காரசாரமான ருசியில் செட்டிநாடு மட்டன் பொடிமாஸ் ஓரு முறை இப்படி செய்து பாருங்க! அப்புறம் நீங்களே அடிக்கடி செய்வீங்க!

- Advertisement -

மட்டன் பொடிமாஸ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. பொடிமாஸ்களில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், குடை மிளகாய் முட்டை பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ், மற்றும் பீன்ஸ் பொடிமாஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான மட்டன் பொடிமாஸ். அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. அசைவ உணவான மட்டன், நமது உடம்பில் இருக்கும் ஒவ்வொரு உடல் பாகத்திற்கும் ஆரோக்கிய நன்மை ஒவ்வொரு நமது உடல் சூட்டை தணித்து, தோலுக்கு வலிமை அடையச் செய்து, சருமம் பளபளக்க நல்ல தீர்வாக உள்ளது. மேலும் மட்டன் தான் அதிக மக்களால் சாப்பிடப்படும் அசைவ உணவுப் பொருளும் கூட.

-விளம்பரம்-

இப்போதெல்லாம் சைட் டிஷ் வகைகளே ஏராளம் ஆக வந்துவிட்டது. அதிலும் இந்த ஏராளம் வைத்து செய்யும் ரெசிபிகள் பட்டியல் மிகவும் பெரியது. அதே நேரத்தில் மட்டன் நல்ல ஒரு சுவையுடனும் இருக்கிறது. சுவை மிகுந்த இந்த மட்டன் வைத்து ஒரு அருமையான பொடிமாஸ் எப்படி செய்வது என்று தான் இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம். இந்த மட்டன் பொடிமாஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் மட்டனை நாம் நறுக்கி விட்டால் போதும் இதை வெறும் 10 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம். இது வரை மட்டனில் குழம்பு, கிரேவி, வறுவல், பிரியாணி என பலவகையான ரெசிப்பிகளைப் பார்த்திருக்கிறோம். அந்தவகையில் இன்று சுவையான மட்டன் பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்ப்போம்.‌

- Advertisement -
Print
No ratings yet

செட்டிநாடு மட்டன் பொடிமாஸ் | Chettinadu Mutton Podimas Recipe In Tamil

மட்டன் பொடிமாஸ் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. இவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு உணவு என்றால் அது மிகை அல்ல. பொடிமாஸ்களில் பல வகை உண்டு. குறிப்பாக அதில் முட்டை பொடிமாஸ், குடை மிளகாய் முட்டை பொடிமாஸ், உருளைக்கிழங்கு பொடிமாஸ், மற்றும் பீன்ஸ் பொடிமாஸ் குறிப்பிடத்தக்கவை. அதில் நாம் இன்று இங்கு காண இருப்பது அசத்தலான மட்டன் பொடிமாஸ். அசைவ உணவுகளிலேயே மட்டன் எனும் ஆட்டிறைச்சி தான் மிகவும் ஆரோக்கியமானது. இந்த மட்டன் பொடிமாஸ்ஸின் ஸ்பெஷல் என்னவென்றால் மட்டனை நாம் நறுக்கி விட்டால் போதும் இதை வெறும் 10 நிமிடங்களிலேயே வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி நாம் செய்து விடலாம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: LUNCH
Cuisine: Indian
Keyword: Chettinadu Mutton Podimas
Yield: 4 People
Calories: 106kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 மிக்ஸி
  • 1 குக்கர்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/4 கி  எலும்பில்லாத மட்டன்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • 5 பல் பூண்டு
  • 2 பெரிய வெங்காயம்
  • 2 பச்சை மிளகாய்
  • 1/2 டீஸ்பூன் உளுந்து
  • 1/2 டீஸ்பூன் வெந்தயம்
  • 1 பிரியாணி இலை
  • 1 பட்டை, கிராம்பு
  • 1 அன்னாசி பூ
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு
  • கறிவேப்பில்லை, கொத்தமல்லி சிறிதளவு
  • 1/4 கப் தேங்காய் துருவல்
  • 2 முட்டை

செய்முறை

  • முதலில் மட்டனை நன்கு அலசி மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • பின் ஒரு குக்கரில் மட்டனை சேர்த்து அதனுடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 5 விசில் விட்டு இறக்கவும்.
  • பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அன்னாசி பூ, பிரியாணி இலை, உளுந்து, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  • பின் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் பச்சை மிளகாய், பூண்டு, மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும்.
  • அதன்பிறகு வேகவைத்த மட்டன் சேர்த்து அதனுடன் உப்பு, தேங்காய் துருவல் சேர்த்து நன்கு சுருள வதக்கவும். பின் முட்டையை சேர்த்து முட்டை வேகும் வரை கிளறி விட்டு கொத்தமல்லி தூவி இறக்கவும். அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு ஸ்டைல் மட்டன் பொடிமாஸ் தயார்.

Nutrition

Serving: 300g | Calories: 106kcal | Carbohydrates: 5.9g | Protein: 42g | Fat: 4.6g | Saturated Fat: 1.9g | Sodium: 151mg | Potassium: 140mg | Vitamin A: 16IU | Vitamin C: 34mg | Calcium: 23mg | Iron: 60mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான ருசியில் செட்டிநாடு மட்டன் எலும்பு குழம்பு ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்கள்!