உடலில் இந்த 7 அறிகுறிகள் வந்தால் உடனடியாக மருத்துவரை சந்தியுங்கள்….

- Advertisement -

நாம் வைத்திருக்கும் மோட்டார் சைக்கிளில் பெட்ரோல் தீர்வதற்கு முன்னர் நம்ம மோட்டார்சைக்கிள் ரிசர்வ் விழுவது மற்றும் ஸ்பீடா மீட்டரில் லைட் எரிவது போன்று பெட்ரோல் தீரப் போகிறது என்பதை நமக்கு மோட்டார் சைக்கிள் அறிவுறுத்தும். அது போன்று தான் நம் உடல் நலக் கோளாறுகளை நமக்கு நம்முடைய உடல் சில அறிகுறிகளாக வெளி காட்டவும். அதில் சிலவற்றை நாம் கண்டு காணாமலும் இருந்து விடுகிறோம் இந்த அறிகுறிகளுக்கும் நம் உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கும் சம்பந்தமில்லை என்று நினைத்துக் கொண்டு விடுகிறோம். ஆனால் இது போன்ற விஷயங்களில் கவன குறைவாக இருப்பது மிகவும் தவறான விஷயம். அப்படி நாம் சாதாரண பிரச்சனைகளாக கடந்து போகக்கூடாத சில உடல் நல அறிகுறிகளை இப்போது இந்த உடல் நலம் குறித்த தொகுப்பில் காணலாம்.

-விளம்பரம்-

தீடீர் என உடல் எடை குறைவது :-

- Advertisement -

நாம் எப்பொழுதுமே கட்டுமஸ்தான உடல்லோடுதான் இருக்க விரும்புவோம் அதனால் டயட் இருப்பது, உடற்பயிற்சி செய்வது, ஜிம் செல்வது என உடலில் உள்ள கொழுப்பு சத்துக்களை குறைக்க எல்லா வழிகளிலும் முயற்சி செய்து கொண்டுதான் இருப்போம். ஆனால் இது போன்ற நாம் உடல் எடை குறைப்பதற்கு எதுவும் செய்யாமலே திடீரென உடல் எடை வேகமாக குறைவது. இது உடல் நமக்கு அறிவுறுத்தும் ஒரு அறிவுரை திடீரென உடல் எடை குறைவதால் தைராய்டு, மன அழுத்தம், நீரிழிவு, கல்லீரல் நோய்கள் போன்றவற்றின் ஏதாவது ஒரு அறிகுறியாக இருக்கலாம். ஆகையால் திடீரென எடை குறைதல் பிரச்சனையை ஏற்படுமாயின் உடனடியாக மருத்துவரை சந்தித்து அதற்கு தீர்வு காண வேண்டும்.

அடிக்கடி காய்ச்சல் வருவது :-

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த கொரோனா காலகட்டத்தில் நமக்கு காய்ச்சல் இருந்தால் எவ்வளவு பயந்து உடனே மருத்துவரை சந்தித்து சாதாரணமான காய்ச்சலா இல்லை கொரனா சம்பந்தப்பட்ட காய்ச்சலா என தீர்வு காண நினைத்தோம். ஆனால் மற்ற சமயங்களில் அடிக்கடி உடலில் வெப்பநிலை உயர்ந்து கொண்டிருக்கும்போது அதை சாதாரணமாக கடந்து சென்று கொண்டிருந்தோம். அப்படி உங்கள் உடலில் வெப்பநிலை அடிக்கடி உயர்வது கூட உடல் நல கோளாறு ஒரு அறிகுறி. ஆம் அடிக்கடி வெப்பநிலை உயர்வதால் மூச்சு குழல் தொடர்பான நோய்கள் புற்றுநோய் போன்றவர்களின் அறிகுறியாக கூட அது இருக்கலாம். ஆகையால் வெப்பநிலை அடிக்கடி உயர்ந்தால் மருத்துவரை சந்தித்து தீர்வு காணுங்கள்.

-விளம்பரம்-

குறுகிய மூச்சு பிரச்சனை :-

அதிகப்படியான உடல் எடை, அதிக அளவுக்கு அதிகமாக உடற்பயிற்சி செய்வது, உடல் பருமனாக இருப்பது போன்ற காரணங்களின் மூலமாக கூறி குறுகிய மூச்சுப் பிரச்சினை ஏற்படும். இது சாதாரணமாக உடல் பருமனான இருப்பவர்களுக்கு இருக்கக்கூடிய ஒரு விஷயம் தான். குறிகிய மூச்சு பிரச்சனையை என்பதை ஷார்ட்ஸ் ஆப் ஃபிரீத் என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள். அதையும் தாண்டி இந்த பிரச்சனை ஏற்பட்டால் அது நிச்சயம் உடல் நலக்கோளாறின் ஒரு
அறிகுறியாக இருக்கலாம். ஆம் குறுகியமூச்சு தொண்டைக் குழாய் அலர்ஜி, ஆஸ்துமா, நுரையீரல் ரத்தம் உறைந்து போவது போன்ற பிரச்சனைகளுக்கு அறிகுறிகளாக இருக்கும். ஆகையால் குறுகிய மூச்சுப் பிரச்சினை இருந்தாலும் உடனடியாக டாக்டரை சந்தித்து தீர்வு காணுங்கள்.

