Home அசைவம் எப்பவும் ஒரே மாதிரியான சிக்கன் வறுவல் செய்யாம ஒரு தடவை இந்த டிஃபரண்டான நல்லாம்பட்டி சிக்கன்...

எப்பவும் ஒரே மாதிரியான சிக்கன் வறுவல் செய்யாம ஒரு தடவை இந்த டிஃபரண்டான நல்லாம்பட்டி சிக்கன் செஞ்சு பாருங்க!

என்னதான் நம்ம சாப்பிடுற சாப்பாடு எல்லாமே ஒண்ணா இருந்தாலும் ஒவ்வொரு ஊருக்கும் ஒரு தனி ஸ்பெஷல் இருக்கும். ஒவ்வொரு ஊர்லயும் ஒவ்வொரு மாதிரியான முறையில சமைப்பாங்க அது அந்த ஊரோட ஒரு ஸ்பெஷலா இருக்கும். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஈரோடு ஸ்பெஷல் நல்லாம்பட்டி சிக்கன் தான் பார்க்க போறோம். ரொம்பவே கம்மியான பொருட்கள் வெச்சி நம்ம செய்ய போற இந்த நல்லாம்பட்டி சிக்கனோட சுவை ரொம்பவே அட்டகாசமா இருக்கும்.

-விளம்பரம்-

வெறும் சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா அதைவிட வேற சொர்க்கமே இருக்காது அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். பொதுவாக எல்லாருக்கும் சிக்கன் அப்படினாலே ரொம்ப பிடிக்கும் ஆனா அந்த சிக்கன்லயே நம்ம டிஃபரென்ட் டிஃபரண்டா ட்ரை பண்ணி சாப்டா சொல்லவா வேணும் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஒரு நாலு அஞ்சு பொருள் வைத்து நம்ம இந்த நல்லாம்பட்டி சிக்கன செமையா செஞ்சு முடிச்சிடலாம் 20 நிமிஷத்துல இந்த நல்லாம்பட்டி சிக்கன் செஞ்சு அசத்திடலாம்.

இந்த நல்லாம்பட்டி சிக்கன நம்ம எல்லாத்துக்குமே சைட் அடிச்சா வச்சுக்கலாம் வெரைட்டி ரைஸ் ஆன தயிர் சாதம் தக்காளி சாதம் நெய் சோறு புலாவ் அப்படின்னு எல்லாத்துக்குமே ஒரு பெர்ஃபெக்டான காம்பினேஷனா இந்த நல்லாம்பட்டி சிக்கன் இருக்கும். சாதம் சாதத்துக்கு கூட கொஞ்சம் ரசம் இந்த நல்லாம்பட்டி சிக்கன் வச்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் நீங்களே இந்த நல்லாம்பட்டி சிக்கனுக்கு அடிக்ட் ஆயிடுவீங்க அந்த அளவுக்கு இதோட டேஸ்ட் உங்கள மாத்திடும். இப்ப வாங்க இந்த சிம்பிளான நல்லாம்பட்டி சிக்கன் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

Print
5 from 1 vote

நல்லாம்பட்டி சிக்கன் வறுவல் | Chicken Fry Recipe In Tamil

நல்லாம்பட்டி சிக்கன் வறுவல், வெறும்சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டா அதைவிட வேற சொர்க்கமே இருக்காது அந்த அளவுக்கு சூப்பரா இருக்கும். பொதுவாக எல்லாருக்கும் சிக்கன் அப்படினாலே ரொம்ப பிடிக்கும் ஆனா அந்த சிக்கன்லயே நம்ம டிஃபரென்ட் டிஃபரண்டா ட்ரை பண்ணி சாப்டா சொல்லவா வேணும் இன்னும் ரொம்பவே பிடிக்கும். ஒரு நாலு அஞ்சு பொருள் வைத்து நம்ம இந்த நல்லாம்பட்டி சிக்கன செமையா செஞ்சு முடிச்சிடலாம் 20 நிமிஷத்துல இந்த நல்லாம்பட்டி சிக்கன் செஞ்சு அசத்திடலாம்.
Prep Time5 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamil nadu
Keyword: நல்லாம்பட்டி சிக்கன் வறுவல்
Yield: 4
Calories: 354kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ சிக்கன்
  • 1/4 கிலோ சின்ன வெங்காயம்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 கொத்து கருவேப்பிலை
  • 4 காய்ந்த மிளகாய்
  • 1 டீஸ்பூன் மிளகு தூள்
  • உப்பு தேவையான அளவு
  • நல்லெண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
  •  
    ஒரு கடாயில் நல்லெண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்
  • சின்ன வெங்காயம் நன்று வதங்கிய பிறகு காய்ந்த மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து வதக்கி விடவும். பிறகு அதில் கழுவி வைத்துள்ள சிக்கனை சேர்த்து ஐந்து நிமிடங்களுக்கு நன்றாக வதக்கிக் கொள்ளவும்
  • பிறகு அதனுடன் மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து பத்து நிமிடங்கள் நன்றாக வேக விடவும்.
  • சிக்கன் நன்கு வெந்து வந்த பிறகு அதில் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான சிம்பிளான நல்லாம்பட்டி சிக்கன் தயார்.

செய்முறை குறிப்புகள்

இது நாம் சேர்க்கின்ற நல்லெண்ணெய் தான் இந்த நல்லாம்பட்டி சிக்கனுக்கு ஒரு நல்ல வாசனை கொடுக்கும்

Nutrition

Serving: 200g | Calories: 354kcal | Carbohydrates: 34g | Protein: 12g | Potassium: 398mg | Calcium: 12mg

இதையும் படியுங்கள் : ருசியான கொங்கு நாட்டு சிக்கன் பிரியாணி ஒரு முறை இப்படி வீட்டில் ட்ரை பண்ணி பாருங்க எவ்வளவு பிரியாணி செய்தாலும் காலியாகும்!