காரைக்குடி செட்டிநாட்டு உணவுகளானது தனித்துவமான மசாலாப் பொருட்கள் மற்றும் நுட்பமான சுவைகளின் மந்திர கலவையாகும். தனித்துவமான நறுமணம் மற்றும் ருசி இவற்றை ஒரு சிறந்த சமையல் படைப்பாக ஆக்குகின்றன. காரைக்குடி செட்டிநாடு உணவு வகைகளுக்கு உலக அளவில் எந்த அறிமுகமும் தேவையில்லை, ஏனெனில் இது உலகெங்கிலும் உள்ள பல உணவுப் பிரியர்களை அதன் செழுமையான, காரம் மற்றும் தனித்துவமான சுவை உள்ளிட்ட அம்சங்களுடன் கவர்ந்துள்ளது. பொதுவாக அசைவம் என்றாலே அதற்கு தனி மவுசு தான். செட்டிநாடு உணவுகளின் சுவை சைவ பிரியர்களுக்கும் சரி, அசைவ பிரியர்களுக்கும் சரி மிகவும் பிடித்தமான ஒன்று.
தூக்கலான மசாலா சேர்த்த நாட்டுக்கோழி குழம்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, காரைக்குடி இறால் என அசைவத்தில் மெனு வரிசைக்கட்டி நிற்க, சைவத்திலும் காரக்குழம்பு, கூட்டு, மசியல், பொரியல், துவையல், பிரட்டல், பருப்பு உருண்டை குழம்பு என ஏராளமான பிரத்தியேக செட்டிநாடு உணவுகள் உள்ளன. தமிழகத்தில் காரைக்குடி, தேவகோட்டை, புதுக்கோட்டை போன்ற பகுதிகளில் செட்டிநாடு உணவுகள் சமைக்கப்படுகின்றன. பல வகையான மசாலாப் பொருட்களை ஃபிரஷாக அரைத்து சமையலில் பயன்படுத்துவது இந்த உணவின் தனித்துவம். அந்த வகையில் இந்தப் பதிவில் நாம் பார்க்கப் போவது செட்டிநாடு ஸ்பெஷல் கணவாய் கிரேவி.
விடுமுறை நாட்களில் நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்தளிக்கும் வகையில் பல சுவையான ரெசிபிக்களை சமைத்து சாப்பிட அனைவருமே விரும்புவோம். நீங்கள் இந்த வாரம் மீன் எடுக்க நினைத்தால் கணவா மீனை எடுங்கள். அந்த கணவா மீனைக் கொண்டு செட்டிநாடு கிரேவி செய்து சாப்பிடுங்கள். இந்த கணவா மீன் கிரேவி செய்வது மிகவும் சுலபம். 25 நிமிடத்தில் மணமணக்கும் ருசியான கணவா மீனை செய்து விடலாம். முக்கியமாக இந்த கிரேவி பேச்சுலர்களும் செய்யும் வகையில் ஈஸியான செய்முறையைக் கொண்டது.
செட்டிநாடு கணவா கிரேவி | Chettinad Kanavai Gravy Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 1/2 கி கணவாய் மீன்
- 20 சின்ன வெங்காயம்
- 10 பல் பூண்டு
- 1 டீஸ்பூன் மல்லி
- 1 டீஸ்பூன் சீரகம்
- 1/2 டீஸ்பூன் சோம்பு
- 10 வர மிளகாய்
- 2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
- 1 அன்னாசி பூ
- 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- கொத்தமல்லி சிறிதளவு
- 1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
செய்முறை
- முதலில் கணவா மீனை நன்கு சுத்தம் செய்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றாமல் மல்லி, சீரகம் சோம்பு, வர மிளகாய், பட்டை, கிராம்பு, அன்னாசி பூ சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும்.
- பின் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி அதனுடன் நாம் அரைத்து வைத்துள்ள மசாலா, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- எண்ணெய் பிரிந்து வந்ததும் கணவா மீனை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு மூடி வைத்து வேக விடவும். கணவா மீன் வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு கணவா மீன் கிரேவி தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : ருசிக்க ருசிக்க கணவாய் கிரேவி இப்படி ஒரு தரம் செய்து பாருங்க! பிரமாதமான சுவையில்!