வயிற்று கோளாறு :-

-விளம்பரம்-

அஜீரணக்கோளாறு, வயிறு உபாதைகள் வயிறு கடமுடாவென்று இருப்பது இது போன்ற பிரச்சனைகள் நம் சாப்பிடும் சாப்பாடு சரியில்லாத போதும் அதிக ஹோடடல் உணவு சாப்பிடும் போதும் இயல்பாக ஏற்படும் பிரச்சனைகள் தான் இது. ஆனால் அதையும் தாண்டி வயிற்று கோளாறுகள் இயற்கைக்கு மாறாக ஏற்பட்டாலோ அல்லது மலத்தின் வழி ரத்தம் வருவது கருப்பு மற்றும் ஏதேனும் வித்தியாசமான நிறத்தில் மலம் வருவது, மலச்சிக்கல் திடீரென்று வயிறு கடமுடாவென்று போன்றவை அடிக்கடி ஏற்பட்டால். இதுவும் உடல் கோளாறின் ஒரு அறிகுறிதான். வயிற்றில் பாக்டீரியா தொற்று இருப்பது அல்லது பெருங்குடல் புற்றுநோய் இருப்பது இருப்பது போன்ற பிரச்சனைகளை தெரியப்படுத்தும் ஒரு அறிகுறிகள் இதுபோன்று பிரச்சனை ஏற்பட்டாலும் உடனே மருத்துவரை சந்தித்து தீர்வு காணுங்கள்.

திடீர் ஞாபகமறதி :-

நாம் அவ்அவ்பொழுது ஏதாவது பொருள்களை எங்கையாவது வைத்துக் கொண்டு மறந்து விட்டு தேடிக் கொண்டிருப்போம். ஆனால் திடீர் ஞாபகம் மறதி, சிந்திப்பதில் திடீர் மாற்றம், நம் கவனம் நம்மிடம் இல்லாமல் எப்பொழுதும் எதையாவது சிந்தித்துக் கொண்டே இருப்பது. ஒரு சிந்தனை சிந்தித்துக் கொண்டிருக்கும் போது வேறு பல சிந்தனைகளை சிந்திப்பது, திடீரென்று கோபப்படுவது, திடீர் என்று சிரிப்பது, திடீரென்று மகிழ்ச்சியாக இருப்பது திடீரென கவலையாக இருப்பது இது போன்ற குணங்கள் வேறுபாடு உடல் நலக்கோளாரின் ஒரு அறிகுறிதான். இந்த அறிகுறிகள் தொற்று ஊட்டச்சத்து குறைபாடு மனநலக் குறைபாடு போன்ற பிரச்சனைகளை அறிகுறியாக கூட இருக்கலாம் ஆனால் இது போன்ற அறிகுறிகளும் தென்பட்டாலும் உடனே மருத்துவரை சந்தித்து தீர்வு காணுங்கள்.

வயிறு நிறைந்த உணர்வு :-

நீங்கள் எப்பொழுதும் உணவு சாப்பிடும் பொழுது நன்றாக சாப்பிட்டு வருகிறீர்கள். திடீரென கொஞ்சமாக சாப்பிட்டாலும் வயிறு நிறைந்தது போன்ற உணர்வு ஏற்பட்டால் அது சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள் அதுவும் உடல்நலக் கோளாரின் அறிகுறிதான். ஆம் இந்த அறிகுறி உடலில் வயிற்று பகுதியில் அமிலத்தன்மை அதிகமாக அதிகம் ஆவது. வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம் ஆகையால் இந்த அறிகுறிகள் இருந்தாலும் மருத்துவரை சந்தித்து உடனே தீர்வு காணுங்கள்.

கண்களில் திடீர் வெளிச்சம் :-

உங்களுக்கு கண்களில் திடீரென சில நேரங்களில் கண்களில் மின்னல் வெட்டுவது போல வெளிச்சங்கள் வந்துவிட்டு போகுது என்றால் எதுவும் உடல் நலக்கோளாறு தான். இந்த அறிகுறி தென்பட்டால் பார்வை கூட இழப்பதற்குகான ஒரு அறிகுறியாக கூட இருக்கலாம். அதனால் உடனே மருத்துவரை சந்தித்து இதற்கு தீர்வு காணுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here