- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- Side Dish
உங்க வீட்ல பிரான் எடுத்தா அதை வச்சு பிரான் 65 பிரான் கிரேவி பிரான் தொக்கு அப்டின்னு எக்கசக்கமா செஞ்சு இருப்பீங்க. ஆனா எப்பவுமே ஒரே மாதிரியா செய்யாம இந்த மாதிரி ஒரு தடவை ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல பட்டர் கார்லிக் பிரான் செஞ்சு பாருங்க. இத சைடு டிஷ் கூட இல்லாம அப்படியே சாப்பிடலாம். டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு ரொம்ப ரொம்ப குறைவான பொருட்கள் மட்டும் தான் சேர்க்கப் போறோம். காரத்துக்கு மிளகுத்தூள் மட்டும் தான் சேர்க்கப் போறோம். கடைசியா கொஞ்சம் சில்லி ஃப்ளேக்ஸ் சேர்ப்போம். அதுவே சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். நல்ல கார்சாரமா இருக்குற ஸெஸ்வான் ப்ரைட் ரைஸ் கூட இந்த ரெசிபியை சைட் டிஷ்ஷா வச்சு சாப்பிடலாம்.
இந்த பட்டர் கார்லிக் ப்ரான்ல தேவைப்பட்டால் நீங்க கொஞ்சமா பால் கூட சேர்த்துக்கலாம் ஆனா இதுல நம்ம ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்றதால மைதா மாவு மட்டும் தான் சேர்க்க போறோம். இதே மாதிரி செய்முறையில் செஞ்சா கண்டிப்பா ரெஸ்டாரன்ட் ஸ்டைலில் கிடைக்கும். இப்பலாம் ரெஸ்டாரன்ட் லா கிடைக்கிற எல்லாம் ரெசிபிஸும் நம்ம வீட்டிலேயே செஞ்சுக்கலாம். அந்த வகையில இந்த ரெசிபியையும் கடையில தான் போய் சாப்பிடணும் அப்படின்ற அவசியமில்லை வீட்லையே செஞ்சு சாப்பிடலாம். டேஸ்ட் அவ்வளவு சூப்பரா இருக்கும்.
சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க. இதுக்கு நம்ம பிரானை பொரித்து சேர்க்கிறதால சுவை இன்னுமே அட்டகாசமா இருக்கும். இத மொத்தமாவே ஒரு 20 நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம். ரொம்ப ரொம்ப சிம்பிளான ஈஸியான ரெசிபி டேஸ்ட்ல அட்டகாசமா இருக்கக்கூடிய ரெசிபி. ஒரு சிலருக்கு காரசாரமா சாப்பிட பிடிக்காது ரொம்பவே காரம் கம்மியா சாப்பிடணும்னு தோணும் அந்த மாதிரி சமயத்துல இத செஞ்சு கொடுங்க. எல்லா கிரீமியா பாக்குறதுக்கே நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு ஒரு சூப்பரான ரெசிபி. இப்ப வாங்க இது எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : பிரான் வாங்கினா ஒரு தடவை இந்த மாதிரி பிரான் 65 செஞ்சு சாப்பிட்டு பாருங்க.
Ingredients
Method
இறாலை கழுவி சுத்தம் செய்து அதனுடன் மிளகுத்தூள் உப்பு சோள மாவு ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து கலந்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
மற்றொரு கடாயில் பட்டர் சேர்த்து பொடி பொடியாக நறுக்கிய பூண்டு சேர்த்து கலந்து கொள்ளவும்.
பிறகு அதில் ஒரு டீஸ்பூன் மைதா மாவு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து மாவு நன்றாக வெந்ததும் பொறித்து வைத்துள்ள இறால் சேர்த்து ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
தண்ணீர் வற்றி வந்த பிறகு கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கினால் சுவையான பட்டர் கார்லிக் பிரான் தயார்.






