செட்டிநாடு ஸ்டைலில் முட்டை பெப்பர் ப்ரை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். முட்டை வச்சு முட்டை கிரேவி முட்டை குழம்பு முட்டை பொடிமாஸ் முட்டை ஆம்லெட் அப்படின்னு நிறைய செஞ்சு இருப்பீங்க. இந்த ரெசிபி ரொம்ப வித்தியாசமா இருக்கும். முட்டைய ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றி மிளகுத்தூள் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து கலந்து ஆவியில் வேக வைத்து எடுத்து அதனை சிறிதாக நறுக்கி அதுல இந்த செட்டிநாடு ஸ்பெஷல் எக் பிரை செஞ்சு பாருங்க ரொம்ப ரொம்ப வித்தியாசமா இருக்கும்.
இதுக்கு நம்ம ஸ்பெஷலா ஒரு மசாலா அரைச்சு செய்ய போறோம். அந்த மசாலா அரைச்சு செய்யிறப்போ, டேஸ்ட் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். டேஸ்ட்டான ருசியான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாருமே அடிமையாகிடுவாங்க. சுட சுட ரசம் சாதம் தயிர் சாதம் கூட இந்த ரெசிபியை வைத்து சாப்பிட்டு பாருங்க கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சுவையான இந்த ரெசிபிக்கு எல்லாருமே கொஞ்சம் எக்ஸ்ட்ராவே சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு டேஸ்ட் அருமையாக இருக்கும்.
இதுக்கு நம்ம வறுத்து அரைக்கிற மசாலா மட்டுமே போதுமானது பெருசா எதுவும் சேர்க்கத் தேவையில்லை டேஸ்ட்டான இந்த ரெசிபி கண்டிப்பா எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒரே ஒரு தடவை செஞ்சு பாருங்க ரொம்ப சாஃப்டா சாப்பிடுவதற்கு அவ்வளவு சூப்பரா இருக்கும். முட்டைய வேகவைத்து முட்டை தொக்கு செஞ்சிருப்பீங்க ஆனா இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்ட் ரொம்பவே சூப்பரா இருக்கும் இப்ப வாங்க. இந்த சுவையான செட்டிநாடு ஸ்டைல் எக் ப்ரை எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
செட்டிநாடு முட்டை பெப்பர் ப்ரை | Chettinad Egg Pepper Fry Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 4 முட்டை
- 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- 1 டீஸ்பூன் மிளகு தூள்
- 1 கொத்து கறிவேப்பிலை
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சோம்பு
- 4 காய்ந்த மிளகாய்
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 2 டேபிள் ஸ்பூன் வேர்க்கடலை
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் மிளகாய் தூள் மிளகு தூள் உப்பு சேர்த்து நன்றாக கலந்து இட்லி பாத்திரத்தில் வைத்து 20 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயில் பட்டை கிராம்பு ஏலக்காய் சோம்பு சீரகம் மிளகு வேர்க்கடலை காய்ந்த மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
- வேக வைத்த முட்டையை சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- கடாயில் எண்ணெய் சேர்த்து கறிவேப்பிலை போட்டு தாளித்து நறுக்கி வைத்துள்ள முட்டையை சேர்த்து அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளறி கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கினால் சுவையான எக் பேப்பர் ப்ரை தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : செட்டிநாடு மத்தி மீன் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு அசத்துங்க!