- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- sweets
இனிப்புகள் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். அதுவும் வீட்டில் செய்து சாப்பிடும் இனிப்புகள் என்றால் அது ஒரு தனி அனுபவம்தான். அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது வீட்டிலேயே எளிதாக செய்யக்கூடிய கேரட் லட்டு. இது சுவையானது மட்டுமல்லாமல் ஆரோக்கியமானதும் கூட. கேரட்டில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நம் உடலுக்கு பல நன்மைகளைத் தருகின்றன. அன்றாடம் உணவுகளில் சேர்க்ககூடிய காய்கறிகளில் முக்கியமானது கேரட். கண்ணை பறிக்கும் வண்ணத்தில் இருக்கும் காய்கறிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சிறப்பானவை. அதில் கேரட்டும் ஒன்று.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய காய்கறிகளில் இதுவும் ஒன்று. இந்த கேரட்டில் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. கேரட்டில் நமது உடலுக்கு தேவையான பீட்டா கரோட்டின், வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பண்புகள் அதிக அளவில் நிறைந்துள்ளன. எடை இழப்பு பயிற்சியில் இருப்பவர்கள் இதனை தாராளமாக உட்கொள்ளலாம். நீங்கள் உட்கொள்ளக்கூடிய அனைத்து உணவுகளிலும் கேரட் சேர்க்கலாம். அந்த வகையில் இன்றைய பதிவில் சுவையான மற்றும் இத்தகைய ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ள கேரட்டில் எப்படி லட்டு செய்வதென்று பார்ப்போம்.
ஆனால் சில குழந்தைகள் கேரட்டை சாப்பிடுவதற்கு அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கும் கேரட்டின் சத்துடன் அவர்கள் விரும்பி சாப்பிடும் இனிப்பு வகைகள் செய்து கொடுக்க நினைத்தால் இந்த கேரட் லட்டினை செய்து அசத்தலாம். இதனை ஒரு முறை செய்து பக்குவமாக எடுத்து வைத்தால் 4 முதல் 5 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம். பள்ளி முடித்து வரும் குழந்தைகளுக்கு இதனை வைத்து தந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். இப்ப வாருங்கள் சுவையான கேரட் லட்டு எப்படி செய்வதென்று பார்ப்போம்.
இதனையும் படியுங்கள் : உருளைக்கிழங்கு கேரட் பக்கோடா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா குழந்தைகளுக்கு செஞ்சு கொடுங்க!!
Ingredients
Method
முதலில் கேரட்டை நன்கு தண்ணீரில் அலசி விட்டு, தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியே எடுத்து வைக்கவும்.
பின் அதே கடாயில் சிறிதளவு நெய் விட்டு ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும், பின் துருவிய கேரட் சேர்த்து நன்கு வதக்கவும்.
பின் தேங்காய் துருவல் சேர்த்து வதக்கவும், கேரட் சற்று வதங்கியதும் சர்க்கரை சேர்த்து நன்கு வதக்கவும். கேரட் நன்கு வதங்கியதும் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து இறக்கவும்.
பின் கேரட் கலவை ஆறியதும் லட்டுவா பிடித்து பரிமாறவும். அவ்வளவுதான் சுவையான கேரட் லட்டு தயார்.






