Home அசைவம் கொஞ்சம் வித்தியாசமா கத்திரிக்காய் முட்டை வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

கொஞ்சம் வித்தியாசமா கத்திரிக்காய் முட்டை வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க!!

கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் கார குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய், கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் வறுவல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி கத்திரிக்காய் முட்டை வறுவல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. எப்பவுமே ஒரே மாதிரியா சமைச்சு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது சமையல்ல நம்ம முயற்சி செய்யணும் அந்த வகையில இந்த கத்திரிக்காய் முட்டை வறுவல் ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். நல்லா ஏதாவது காரக்குழம்பு சாம்பார் சாதம்னு கார சாரமா வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த வறுவலை செஞ்சி சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபி செய்றதுக்கு நமக்கு குறைவான நேரம் மட்டும்தான் தேவைப்படும். இதுக்கு நம்ம ஒரு மசாலாவும் வறுத்து அரைக்க போறோம் அந்த மசாலா சேர்க்கும்போது இன்னும் சூப்பராக இருக்கும். இந்த மசாலாவுக்கு நம்ம சேர்க்க போற பூண்டு அப்படியே தோல் உரிக்காமல் போடணும். தோல் உரித்து போட்டா அவ்வளவு நல்லா இருக்காது. இந்த டேஸ்டான சுவையான ரெசிபியை கண்டிப்பா உங்க வீட்ல எல்லாரும் ஒரு தடவை செஞ்சு பாருங்க. இத சைடு டிஷ் ஆக மட்டும் இல்லாம மெயின் டிஷ்ஷாவே வச்சு சாப்பிடலாம்.

சுடு சுடு சாதத்துல இந்த வறுவல் வச்சு மேல கொஞ்சமா நல்லெண்ணெய் இல்லன்னா நெய் விட்டு பிசைஞ்சு சாப்பிடுறதுக்கே ரொம்ப சூப்பரா இருக்கும். உங்களோட குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெசிபி கூட இந்த மாதிரி செஞ்சு வறுவலில் சாதத்தை போட்டு நல்லா கிளறி கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் விரும்பி சாப்டுட்டு டிபன் பாக்ஸ காலி ஆக்கிவிட்டுதான் வருவாங்க. இந்த டேஸ்டான ரெசிபியை கண்டிப்பா குழந்தைகளுக்கு ஒரு தடவை செஞ்சு கொடுங்க.

குழந்தைகள் மட்டுமில்லாமல் வீட்டில் இருக்கக் கூடிய எல்லாருமே இதை ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நம்ம பெருசா எந்த மசாலா பொருட்களும் சேர்க்க போறது இல்ல. ஒரே ஒரு மசாலா மட்டும் வறுத்து அரைச்சு தான் சேர்க்க போறோம் அதுவே அவ்ளோ ருசியா இருக்கும். அந்த மசாலாவை எல்லாம் கொரகொரப்பா அரைச்சு செய்ய போறோம் அதனால சாப்பிடறதுக்கே கொஞ்சம் வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான கத்திரிக்காய் முட்டை வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

Print
5 from 1 vote

கத்தரிக்காய் முட்டை வறுவல் | Brinjal Egg Fry Recipe In Tamil

கத்திரிக்காய் வச்சு கத்திரிக்காய் கார குழம்பு, எண்ணெய் கத்திரிக்காய், கத்திரிக்காய் புளி கூட்டு, கத்திரிக்காய் வறுவல் அப்படின்னு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி கத்திரிக்காய் முட்டை வறுவல் கண்டிப்பா இதுவரைக்கும் செஞ்சு பார்த்திருக்கவே மாட்டீங்க. எப்பவுமே ஒரே மாதிரியா சமைச்சு சாப்பிட்டு போர் அடிச்சு போச்சுன்னா கொஞ்சம் வித்தியாசமா ஏதாவது சமையல்ல நம்ம முயற்சி செய்யணும் அந்த வகையில இந்த கத்திரிக்காய் முட்டை வறுவல் ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். நல்லா ஏதாவது காரக்குழம்பு சாம்பார் சாதம்னு கார சாரமா வச்சு அதுக்கு சைடு டிஷ்ஷா இந்த வறுவலை செஞ்சி சாப்பிட்டால் அவ்வளவு ருசியா இருக்கும். ரொம்ப ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபி செய்றதுக்கு நமக்கு குறைவான நேரம் மட்டும் தான் தேவைப்படும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Brinjal Egg Fry
Yield: 4 People
Calories: 120kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி கத்தரிக்காய்
  • 3 முட்டை
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 3 பல் பூண்டு
  • 3 வர மிளகாய்
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு
  • 1 டீஸ்பூன் உளுந்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • 1 கொத்து கறிவேப்பிலை

செய்முறை

  • கத்திரிக்காயை சிறியதாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும்.
  • ஒரு கடாயில் மல்லி விதைகள் சீரகம் மிளகு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் பூண்டு அனைத்தும் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு கத்திரிக்காய் சேர்த்து மஞ்சள் தூள் உப்பு நன்றாக வதக்கவும்.
  • கத்திரிக்காய் பாதி‌ வெந்ததும் அரைத்து வைத்துள்ள பொடி, முட்டை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான கத்திரிக்காய் முட்டை வறுவல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 120kcal | Carbohydrates: 3.4g | Protein: 12.5g | Fat: 4.8g | Sodium: 81mg | Potassium: 130mg | Fiber: 7.4g | Vitamin A: 79IU | Vitamin C: 129mg | Calcium: 18mg | Iron: 14.7mg

இதனையும் படியுங்கள் : முட்டை போட்ட முட்டைக்கோஸ் சாதம் இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!

-விளம்பரம்-