- Prep
- 10 min
- Cook
- 30 min
- Serves
- 5
- Cuisine
- tamil nadu
- Course
- deserts
நவராத்திரி பண்டிகைகளில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று தான் இந்த கேரட் பாசந்தி. இனிப்பு என்றாலே பல குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் குழந்தைகள் மட்டும் இல்லாமல் பெரியவர்களுக்கும் இனிப்பு வகைகள் மிகவும் பிடிக்கும். அப்படி இனிப்பு வகைகள் மிகவும் பிடித்தவர்கள் கடைகளிலேயே இனிப்புகள் வாங்கி சாப்பிடாமல் வீட்டிலேயே இனிப்புகள் செய்து சாப்பிட்டால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.
அதே நேரத்தில் சுவையும் இன்னும் கூடுதலாகவே இருக்கும் அதற்கு நாம் சரியான முறையில் செய்ய வேண்டும். அப்படி சரியான முறையில் மிகவும் எளிமையான முறையில் செய்யக்கூடிய இந்த கேரட் பாசிட்டி சுவையோடு மட்டுமில்லாமல் நம் உடலுக்கு பலவிதமான ஆரோக்கியத்தையும் கொடுக்கக் கூடியது ஏனென்றால் கேரட் நம் கண்களுக்கு நல்லது முகத்திற்கும் நல்லது. ஒரு சில குழந்தைகள் கேரட்டை அப்படியே கொடுத்தாலும் அல்லது சமையலில் போட்டுக் கொடுத்தாலும் சாப்பிட மாட்டார்கள் ஆனால் கேரட் என்பது கண்டிப்பாக எல்லாரும் சாப்பிட வேண்டிய ஒன்று.
எனவே நாம் அந்த கேரட்டை குழந்தைகளுக்கு பிடித்த வகையில் ஏதாவது ஒரு இனிப்பு வகையாக மாற்றி செய்து கொடுத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட சாப்பிடுவார்கள். நாம் இப்பொழுது செய்யப் போகிற இந்த கேரட் பாசந்தி கூட அப்படித்தான். குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரையில் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாக அமையும்.
உங்கள் வீட்டில் ஏதாவது ஒரு சிறிய விசேஷங்கள் வந்தால் கூட நீங்கள் இந்த கேரட் பாசந்தியை செய்து கொடுக்கலாம். வீட்டிற்கு வந்த விருந்தினர்களுக்கும் மிகவும் பிடிக்கும். நாம் பொதுவாக வீட்டில் ஏதாவது விசேஷங்கள் வந்தால் கேசரி தான் செய்வோம் ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக இந்த மாதிரி கேரட் பாசந்தி செய்து கொடுத்தால் சற்று வித்தியாசமாகவே இருக்கும். இப்பொழுது வாருங்கள் இந்த சுவையான இனிப்பான கேரட் பாசந்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : இந்த மழைக்கு இதமா சுட சுட கேரட் ஸ்டஃப்டு உருளைக்கிழங்கு பால்ஸ் இப்படி ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
முதலில் கேரட்டை நன்கு கழுவி சுத்தம் செய்து நன்றாக துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு பாதாம் மற்றும் முந்திரியை சிறிதளவு பாலில் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜார் கேரட் ஒருவலையும் பாதாம் முந்திரியையும் பாலுடன் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு ஒரு அகலமான கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி பாலில் நன்கு சுண்ட காய்ச்ச வேண்டும்.பால் நன்றாக காய்ந்தவுடன் அரைத்து வைத்துள்ள கேரட் கலவையை போட்டு நன்றாக கிளற வேண்டும்.
பின்பு எடுத்து வைத்துள்ள சர்க்கரை வீண் சேர்த்து சுருள கிளற வேண்டும். சிறிதளவு ஏலக்காய் பொடி சேர்த்து கேரட் பாலுடன் சேரும் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
மிகவும் கெட்டியாகவும் இல்லாமல் மிகவும் கம்மியாகவும் இல்லாமல் இரண்டிற்கும் நடுவே உள்ள பதத்தில் இறக்கினால்சுவையான சூடான கேரட் பாசுந்தி தயார்.





