- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- evening
மாலையில் பள்ளி விட்டு வீடு திரும்பும் குழந்தைகள் மிகவும் சோர்வாக இருப்பார்கள், அவர்களுடைய சோர்வினை நீக்கி, குழந்தைகளை உற்சாகப்படுத்த மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு தினமொரு சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம். ஒரே விதமாக நம்முடைய கை முறுக்கு, அதிரசம், லட்டு, பூந்தி, காரா சேவு என்றெல்லாம் தின்று அலுத்துப் போன பெரியவர்களுக்கு கேக் செய்து கொடுத்தால் கொஞ்சம் மாற்றமாக இருக்கும். அந்த வகையில் கேக் என்றால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
பைனாப்பில், சாக்லேட், ரெட் வெல்வெட், தேங்காய், கேரட் போன்ற பல்வேறு வகையான கேக் வகைகள் உள்ளன. வீட்டில் இருக்கும் குழந்தைகள் எப்போது கேக் வேண்டும் என அடம்பிடிப்பார்கள் என்றே தெரியாது. இனிமேல் குழந்தைகள் அப்படி அடம்பிடித்தால் நீங்கள் பேக்கரிக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை. வீட்டிலேயே கேரமல் புட்டிங் கேக் செய்து அசத்துங்கள். வீட்டில் எளிதாகவும் விரைவாகவும் செய்யக்கூடிய சுவையான இனிப்பு உணவுகளில் கேரமல் பிரட் புட்டிங் முக்கிய இடம் பெறுகிறது.
இதை செய்ய சிறப்பு பொருட்கள் எதுவும் தேவையில்லை வீட்டிலேயே இருக்கும் ரொட்டி, பால், சர்க்கரை, முட்டை போன்றவற்றால் இந்த டெசர்ட் தயார் செய்யலாம். இது சிறுவர்களுக்கு மட்டுமல்ல, பெரியவர்களும் விரும்பி சாப்பிடும் வகை. குளிரவைத்தோ அல்லது வெதுவெதுப்பாகவோ பரிமாறலாம். இனிப்பு விரும்பிகள் கண்டிப்பாக முயற்சி செய்ய வேண்டிய ஒரு சுலபமான ரெசிபி. இப்போது சுவையான கேரமல் புட்டிங் கேக் எப்படி செய்வதென்று இந்த பதிவில் பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : நாவில் எச்சி ஊறும் காபி புட்டிங் செய்வது எப்படி?
Ingredients
Method
முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சர்க்கரை மற்றும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பாகு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பால், சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பின் ஒரு பவுளில் முட்டை, சர்க்கரை, எண்ணெய், மைதா மாவு, வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு பீட் செய்து எடுத்துக் கொள்ளவும்.
அதன்பிறகு ஒரு பவுளில் முதலில் சர்க்கரை பாகை ஊற்றவும், பின் நாம் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஊற்றி அதன் மேல் நாம் பீட் செய்து வைத்துள்ள மைதா மாவு கலவையை ஊற்றவும்.
பின் ஒரு இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் நாம் செய்து வைத்துள்ள இந்த கலவையை வைத்து வேகவைத்து எடுத்து கொள்ளவும். அவ்வளவுதான் சுவையான கேரமல் புட்டிங் கேக் தயார்.






