குடைமிளகாய் முட்டை தொக்கு ரெசிப்பி பேரே டிப்ரண்டா இருக்குன்னு யோசிக்கிறீங்களா. ஒரே ஒரு தடவை இந்த ரெசிபியை வீட்ல செஞ்சு பாருங்க இதோட டேஸ்டுக்கு அடிமையாகிடுவிங்க. இதுல நம்ம குடைமிளகாய் சேர்க்கிறதால இதோட டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இதுக்கு ரொம்ப நிறைய பொருட்கள் எல்லாம் தேவைப்படாது ரொம்ப ரொம்ப குறைவான பொருட்களை வச்சு அட்டகாசமான இந்த குடைமிளகாய் முட்டை தொக்கு செஞ்சு முடிச்சிடலாம்.
உங்க வீட்ல அசைவம் எடுக்காத அன்னைக்கு வெறும் ரசம் சாதம் வச்சு இந்த குடைமிளகாய் முட்டை தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. அட்டகாசமான சுவைல சாப்பிடுறதுக்கே அவ்வளவு ருசியா இருக்கும். இது ரசம் சாதத்துக்கு மட்டுமில்லாம சப்பாத்தி இட்லி, தோசை குஸ்கா வெஜிடபிள் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி எல்லாத்துக்குமே ஒரு சூப்பரான சைடிஷா இருக்கும்.
எப்பவுமே பிரியாணிக்கு ஒரே மாதிரி குருமா வச்சு சாப்பிடாம ஒரு முறை இந்த தடவ டிஃபரண்டான குடைமிளகாய் முட்டை தொக்கு சைடிஷா வைத்து சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் ரொம்ப அட்டகாசமா இருக்கும். இந்த தொக்குக்கு நிறைய மசாலாக்கள் எல்லாம் எதுவும் சேர்க்க தேவை இல்லை உங்க வீட்ல சிக்கன் 65 மசாலா இருந்தாலே போதும் இந்த அருமையான ரெசிபியை செஞ்சு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சூப்பர் டேஸ்டான அட்டகாசமான குடைமிளகாய் முட்டை தொக்கு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
குடைமிளகாய் முட்டை தொக்கு | Capsicum Egg Thokku Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 3 பெரிய வெங்காயம்
- 2 தக்காளி
- 1 குடைமிளகாய்
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
- 1/2 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 1 கொத்து கறிவேப்பிலை
- 3 டேபிள் ஸ்பூன் சிக்கன் 65 மசாலா
- எண்ணெய் தேவையான அளவு
- உப்பு தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- முதலில் முட்டையை வேக வைத்து தோல் உரித்து இரண்டாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம்பருப்பு,சோம்பு, கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும்.
- பெரிய வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கி சேர்த்து நன்றாக வதக்கவும் இஞ்சி பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிய பிறகு உப்பு சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- தக்காளியை மிக்ஸி ஜாரில் அரைத்து அந்த விழுதையும் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இப்பொழுது அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு குடைமிளகாயை பொடி பொடியாக நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். எந்த கலர் குடைமிளகாய் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
- பிறகு சிக்கன் 65 மசாலா சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அனைத்தும் நன்றாக வெந்த பிறகு இறுதியாக முட்டையை சேர்த்து கொள்ளவும்.
- ஐந்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான குடைமிளகாய் முட்டை தொக்கு தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசியான குடைமிளகாய் ஈரல் பெப்பர் வறுவல் இப்படி செய்து பாருங்கள், வீட்டில் உள்ளவர்கள் மீண்டும் வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவார்கள்!