- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
குழந்தைகளுக்கு தேர்வு நடக்கிற இந்த சமயத்துல அவங்களுக்கு புடிச்ச மாதிரி சில ரெசிபீஸ் செஞ்சு கொடுத்தா நல்லா சாப்பிட்டுட்டு தெம்பா படிப்பாங்க. அதனால இந்த டைம்ல அவங்க என்ன கேட்டாலும் அதை உங்களுக்கு செஞ்சு கொடுத்துடுங்க. அந்த வகையில உங்க வீட்ல இருக்குற குழந்தைகள் பீட்சா பர்கர் அப்படின்னு ஏதாவது கேட்டாங்கன்னா அதுக்கு பதிலா இந்த ஹெல்தியான சீஸ் தோசையை வீட்டிலேயே செஞ்சு கொடுங்க. இது சாப்பிடுவதால் உடம்புக்கு நல்ல தெம்பு கிடைக்கும் இதுல சீஸ் மட்டும் இல்லாம நம்ம பன்னீர் சேர்க்க போறோம். உங்களுக்கு பன்னீர் தவிர வேற என்ன சேர்க்க தோணுதோ அதைக்கூட சேர்த்துக்கலாம்.
முட்டை காய்கறிகள் மஸ்ரூம் அப்படின்னு என்ன வேணுமோ அதை சேர்த்துட்டு மேல சீஸ் போட்டு சூப்பரா இந்த தோசைய சுட்டு எடுக்கலாம். இதுக்கு எந்த சைடு டிஷ்ஷும் தேவைப்படாது. சைடிஷ் செய்ற நேரத்துல இந்த மசாலா ரெடி பண்ணிட்டா சூப்பரான ஒரு சீஸ் தோசை டிஃபரண்டா செஞ்சு கொடுத்துடலாம். இந்த தோசையில நம்ம இப்போ பன்னீர் சேர்க்க போறோம் பன்னீர்ல நிறைய ப்ரோடீன் சத்துக்கள் இருக்கிறதால குழந்தைகளோட எனர்ஜிக்கு ரொம்ப ரொம்ப தேவைப்படும். குழந்தைகள் ஈவினிங் டைம்ல படிச்சிட்டு இருக்கும்போது இதை செஞ்சு கொடுத்து பாருங்க சாப்பிட்டு குஷி ஆகி படிப்பாங்க. இந்த சீஸ் தோசை ரொம்ப ரொம்ப ஃபில்லிங்கா இருக்கும் அதனால ஒன்னு சாப்பிட்டாலே போதும்.
தோசையை கட் பண்ணும் போது சீஸியா வர்ரது தான் குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த வகையில இந்த சீஸ் தோசை குழந்தைகளுக்கு ஒரு சூப்பரான ரெசிபியா இருக்கும். கண்டிப்பாக குழந்தைகளுக்கு இதை செஞ்சு கொடுங்க குழந்தைகள் வீட்ல இருக்கும்போது பிரேக் பாஸ்ட்க்கு கூட செஞ்சு கொடுக்கலாம். பொறுமையா குழந்தைகள் சாப்பிடற மாதிரியான ஒரு டைம்ல செஞ்சு கொடுங்க குழந்தைகள் மட்டும் இல்லாம வீட்ல இருக்க கூடிய பெரியவங்களும் கூட இதை விரும்பி சாப்பிடுவாங்க. கண்டிப்பா இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ஒரே ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும். தோசை ஊற்றும் போது தோசைக்கு எண்ணெய் சேர்க்காமல் பட்டர் கூட சேர்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான சூப்பரான சீஸ் தோசை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இட்லி தோசைக்கு ஒரு தடவை நெல்லிக்காய் சட்னி செஞ்சு அசத்துங்க!
Ingredients
Method
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து நறுக்கிய பெரிய வெங்காயம் நறுக்கிய பூண்டு இஞ்சி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும். மஞ்சள் தூள் மிளகாய் தூள் கரம் மசாலா உப்பு சேர்த்து நன்றாக வதக்கியதும் துருவிய பன்னீர் சேர்த்து வதக்கவும்.
இறுதியாக கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கி வைக்கவும்.
தோசை சட்டியில் தோசை ஊற்றி பட்டர் சேர்த்து கலந்து வைத்துள்ள மசாலாவை பரப்பி வைத்து அதன் மேல் சீஸை துருவி சேர்த்து ஒரு பக்கமாக மூடி போட்டு நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான சீஸ் தோசை தயார்.






