வேப்பிலையின் நன்மைகள் பற்றி தெரியுமா ? வாருங்கள் பார்க்கலாம்…

- Advertisement -

நம் முன்னோர்கள் முட்டாள்கள் இல்லை என்பதை ஒவ்வொரு காலகட்டங்களிலும் நமக்கு உணர்த்திக் கொண்டுதான் வருகிறார்கள். அவர்கள் செய்த ஒவ்வொரு காரியங்களுக்கும் பின்னும் பல அர்த்தங்கள் இருந்து கொண்டு வருகிறது. அதை அவர்கள் விளக்கி கூறாமல் சென்றது தான் தவறான விஷயம். உதாரணமாக – பருவமழை ஆரம்ப காலத்தில் நோய்கள் பரவும் தன்மை அதிகமாக இருக்கும் ஆகையால் அந்த நேரத்தில் சாமியின் பெயரை சொல்லி உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும் கூலையும், நோயை தவிர்க்கும் வேப்பிலைகளையும் வீடுகள் கோவில்கள் என அனைத்து இடங்களிலும் கட்டி வைத்தார்கள் பின்பு இதற்கு ஆடி திருவிழா என்று பெயரும் அமைத்தார்கள். இது போன்ற அவர்கள் ஒரு விஷயத்திற்கு பின்னால் பல அர்த்தம் வைத்துள்ளனர் இன்றைய பதிவில் நாம் வேப்பிலையின் மேலும் உள்ள நன்மைகளை பற்றி இந்த உடல்நல தொகுப்பில் பார்க்கலாம்.

செரிமான பிரச்சனைகள் :-

- Advertisement -

சிலர் எது சாப்பிட்டாலும் அந்த சாப்பாடு அவர்களுக்கு சரியாக செரிமானம் ஆகாமல் செரிமான பிரச்சனை இருக்கும் இவ்வாறு செரிமான பிரச்சனை இருக்கும் நபர்கள் வேப்பிலையின் சாறை எடுத்து தினசரி குடித்து வந்தால் செரிமான பிரச்சனை சரியாகிவிடும். மேலும் வேப்பிலை உள்ள ஆஸ்டரிஜென்ட் என்ற பொருள் நமக்கு வாயு பிரச்சனை வராமல் தடுக்கிறது. வயிறு வீக்கம் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் வேப்பிலை சாறு குடிப்பதன் மூலம் வராமல் தடுக்கலாம்.

காயங்கள் குணமாக :-

-விளம்பரம்-

உங்கள் கை, கால்களில், உடம்பில் எந்த பகுதியில் காயம் இருந்தாலும் வேப்பிலையை அரைத்து அந்த காயம் உள்ள இடத்தில் தடவி வந்தால் விரைவில் காயம் சரியாகிவிடும். மேலும் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் வாய்ப்புண், வயிற்றுப்புண், உள் உடலில் இருக்கும் காயங்கள் ஆறிவிடும். வேப்பிலையில் உள்ள பையோ ஆக்டி சேர்மங்கள் புதிய திசுக்கள் உருவாவதையும் சேதமடைந்த திசுக்களையும் சரி செய்வதும் போன்ற வேலைகளையும் வேப்பிலை செயகிறது.

இரத்ததை சுத்தம் செய்கிறது :-

வேப்பிலையில் இயல்பாகவே கிருமிகள் நீக்கும் சக்தி இருக்கிறது. அதனால் வேப்பிலை சாற்றை தினம் ஒரு டம்பளர் குடித்து வந்தால் நம் உடலில் இருக்கும் நச்சுக்கள் எல்லாம் நீக்கி ரத்தத்தை சுத்தப்படுத்தி புதிய ரத்த செல்களை உருவாக்கும்.

சக்கரை நோய் மற்றும் சரும பிரச்சனைகள் :-

வேப்பிலை சாற்றில் இயற்கையாகுவ இருக்கும் கசப்பான தன்மை மூலம் சக்கரின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும். ஆக சர்க்கரை நோய் உள்ளவர்கள் வேப்பிலை சாற்றை குடித்து வந்தால் சர்க்கரை அளவை குறைக்கலாம். மேலும் வேப்பிலையை அரைத்து சருமத்தில் பூசி கொள்வதன் மூலம் நம் சருமங்களில் உண்டாகும் பருக்களை, கொப்பளங்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை முற்றிலும் நீக்கி சருமத்தை பொலிவுடன் தரும் மேலும் சரும பிரச்சனைகளும் இதனால் குணமாகும்.

நோய் எதிர்ப்பு சக்தி :-

நம் உடலில் ஏற்படும் சிறு சிறு நோய்களுக்கு காரணமாக இருப்பது பாக்டீரியா, புஞ்சை, வைரஸ் போன்றவை தான். அதை எதிர்த்து போராடும் நோய் எதிர்ப்பு சக்தியை நம் உடலுக்கு அதிக அளவில் தருவதற்கு வேப்பிலை நமக்கு பெரிதும் உதவியாக உள்ளது. ஆனால் நம் உடலில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அளவையும் அதிகரிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here