- Advertisement -
கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு சைனீஸ் ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல் சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
-விளம்பரம்-
- Advertisement -
சைனீஸ் இறால் வறுவல் | Chinese Prawn Fry Recipe in Tamil
கடல்வாழ் உயிரினங்களில் இறால் ரொம்பவும் வித்தியாசமானது. சிறிய மற்றும் பெரிய பெரிய அளவுகளில் கூட கிடைக்கும் இந்த இறால் என்றால் சிலருக்கு அலாதியான ஒரு விருப்பம் உண்டு. இறால் வைத்து குழம்பு, வறுவல், இறால் 65, இறால் தொக்கு என பல உணவுகளை செய்து கொடுக்கலாம். இறால் பிரியர்களுக்கு சைனீஸ் ஸ்டைலில் ரொம்பவும் சுலபமாக செய்யக்கூடிய இந்த இறால் வறுவல் சுவையாக எப்படி செய்யலாம்? என்பதை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Yield: 4 people
Calories: 158kcal
Equipment
- 1 கடாய்
தேவையான பொருட்கள்
- 500 கிராம் உரித்த இறால்
- 2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ்
- 1 மேஜைக்கரண்டி மிளகாய் வற்றல் விழுது
- 1 சிட்டிகை சைனீஸ் உப்பு
- 4 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர்
- 3 மேஜைக்கரண்டி இஞ்சி,பூண்டு விழுது
- 1 முட்டையின் வெள்ளைப் பகுதி
- 1 தேக்கரண்டி உப்பு
- 4 மேஜைக்கரண்டி தண்ணீர்
- 1 லிட்டர் எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
செய்முறை
- முட்டையின் வெள்ளைப் பகுதி, 3 மேஜைக்கரண்டி கார்ன்ஃபிளோர், உப்பு, தண்ணீர், எண்ணெய் இவற்றைச் சேர்த்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.
- அந்த கலவையில் இறாலை 20 நிமிடம் ஊர வைக்கவும். தக்காளிசாஸ், சைனீஸ் உப்பு, மீதமுள்ள கார்ன்ஃபிளோர், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய் வற்றல் விழுது ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும்.
- தேவையான அளவு எண்ணெயைச் சூடாக்கி, ஊர வைத்த இறாலைபொன்னிறமாக வறுத்து எடுக்கவும். 3 மேஜைக்கரண்டி எண்ணெயை சூடாக்கி தக்காளி சாஸ் கலவையை 1 நிமிடம் வதக்கவும்.
- இதில் இறாலைக் கலந்து மேலும் 5 நிமிடம் வதக்கவும். இறால் – சைனீஸ் ஸ்டைல் ரெடி!
Nutrition
Serving: 200g | Calories: 158kcal | Carbohydrates: 13.8g | Protein: 15g | Fat: 4.3g | Fiber: 1.1g | Sugar: -1g