குழந்தைகளுக்கு சிறு வயது முதல் எப்படி உணவு கொடுக்க வேண்டும் ? பெற்றோர்கள் செய்யும் தவறுகள் ?

- Advertisement -

குழந்தைகள் பிறந்த நாளிலிருந்து முதல் ஆறு மாதங்கள் தாய்ப்பால் மட்டுமே குடிக்கும் இதுவரையிலும் பெற்றோர்களுக்கு குழந்தையின் சாப்பாடு விஷயத்தில் எந்த பிரச்சனையும் வராது. ஆனால் அந்த வயதை தாண்டும் போது குழந்தைகள் சாப்பிட அடம் பிடிக்கும், சத்தான உணவை சாப்பிடாது, இந்த மாதிரி சமயங்களில் பெற்றோர்கள் குழந்தைகளை சதிட்டி கொண்டே சாப்பாடு கொடுப்பது, அதட்டி சாப்பிட வைப்பது, சிறிதாக உணவு கொடுத்து விட்டு அதன்பின் தண்ணீர் கொடுப்பது, குழந்தைகளை வற்புறுத்தி சாப்பிட வைப்பது, முரட்டுத்தனமாக சாப்பிட வைப்பது, இது போன்ற செயல்களில் பெற்றோர்கள் ஈடுபடும் போது குழந்தைகள் உணவை கண்டாலே மிரண்டு ஓடிவிடும். கீழ்வரும் தொகுப்பில் எப்படி குழந்தைகளுக்கு சாப்பிட உணவு கொடுக்க வேண்டும் எப்படி சாப்பிட சொல்லித் தர வேண்டும் என்பதை பார்க்கலாம்.

-விளம்பரம்-

குழந்தையே குடும்பத்தோடு சாப்பிட வையுங்கள்

பெற்றோர்கள் குழந்தைகள் நடந்து கொண்டே சாப்பாடு கொடுத்தால் சாப்பிடுகிறது என்றும் தங்களுக்கு நேரம் கிடைக்கும் நேரத்தில் சாப்பாடு கொடுப்பது இது போன்ற சாப்பிட வைக்காதீர்கள். குடும்பமாக அமர்ந்து சாப்பிட வையுங்கள் குழந்தைகள் தாங்களாவே சாப்பிட ஆரம்பிக்கும் போது குழந்தைக்கு தனியாக சாப்பாடு செய்யாமல் நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டையே குழந்தைகள் தட்டிலும் வைத்து சாப்பிட பழகங்குங்கள். கடினமான சாப்பாடு தோசை, இட்லி, காய்கறிகள், சப்பாத்தி போன்ற உணவுகள் பெரியதாக இருப்பினும் சிறிது சிறிதாக பிய்த்து சாப்பிட கொடுங்கள். பெற்றோர்கள் தங்கள் குழந்தையுடன் அமர்ந்து சாப்பிடும் பொழுது குழந்தைகள் பெற்றவர்களுடன் உணவை விரும்பி சாப்பிட தொடங்குவார்கள். இது மாதிரியான விஷயங்களை குழந்தைகளிடம் செய்து பழக்குங்கள் முதலில் இருந்தே.

- Advertisement -

குழந்தையை சாப்பிட வைக்க ஊக்கப்படுத்துங்கள்

குழந்தை சாப்பாட்டை சாப்பிடாமல் தவிர்க்கும் பட்சத்தில் குழந்தையை திட்டாமலும் அடிக்காமலும் பணிவாக பேசி குழந்தை பார்க்கும் கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வைத்து நீ இதை சாப்பிட்டால் அவர்கள் போல் மாறிவிடலாம், நீ தனியாக எங்கு வேண்டுமானாலும் செல்லலாம், வேகமாக ஓடலாம் விளையாடலாம் என்று சொல்லி குழந்தையை ஊக்கப்படுத்துங்கள். அதே மாதிரியாக குழந்தையை பத்திரமாக மற்றும் பாசமாக பார்த்துக் கொள்கிறோம் என்ற பெயரில் பசியைத் தாண்டி அதிகமாக சாப்பிட வைக்காதீர்கள் இது மிகவும் தவறான பழக்கம். இப்படி செய்வதால் நாளடைவில் குழந்தையை எடை அதிகரித்துக் கொண்டு உடல் பருமன் நோய் வந்துவிடும்.இதில் பெற்றோர்கள் முதலில் கவனமாக இருக்க வேன்டும்.

