உங்கள் வீட்டில் செல்வம் பெருகணுமா..? அப்போ துடைப்பத்தை இந்த திசையில் இப்படி வையுங்கள்!!

- Advertisement -

துடைப்பம் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய ஒரு பொருள் என மட்டும் நினைத்து அதை மதிப்பது கிடையாது. வாஸ்து சாஸ்திரத்தின் படி, துடைப்பம் அதிர்ஷ்டம் மற்றும் லட்சுமியின் வடிவமாக கருதப்படுகிறது. ஜோதிடத்தில் வாஸ்து சாஸ்திரத்தின் படி, நம்முடைய வீட்டின் அமைப்பு மட்டுமல்லாமல், நாம் வாங்கக்கூடிய பொருட்களை வைப்பது என அனைத்தும் இதன் அடிப்படையில் சரியான இடத்தில் வைப்பதும், சரியான நாளில் வைப்பதும் மிகவும் சிறப்பான பலனையும், மகாலட்சுமி தேவியின் அருளைத் தரக்கூடியதாக இருக்கும். எந்த நாளில் வீட்டிற்கான துடைப்பம் வாங்கலாம், எந்த நாளில் வாங்கக் கூடாது என தெரிந்து கொள்வோம்.

-விளம்பரம்-

துடைப்பம் வாங்க சிறந்த நாள்

புதிய துடைப்பம் வாங்க நினைப்பவர்கள், அதை சனிக்கிழமை அல்லது செவ்வாய் கிழமைகளில் வாங்குவது சிறந்தது. இதனால் உங்களுக்கு லட்சுமி தேவியின் நல்லருள் வாழ்வில் நிலைத்திருக்கும். துடைப்பம் சிறியதாக இருந்தால், அதை விரைவில் மாற்றவும். விளக்குமாறு நீளமாக இருந்தால் துடைப்பது எளிதாக இருக்கும். முதுகு வலி இருக்காது, பல நன்மைகள் கிடைக்கும்.

- Advertisement -

துடைப்பத்தை எந்த நாளில் வாங்க கூடாது

வாஸ்து சாஸ்திரப்படி திங்கட்கிழமை துடைப்பத்தை வாங்கக்கூடாது. இதனால் அந்த குடும்பத்தின் தன வரவு குறையும், பணம் வருவதற்கான வேலைகள் தடைப்படும். வீட்டில் எதிர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். கடன், செலவுகள் அதிகரிக்கலாம். இதனால் வாழ்க்கையில் பல பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.

வீட்டை துடைப்பத்தால் சுத்தம் செய்ய உகந்த நேரம் எது?

வாஸ்துபடி ஒரு வீட்டை பராமரிப்பதில் முக்கிய அம்சங்களில் ஒன்று தூய்மை மற்றும் சுகாதாரம், குறிப்பாக வழக்கமான துடைப்பதன் மூலம் நீங்கள் வீட்டின் செழிப்பை பராமரிக்கலாம். வீட்டை சுத்தம் செய்வதற்கு சரியான நேரம் காலை மற்றும் மாலை ஆகும். சூரிய உதயத்திற்கு சுமார் 1.5 மணி நேரத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்யலாம். வாஸ்து படி, இந்த காலகட்டத்தில் வீட்டை துடைப்பது வீட்டில் நேர்மறை ஆற்றல் ஓட்டத்தை அதிகரித்து அந்த நாள் முழுவதும் அமைதியான சூழலை உருவாக்குகிறது.

துடைப்பம் வைக்க சிறந்த இடம்

வீட்டில் ஈசானிய மூலை, அக்னி மூலை, நிருதி மூலை மற்றும் குபேர மூலை என நான்கு திசைகள் உள்ளன. ஆனால், தெற்கு மற்றும் மேற்கு இடையே துடைப்பத்தை வைப்பது மிகவும் பொருத்தமானதாக கருதப்படுகிறது. துடைப்பத்தின் முகம் எப்போதும் கிழக்கு நோக்கி வைப்பது அதிக பலன்களைத் தரும். இந்த திசையில் வைத்தால், அது வீட்டின் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சியை அழிப்பதோடு, வீட்டில் உள்ளோரின் முன்னேற்றத்தில் தடையை ஏற்படுத்தும். என்ன தான் துடைப்பம் லட்சுமி தேவியின் வடிவாக கருதப்பட்டாலும், அதை மதிப்புமிக்க பொருட்கள் வைக்கும் இடத்தில் வைக்கக்கூடாது. அப்படி வைத்தால், அது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

-விளம்பரம்-

துடைப்பம் வைக்கும் முறை

நம் வீட்டை கூட்டி சுத்தம் செய்யக்கூடிய வேலையை இந்த துடைப்பம் செய்கிறது. அந்த துடைப்பம் இல்லை என்றால் சுத்தம் இல்லை. ஆக இந்த துடைப்பத்திற்கு கொடுக்கக் கூடிய மரியாதையை நாம் கொடுக்க வேண்டும். அதனால் துடைப்பத்தை செங்குத்தாக நிற்க வைக்க கூடாது. அவ்வாறு வைத்தால் வீட்டில் எதிர்மறையான விளைவுகள் அதிகரிப்பதோடு வீட்டில் பணத்தை துடைத்துவிடுமாம். எனவேதான் துடைப்பத்தை எப்போதும் கால்படாத இடத்தில் படுத்த நிலையில் மறைத்தவாறு வைக்க வேண்டும் என்கிறார்கள்.

இதனையும் படியுங்கள் : வாஸ்து சாஸ்திரத்தின் படி கற்றாழையை வீட்டில் எந்த திசையில் வைத்தால் நல்லது என்று பார்க்கலாம்