- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Side Dish
ஆம்லெட்ல நிறைய ரெசிபிஸ் இருக்கு கலக்கி, ஹாஃப் பாயில், ஃபுல் பாயில் அப்படின்னு நிறைய சொல்லிக்கிட்டே போகலாம் முட்டை பிரியர்கள் நிறைய பேர் இருப்பாங்க. டெய்லி முட்டை இல்லாம ஒரு சிலர் சாப்பிடவே மாட்டாங்க அந்த மாதிரி முட்டை பிரியர்கள் எப்பவுமே ஒரே மாதிரியா ரெசிப்பீஸ் செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி கொஞ்சம் வித்தியாசமா ஆம்லெட் போட்டு அதுல சுக்கா செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். சுட சுட தயிர் சாதம் ரசம் சாதம் பருப்பு சாதம்னு எல்லாத்துக்கும் ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும்.
ரசம் பருப்பு சாதம் வச்சா எப்பவுமே உருளைக்கிழங்கு வறுவல் செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை ஆம்லெட் போட்டு அதுல செட்டிநாடு ஸ்டைல் முட்டை சுக்கா செஞ்சு பாருங்க இது செய்றதும் ரொம்ப ரொம்ப ஈஸிதான். சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க நல்லா காரசாரமா புளிப்பா சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும். வீட்ல சைடு டிஷ்க்கு எதுவுமே இல்லனா இந்த மாதிரி ஒரு தடவை முட்டையை வச்சு செஞ்சு பாருங்க வெங்காயம், தக்காளி, பூண்டு இருந்தாலே போதுமானது.
கரம் மசாலா கூட இல்லனா பரவால்ல அதுக்கு பதிலா உங்க வீட்ல என்ன மசாலா இருக்கோ அதைக்கூட சேர்த்துக்கலாம். பொதுவா எல்லார் வீட்லயுமே கரம் மசாலா இருக்கும் அப்படி இல்லன்னா மட்டன் மசாலா சிக்கன் மசாலா என்று ஏதாவது ஒன்னு போட்டுக்கலாம் டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். ஒரே ஒரு தடவை இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இதை ஒரு தடவை சாப்பிட்டு பார்த்துட்டீங்கன்னா இந்த டேஸ்ட் அதுக்கு அப்புறமா விடவே மாட்டீங்க.
அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன குழந்தைகளிலிருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. சுவையான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா எல்லாரும் அடிமையா வாங்க. முட்டை பிரியர்களுக்கு இந்த ரெசிபி இன்னும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவே பிடிக்க ஆரம்பிச்சுடும். எப்பவுமே முட்டையில முட்டை குழம்பு முட்டை கிரேவி செய்யாம இந்த மாதிரி ஒரு தடவ டிஃபரண்டா செஞ்சு பாருங்க. இப்ப வாங்க இந்த ஆம்லெட் செட்டிநாடு முட்டை சுக்கா எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : முட்டை மசாலா டோஸ்ட் இந்த மாதிரி செய்ங்க நிமிசத்துல காலியாயிடும்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி மிளகுத்தூள் உப்பு சேர்த்து கலந்து தோசை கல்லில் போட்டு ஆம்லெட் ஆக ஊற்றி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சீரகம் போட்டு தாளித்ததும் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் பூண்டு வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
ஒரு தக்காளியை அரைத்து ஊற்றிக் கொள்ளவும் பிறகு தயிர் சேர்த்து கரம் மசாலா மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
அனைத்தும் எண்ணெய் பிரிந்து வந்த பிறகு ஆம்லெட்டை நறுக்கி சேர்த்து வதக்கவும்.
இறுதியாக கஸ்தூரி மேத்தி போட்டு இறக்கினால் சுவையான செட்டிநாடு ஆம்லெட் முட்டை சுக்கா தயார்.






