- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
இந்தியாவின் பிரசித்தி வாய்ந்த இனிப்பு வகைகளில் குலாப் ஜாமுனும் ஒன்று. குலாப் ஜாமுன்கள் இல்லாத ஸ்வீட் ஸ்டால் மற்றும் ரெஸ்டாரன்ட்கலே இல்லை எனும் அளவிற்கு இதற்கு தனி மவுசு உண்டு. இவை தீபாவளி, கிறிஸ்துமஸ், ஈத் போன்ற பண்டிகை காலங்களின் போதும் மற்றும் திருமண விழாக்களின் போதும், பிறந்தநாள் பார்ட்டிகளிலும் பரிமாறப்படும் ஒரு சிறப்பு இனிப்பு வகை. இது சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு இனிப்பு வகை.
நாவில் வைத்தவுடன் கரைந்து அதீத சுவை தரும் இதன் தன்மையே இதற்குக் காரணம். வீட்டில் சொந்தக்காரர்கள், அல்லது விசேஷம் போன்று வைத்திருக்கும் போது என்ன ஸ்வீட் செய்யலாம் என்று குழப்பமாக உள்ளதா? அப்போ சட்டுனு இந்த கேரட் ஜாமுன் செய்து கொடுத்து பாருங்கள் எல்லா ஜாமுனும் காலியாகிவிடும். ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும். எல்லோரும் விரும்பி சாப்பிடுவார்கள். இதை செய்வது ரொம்ப ரொம்ப ஈஸி.
இதை செய்து டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இரண்டு நாட்கள் கெட்டுப் போகாமல் இருக்கும். நாவில் வைத்த வினாடியிலேயே கரைந்து போகும் இந்த ஜாமுன் செய்முறையில் சிறிது பிழை ஏற்பட்டாலும் இதனின் சுவை முற்றிலுமாக மாறி விடும். அதனால் இந்த கேரட் ஜாமுன் செய்யும் போது மிகக் கவனமாக செய்வது மிகவும் அவசியம். இப்பொழுது எளிமையான முறையில் சுவையான கேரட் ஜாமுன் எப்படி செய்வதென்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!
Ingredients
Method
முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய கேரட், பால் மற்றும் சர்க்கரை சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் சேர்த்து காய்ந்ததும் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து அதனுடன் பால், ஏலக்காய் தூள், ரவை சேர்த்து நன்கு கலந்து கெட்டியானதும் இறக்கவும்.
பின் இதன் சூடு ஆறியதும் உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பால் சேர்த்து, பால் காய்ந்ததும் குங்குமப்பூ, ஏலக்காய் தூள், கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு காய்ச்சி எடுத்துக் கொள்ளவும்.
பின் நாம் செய்து வைத்துள்ள உருண்டைகளை இந்த பாலில் சேர்த்து அதனுடன் நறுக்கிய பாதாம், பிஸ்தா சேர்த்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கேரட் ஜாமுன் தயார்.






