Home ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான கேரமல் பிரட் டோஸ்ட் எளிமையான முறையில் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

குழந்தைகளுக்கு பிடித்தமான கேரமல் பிரட் டோஸ்ட் எளிமையான முறையில் இப்படி ஒரு முறை செய்து கொடுங்கள்!!

குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த உடனே ஸ்னாக்ஸ் இருக்கா அப்படின்னு தான் எதிர்பார்ப்பார்கள். அப்போது அவர்களுக்கு நாம் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்றால் ரொம்ப கோப படுவார்கள் ஒழுங்காவே படிக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு புடிச்ச மாதிரி நல்லா இனிப்பா அதே நேரத்தில் கொஞ்சம் ஆரோக்கியமாகவும் கேரமல் பிரட் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌. இந்த கேரமல் பிரட் டோஸ்ட் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான் கஷ்டமான வேலை ஒன்றும் கிடையாது. அரை மணி நேரத்தில் சூப்பரா இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு முடிச்சிடலாம்.

இந்த சூப்பரான கேரமல் பிரட் டோஸ்ட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரே ஒரு தடவை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அதுக்கப்புறம் இந்த கேரமல் பிரட் டோஸ்டை அடிக்கடி செய்வீர்கள். இந்த ரெசிபியித் நாம் அதிகமாக பட்டர் சேர்த்து செய்யும் போது சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்ட்ல சாப்பிடற ஒரு ஃபீல் கிடைக்கும். இந்த ரெசிபியை மாலை வேளையில் ஸ்நாக்ஸாக மட்டும் சாப்பிடாமல் காலை உணவிற்கும் சாப்பிடலாம். இதை சாப்பிட்டாலே போதும் குழந்தைகளுக்கு வயிறு நிரம்பி விடும். இப்போது சுவையான கேரமல் பிரட் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

Print
4 from 1 vote

கேரமல் பிரட் டோஸ்ட் | Caramelized Bread Toast Recipe In Tamil

குழந்தைகள் ஸ்கூல் விட்டு வந்த உடனே ஸ்னாக்ஸ் இருக்கா அப்படின்னு தான் எதிர்பார்ப்பார்கள். அப்போது அவர்களுக்கு நாம் எதுவும் செய்து கொடுக்கவில்லை என்றால் ரொம்ப கோப படுவார்கள் ஒழுங்காவே படிக்க மாட்டார்கள். அதனால் அவர்களுக்கு புடிச்ச மாதிரி நல்லா இனிப்பா அதே நேரத்தில் கொஞ்சம் ஆரோக்கியமாகவும் கேரமல் பிரட் டோஸ்ட் எப்படி செய்வதென்று பார்ப்போம்‌. இந்த கேரமல் பிரட் டோஸ்ட் செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான் கஷ்டமான வேலை ஒன்றும் கிடையாது. அரை மணி நேரத்தில் சூப்பரா இந்த ஸ்நாக்ஸ் செஞ்சு முடிச்சிடலாம். இந்த சூப்பரான கேரமல் பிரட் டோஸ்ட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரே ஒரு தடவை உங்கள் வீட்டில் செய்து பாருங்கள் அதுக்கப்புறம் இந்த கேரமல் பிரட் டோஸ்டை அடிக்கடி செய்வீர்கள். இந்த ரெசிபியித் நாம் அதிகமாக பட்டர் சேர்த்து செய்யும் போது சாப்பிடுவதற்கு ரெஸ்டாரன்ட்ல சாப்பிடற ஒரு ஃபீல் கிடைக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: evening, snacks
Cuisine: Indian
Keyword: Caramelized Bread Toast
Yield: 3 People
Calories: 102kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 9 பிரட்
  • 1/2 கப் நாட்டு சர்க்கரை
  • 1 டீஸ்பூன் ஏலக்காய் தூள்
  • 3 டேபிள் ஸ்பூன் பட்டர்
  • 1 கப் பால்
  • துருவிய சாக்லேட் தேவையான அளவு
  • தேன் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் ஒரு பவுளில் நாட்டு சர்க்கரை, ஏலக்காய் தூள், பட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
  • பின் பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி விட்டு நாம் கலந்து வைத்துள்ள சர்க்கரை கலவையை தடவி அதன்மேல் மற்றொரு பிரெட்டால் மூடவும்.
  • அதன்பிறகு மூடிய அந்த பிரட் மேல் துருவிய சாக்லேட் மற்றும் பட்டர் சேர்த்து மற்றொரு பிரட்டால் மூடவும். அதன்மேல் சர்க்கரை கலவையை தடவி விடவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து நாம் செய்து வைத்துள்ள பிரட்டை சேர்த்து இரண்டு பக்கமும் பால் சேர்த்து வேகவைத்து எடுக்கவும்.
  • பின் இதன் மூலம் துருவிய சாக்லேட் மற்றும் தேன் சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கேரமல் பிரட் டோஸ்ட் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 102kcal | Carbohydrates: 7g | Protein: 25g | Fat: 5.7g | Sodium: 165mg | Potassium: 180mg | Fiber: 11g | Vitamin A: 53IU | Vitamin C: 110mg | Calcium: 27mg | Iron: 21mg

இதனையும் படியுங்கள் : சூப்பரான இந்த சில்லி பிரட் ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

.