குறட்டை, விக்கல், நரம்புத் தளர்ச்சி போக்க சிறந்த மருந்து ஏலக்காய்!

- Advertisement -

ஏலக்காய்… அஞ்சறைப்பெட்டியில இதுவும் இருக்கும். ஆனா ஏலக்காயை எப்போதாவதுதான் சமையல்ல சேர்ப்போம். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகம் உள்ள ஏலக்காய் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கக்கூடியது. முக்கியமா வாய் நாற்றம் உள்ளவங்க அடிக்கடி ஏலக்காயை வாயில போட்டு மென்னுட்டு வந்தா நிறைய பிரச்சினைகள் சரியாகும்.

மன அழுத்தம்

ஏலக்காய் மன அழுத்தத்தை சரி பண்றதுக்கு ரொம்ப உதவியா இருக்கும். ஏலக்காய்ல உள்ள கார்டிசால்ங்கிற ஹார்மோன் சுரக்கிறதால மன அழுத்தம் குறையும். பொதுவா ஏலக்காயை வாயில் போட்டா நல்ல வாசனை வீசும். அது மனசுக்கு ரொம்ப இதமா இருக்கும். ஏலக்காயை வெறுமனே சாப்பிடுறதைவிட தேநீர் தயார்பண்ணி குடிக்கலாம். என்னென்னவோ டீ சாப்பிடும் போது ஏலக்காய்ல டீ போட்டு குடிச்சா பல பேருக்கு உள்ள மன அழுத்தப் பிரச்சினைகள் சரியாகும்.

- Advertisement -

ரத்த அழுத்தம்

ஏலக்காய்ல டீ போட்டு குடிக்கிறதால தலைவலி சரியாகும்; ரத்த அழுத்தப் பிரச்சினை இருக்கிறவங்க ஏலக்காய் டீ குடிச்சா அந்தப் பிரச்சினை சரியாயிரும். செரிமானக் கோளாறு இருக்கிறவங்க அப்பப்போ ஏலக்காய் டீ குடிச்சிட்டு வந்தா அந்தப் பிரச்சினை வராம பார்த்துக்கிடலாம். இதய நோயை சரி பண்றதுக்கும் இது உதவியா இருக்கும். இன்னைக்கு சூழல்ல பல பேருக்கு ஆண்மைக் குறை பிரச்சினை இருக்கு. ரத்த ஓட்டம் ஒழுங்கா இல்லாததால்தான் இந்தப் பிரச்சினை வருது. ஏற்கனவே சொன்ன மாதிரி ரத்த ஓட்டத்தை இது சரி பண்றதால ஆண்மைக் குறை பிரச்சினையும் சரியாயிரும்.

நரம்புத்தளர்ச்சி

ஏலக்காயை டீ போட்டு குடிக்கலாம்னு சொன்னோம். அதேமாதிரி ஏலக்காயை தண்ணி சேர்த்து கொதிக்கவச்சி தேன் சேர்த்துக் குடிக்கலாம். இந்த மாதிரி குடிச்சிட்டு வந்தாலே நரம்புத் தளர்ச்சி சரியாகுறதோட நரம்புகள் முறுக்கேறும். ஆண்மைக்குறை பிரச்சினைக்காக ஆயிரக்கணக்குல செலவு பண்ணியும் பலன் கிடைக்காம கஷ்டப்படுறாங்க. அவங்கல்லாம் இந்த மாதிரி ரொம்ப சாதாரணமா ஏலக்காய்ல டீ போட்டு குடிச்சிட்டு வந்தாலே போதும். அதுக்காக அடிக்கடி ஏலக்காய் டீ குடிக்கிறது சரி கிடையாது.

-விளம்பரம்-

நிம்மதியான தூக்கம்

ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்னாடி மூணு ஏலக்காயை தட்டிப்போட்டு தண்ணி ஊத்தி கொதிக்க வச்சி குடிச்சிட்டு வந்தா நிம்மதியான தூக்கம் வரும். அது மட்டும் இல்லாம குறட்டை பிரச்சினை இருக்கிறவங்க இதை குடிச்சிட்டு வந்தா அந்த பிரச்சினையும் சரியாகும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவங்க, ஆஸ்துமா தொந்தரவு உள்ளவங்க, சர்க்கரை நோயாளிகள், இதய நோயாளிகள்னு எல்லோருமே இதைக் குடிக்கலாம்.

கல்லீரல் நச்சு அகற்றும்

விக்கல், உடல் நடுக்கம், தசைப் பிடிப்பு, குடல் பகுதியில இழுத்துப் பிடிக்கிறதுனு பலவிதமான பிரச்சினைகளை சரி பண்ணக்கூடியது இந்த ஏலக்காய். கல்லீரல்ல தேங்கி இருக்கிற யூரியா, கால்சியம் மட்டுமில்லாம வேற சில நச்சுக்களை வெளியேத்துறதுக்கும் ரொம்பவே உதவியா இருக்கும். ஒரேயடியா ஏலக்காயை தனியா பயன்படுத்தாம வேற வேற வடிவங்கள்ல சேர்த்துட்டு வந்தாலே போதும். உணவே மருந்து மருந்தே உணவுங்கிறது இந்த ஏலக்காய்க்கும் பொருந்தும். ஆனாலும் அளவோடு சாப்பிடுறது நல்லது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here