- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ஊட்டச்சத்து மிகுந்து காணப்படும் காய்கறிகளில் காலிஃப்ளவருக்கு முக்கிய இடம் உண்டு. வைட்டமின் சி, மெக்னீசியம் போன்றவை நிரம்பி காணப்படுகின்றன. மேலும், இந்த அற்புத காய்கறியை நமது அன்றாட உணவுகளுடன் சேர்த்து கொள்வதன் மூலம், புற்றுநோய், இதய நோய்கள் மற்றும் பல்வேறு தொற்று நோய் மற்றும் மன அழுத்தால் ஏற்படும் நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள முடியும். பொதுவாக காய்கறி வகைகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த காயாக காலிஃப்ளவர் பார்க்கப்படுகிறது.
இதனைக் கொண்டு பொரியல், கறி, பக்கோடா மற்றும் சிப்ஸ் வகைகளை சமைக்கலாம். இதில் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிஃப்ளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது. இது ரத்தத்தில் கெட்ட கொழுப்புகளை அதிகம் சேர விடாமல் தடுத்து, இதயத்துக்கு செல்லும் ரத்த குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுத்து இதயத்தின் நலனை பாதுகாக்கிறது. காய்கறிகள் உண்ண மறுக்கும் குழந்தைகளுக்கு இவ்வாறு ருசியாக செய்து கொடுத்தால் தானாக உண்பார்கள். மேலும் இதை வெகு சுலபமாக செய்து விடலாம்.
நமது வீட்டில் காலிப்ளவரை வறுவல், 65 போன்று செய்து கொடித்திருப்பார்கள். ஆனால் அதையே செய்து கொடுத்தால் நமக்கு மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கும் போர் அடித்துவிடும். அதுமட்டுமில்லாமல் அந்த உணவையே நமக்கு பிடிக்காமல் போகிவிடும். தினமும் வித்தியாசமாகவும், ருசியாகவும் செய்து கொடுத்தால் நமக்கு எந்த உணவையும் பிடிக்காது என்று சொல்ல மாட்டோம். அந்த வகையில் இந்த பதிவில் காலிஃப்ளவரை வைத்து சுவையான காலிஃப்ளவர் முட்டை வறுவல் எவ்வாறு செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : அடுத்தமுறை காலிஃப்ளவர் வாங்கினால் இப்படி கிரீன் காலிஃப்ளவர் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கிய காலிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியே எடுத்துக் கொள்ளவும்.
பின் அதே கடாயில் எண்ணெய் எண்ணெய் ஊற்றி கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் முட்டை உடைத்து ஊற்றி மூடி வைத்து வேக விடவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து அதனுடன் உப்பு, வறுத்த காலிஃப்ளவர் சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி சிறிதளவு தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான காலிஃப்ளவர் முட்டை வறுவல் தயார்.