குழந்தைகளே அதிகப்படியான அழுத்தத்தை கொடுக்காதீர்கள்

நீங்கள் உங்கள் குழந்தையே ஒரு விஷயத்தை திரும்பத் திரும்ப சொல்லி வற்புறுத்துவது என்பது அது மிகவும் மோசமான விளைவுகளை மட்டுமே உண்டாக்கும். இது குறித்து குழந்தை நிபுணர் கூறுகையில் பெற்றோர்கள் இவ்வாறு குழந்தைகளுக்கு அதிக அழுத்தம் கொடுப்பதினால் குழந்தைகள் எளிதாக மனச்சோர்வு அடைவார்கள். குழந்தைகள் அரிசி வகை உணவுகளை சாப்பிடுவதற்கு விரும்பவில்லை என்றால் குழந்தைக்கு பிடித்தவாறு விதவிதமான உணவுகளை சமைத்துக் கொடுங்கள். இப்படியாக செய்யும் பட்சத்தில் குழந்தைகள் நாளடைவில் உணவுகளை அவர்களே சாப்பிட எடுத்துக் கொள்வார்கள்.கொஞ்சம் கொஞ்சமாக குழந்தையை மாற்ற நினையுங்கள் ஒரேடியாக
மாற்றதை காணவேன்டும் என என்னாதீர்கள்.

குழந்தைகள்..

குழந்தைகளுக்கு லஞ்சம் கொடுப்பதை தவிர்க்கவும்

குறிப்பாக இந்த கால பெற்றோர்கள் அனைவருமே குழந்தையை சாப்பிட வைப்பதற்காக பயன்படுத்தும் முறை சாப்பிட்டால் தான் போன் தருவேன்.இதை முற்றிலும் முதலில் தவிருங்கள். இது மட்டும் இன்றி இந்த உணவு சாப்பிட்டால் உனக்கு பிடித்தமான கேக், சாக்லேட், ஐஸ்கிரீம் போன்ற உணவுகளை தருவதாக கூறி செய்யும் செயல்களும் மோசமான விளைவுகளை தரும் நாளடைவில். குழந்தைகள் நீங்கள் சாப்பிட்டால் இனிப்பு தருவீர்கள் என்று வேண்டா வெறுப்பாக உணவை சாப்பிட்டுவிட்டு அந்த இனிப்பு வகையை மிகவும் மதிப்பானாக கருதும் ஆகையால் இனிப்பு வகைகளை கொடுத்து குழந்தைகளை மயக்குவதை விட நல்ல இனிப்பான பழங்கள், சத்தான பழங்கள் போன்ற பழ வகைகளை கொடுத்து பழகுங்கள்.

-விளம்பரம்-

குழந்தைகளுக்கு தனியாக சமைக்க வேண்டாம்

நீங்கள் சமைக்கும் பொழுது பெரியவர்களுக்கு தனியாக குழந்தைகளுக்கு தனியாக சமைப்பது என்ற முறையை கைவிட்டு விடுங்கள். நீங்கள் சமைப்பதை முடிவு செய்வதற்கு முன்பு நீங்கள் சமைக்கும் சாப்பாட்டில் குழந்தைகளுக்கு பிடித்த ஒரு உணவையும் சேர்த்து சமைத்து விடுங்கள் பிறகு எப்பொழுதும் போல் சாப்பாடு செய்யுங்கள். நீங்கள் குழந்தைக்குப் பிடித்த ஒரு உணவு சமைப்பதன் மூலம் குழந்தைகள் மீதமிருக்கும் உணவையும் தவிர்க்க மாட்டார்கள். உதாரணமாக சமையல் செய்யும்போது பெரியவர்களுக்கு வேக வைத்தது போல் இல்லாமல் குழந்தைக்கு இன்னும் சற்று கொஞ்சம் அதிகமாக வேக வைத்த உணவை கொடுங்கள். இவ்வாறு நீங்கள் செய்கிறீர்கள் என்றால் அனைவருக்கும் அனைத்து சத்துக்களும் போய் சேரும் நீங்கள் தனித்தனியாக சாப்பாடு செய்யும் பொழுது சில சத்துக்கள் அனைவருக்கும் சென்று சேர்வதில்லை இதை முதலில் பெற்றோர்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here