்தலாம். கண்கள்ல வீக்கம் வந்தாலோ, முகம் வீங்கின மாதிரியோ இருந்தா உருளைக்கிழங்கு சாறை அந்த இடத்துல தடவுனா பிரச்சினை சரியாயிரும். பொடுகுத்தொல்லை இருக்கிறவங்க உருளைக்கிழங்கு சாறை தலையில தடவிட்டு வந்தா பலன் கிடைக்கும். சொறி, சிரங்கு, உடம்புல அலர்ஜி உண்டானா அந்த இடத்துல உருளைக்கிழங்கு சாறை தடவிட்டு வந்தா பலன் கிடைக்கும். இந்தமாதிரி உருளைக்கிழங்கும்கூட பல நோய்களை சரி பண்ணும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here