Home அசைவம் பட்டர் கார்லிக் இறால் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

பட்டர் கார்லிக் இறால் இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

இறால் வச்சு 65 இறால் குழம்பு இறால் கிரேவி அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம் ஆனா இந்த இறால் வச்சு சூப்பரான பட்டன் கார்லிக் இறால் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே நீங்க இப்படி அடிக்கடி செய்வீங்க. பரோட்டா சப்பாத்தி இட்லி, தோசை சாதம் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் ஆ இந்த பட்டர் கார்லிக் இறால் இருக்கும். சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ஒரு ரெசிபி ரொம்பவே பிடிக்கும். இந்த ரெசிபி செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸி தான்.

-விளம்பரம்-

நீங்க இதுவரைக்கும் சாப்பிடாத டேஸ்ட்ல இந்த பட்டர் கார்லிக் இறால் இருக்கும். உங்க வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட அவங்களுக்கு எப்ப ஒரே மாதிரியான ரெசிபி செஞ்சு கொடுக்காம இந்த பட்டர் கார்லிக் இறால் செஞ்சு கொடுங்க கண்டிப்பா இதை சாப்பிட்டு இதை எப்படி செஞ்சீங்க அப்படின்னு உங்ககிட்ட ரெசிபி கேட்டுட்டு தான் போவாங்க அந்த அளவுக்கு இந்த ரெசிபி ரொம்ப சூப்பரான டேஸ்ட்ல இருக்கும். இப்ப வாங்க இந்த சூப்பரான பட்டர் கார்லிக் இறால் எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்

Print
No ratings yet

பட்டர் கார்லிக் இறால் | Butter Garlic Prawn In Tamil

இறால் வச்சு 65 இறால் குழம்பு இறால் கிரேவி அப்படின்னா எக்கச்சக்கமான ரெசிப்பிஸ் செஞ்சு சாப்பிடுவோம்ஆனா இந்த இறால் வச்சு சூப்பரான பட்டன் கார்லிக் இறால் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம்எப்பவுமே நீங்க இப்படி அடிக்கடி செய்வீங்க. பரோட்டா சப்பாத்தி இட்லி, தோசை சாதம் அப்படின்னுஎல்லாத்துக்குமே ஒரு பெர்பெக்ட்டான காம்பினேஷன் ஆ இந்த பட்டர் கார்லிக் இறால் இருக்கும்.சின்ன குழந்தைகள் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே இந்த ஒரு ரெசிபி ரொம்பவேபிடிக்கும். இந்த ரெசிபி செய்ததும் ரொம்ப ரொம்ப ஈஸி தான்.
Prep Time10 minutes
Active Time20 minutes
Total Time30 minutes
Course: LUNCH, starters
Cuisine: tamil nadu
Keyword: Butter Garlic Prawn
Yield: 4
Calories: 219kcal

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ இறால்
  • 4 டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
  • 1 எலுமிச்சை பழச்சாறு
  • 15 பல் பூண்டு
  • 2 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • கொத்தமல்லி இலைகள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு

செய்முறை

  • முதலில் இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும் அதில் ஒரு டேபிள்ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் அரை எலுமிச்சை பழத்தின் சாறு உப்பு மிளகு தூள் சேர்த்து15 நிமிடங்களுக்கு நன்றாக ஊற வைக்கவும்
  • ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து கலந்து வைத்துள்ள இறாலை சேர்த்துஇரு பக்கமும் நன்றாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்
  • பிறகு அதே கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் பட்டர் சேர்த்து பூண்டை சிறிதாக நறுக்கி சேர்த்து நன்றாகவதக்கிக் கொள்ளவும்
  • மறுபடியும் அரை எலுமிச்சை பழத்தின் சாறு மூன்று டேபிள் ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்
  • பிறகு பொரித்து வைத்துள்ள இறாலை சேர்த்து சுருள வதக்கி எடுத்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான பட்டர் கார்லிக் இறால் தயார்

Nutrition

Serving: 100g | Calories: 219kcal | Carbohydrates: 60g | Protein: 12g | Fat: 1g | Sodium: 121mg | Potassium: 23.2mg | Vitamin A: 13IU | Calcium: 14mg

இதையும் படியுங்கள் : காரசாரமான கேரளா ஸ்டைல் இறால் மிளகு வறுவல் ஒருமுறை இப்படி செய்து பாருங்களேன்!