ருசியான சிக்கன் புலாவ் ரம்ஜான் ரெசிபி இப்படி செய்து பாருங்க! பிரியாணிலா தோத்துரும்!

- Advertisement -

ஆஃப்கானி சிக்கன் புலாவ் – ரம்ஜான் ரெசிபி. எளிமையான சுவையான முறையில் செய்யப்படும்.
பொதுவாக பலருக்கு எளிமையான முறையில் சரியான பக்குவத்தில் செய்யப்படும் சிக்கன் புலாவ் மிகவும் பிடிக்கும்.. இது அதிகம் திகட்டாது ரம்ஜான் சமயத்தில் அதிகம் திகட்டாத இந்த புலாவ், எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம்.

-விளம்பரம்-

இதையும் படியுங்கள் : காரசாரமான சிக்கன் பார்லி சூப் இப்படி ஒரு தரம் செஞ்சி சுவைத்து பாருங்க!

- Advertisement -

இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.

Print
4 from 3 votes

சிக்கன் புலாவ் – ரம்ஜான் ரெசிபி | Chicken Pulao – Ramzan Recipe in Tamil

ஆஃப்கானி சிக்கன் புலாவ் – ரம்ஜான் ரெசிபி. எளிமையான சுவையான முறையில் செய்யப்படும் ஆஃப்கானி சிக்கன் புலாவ்!!! பொதுவாக பலருக்கு எளிமையான முறையில் சரியான பக்குவத்தில் செய்யப்படும் சிக்கன் புலாவ் மிகவும் பிடிக்கும்.. இது அதிகம் திகட்டாது ரம்ஜான் சமயத்தில் அதிகம் திகட்டாத இந்த புலாவ், எளிமையான முறையிலும், சுவையாகவும் எப்படி செய்வதென்றுதான் நாம் இப்பொழுது பார்க்கப்போகிறோம். இந்த மாரி உங்க வீட்டில் இருப்போருக்கு செய்து கொடுத்தால் போதும் அவளவுதான் உங்களை பாராட்டிக்கிட்டே இருப்பாங்க. அதுமட்டும் அல்லாமல் மீண்டும் எப்போ செய்விக்கணும் கேட்பாங்க, ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கும் இந்த சிக்கன் புலாவ். இதை எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் செய்து அசத்துங்கள். எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க.
Prep Time20 minutes
Active Time1 hour 10 minutes
Total Time1 hour 30 minutes
Course: LUNCH
Cuisine: indiam, TAMIL
Keyword: Chicken, சிக்கன்
Yield: 4 People
Calories: 209.9kcal

Equipment

  • 1 பிரஷர் குக்கர்
  • 1 கடாய்
  • 1 பெரிய பவுல்

தேவையான பொருட்கள்

  • 3 கப் அரிசி
  • 1 கிலோ சிக்கன்
  • 3 நறுக்கியது வெங்காயம்
  • 3 நறுக்கியது தக்காளி
  • 1 tsp மிளகாய்த்தூள்
  • 3 பச்சை மிளகாய் நறுக்கியது
  • 5 பல் பூண்டு நறுக்கியது
  • 1 tsp இஞ்சி நறுக்கியது
  • 2 துண்டு பட்டை
  • 8 ஏலக்காய்
  • 1 tsp மல்லி பொடி
  • 1 tsp சீரக பொடி
  • 4 கிராம்பு
  • 2 tsp எண்ணெய்
  • 5 1/2 கப் தண்ணீர்
  • துருவிய கேரட் தேவையான அளவு
  • உலர் திராட்சை தேவையான அளவு

செய்முறை

  • முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை முற்றிலும் வடித்துக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அத்துடன் இஞ்சி, பூண்டு, கிராம்பு, பட்டை, மல்லி, ஏலக்காய், உப்பு மற்றும் 5 1/2 கப் தண்ணீர் ஊற்றி, 30 நிமிடம் வேக வைக்க வேண்டும்.
  • பின்பு சிக்கன் துண்டுகளை தனியாக ஒரு தட்டில் வைத்துக் கொண்டு, அந்த நீரை வடிகட்டி, தனியாக 5 கப் சிக்கன் வேக வைத்த நீரை ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.
  • பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதப்பி, பின் அதில் சிக்கன் துண்டுகள், தக்காளி, பச்சை மிளகாய், மிளகாய் தூள் மற்றும் சீரகம் சேர்த்து நன்கு வதக்கி விட வேண்டும்.
  • பின்னர் அதில் சிக்கன் வேக வைத்த நீர் மற்றும் அரிசியைக் கழுவிப்போட்டு, உப்பு சிறிது சேர்த்து, மூடி வைத்து குறைவான தீயில் வேக வைக்க வேண்டும். சாதத்தை தண்ணீர் வற்றி, சாதம் வெந்ததும், அதில் உலர் திராட்சை மற்றும் துருவிய கேரட் தூவி அலங்கரித்தால், ஆஃப்கானி சிக்கன் புலாவ் ரெடி!!!

Nutrition

Serving: 500g | Calories: 209.9kcal | Carbohydrates: 34.5g | Protein: 8.8g | Fat: 6.1g | Saturated Fat: 0.7g | Polyunsaturated Fat: 0.1g | Sodium: 10.5mg | Potassium: 414.9mg | Fiber: 5g | Sugar: 2.9g | Vitamin A: 29.3IU | Vitamin C: 61.1mg | Calcium: 2mg | Iron: 4.7mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here