Advertisement
சைவம்

அசத்தலான கொத்தவரங்காய் புளிக்குழம்பு  எப்படி சுவையாக செய்வது? இது தெரிஞ்சா இனி புளி குழம்பு இப்படித்தான் வைப்பீங்க!

Advertisement

புளிக்குழம்பு அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும் புளிக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான புளிக் குழம்புக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு. அந்த வகையில் இப்படிப்பட்ட புளி குழம்பு எப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்த சமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அறுசுவைகளும் நிறைந்தது தான் நமது பாரம்பரியமான உணவு. அன்றாடம் நாம் அறுசுவையையும் நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடம்பில் எந்தவித நோய்களும் ஏற்படாது என்று தான் அந்த காலத்தில் அறுசுவை உணவு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் இப்பொழுது நாம் அதில் சில சுவைகளை அறவே சேர்ப்பதில்லை. அவற்றில் ஒன்றுதான் கசப்பு சுவை. கசப்பு சுவை நிறைந்த பொருட்கள் ஒன்று தான் கொத்தவரங்காய் . கசப்பு சுவை தெரியாமல் எப்படி கொத்தவரங்காய்  வைத்து குழம்பு செய்வது என்று தான் இந்த சமையல் குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

Advertisement

கொத்தவரங்காய் உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள நரம்புகளை வலுப்படுத்தும் சக்தி கொத்தவரங்காய்க்கு உண்டு. கொத்தவரங்காய் ஒரு வலி நிவாரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது. அப்படிப்பட்ட இந்த கொத்தவரங்காய் வைத்து எப்படி கொத்தவரங்காய் புளிக்குழம்பு செய்வது என்று பார்ப்போம்.

கொத்தவரங்காய் புளிக்குழம்பு | Cluster Beans Pulikulambu In Tamil

Print Recipe
Advertisement
புளிக்குழம்பு அல்லது கல்யாண வீடுகளில் கொடுக்கும்புளிக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். இந்த சுவையான புளிக்குழம்புக்கு அடிமையாகி போனவர்களும் உண்டு. அந்த வகையில் இப்படிப்பட்ட புளி குழம்புஎப்படி வீட்டிலேயே ரொம்ப சுலபமாக அற்புதமான சுவையில் தயாரிப்பது? என்பதைத் தான் இந்தசமையல் குறிப்பு சார்ந்த பதிவின் மூலம் நாம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.
Course Kulambu
Cuisine tamil nadu
Keyword Cluster Beans Pulikulambu
Prep Time 5 minutes
Cook Time 10 minutes
Servings 4
Calories 153

Equipment

  • 1 கடாய்

Ingredients

  • 1/4 கிலோ கொத்தவரங்காய்
  • 1 பெரிய வெங்காயம்
  • 2 தக்காளி
  • புளி நெல்லிக்காய்அளவு
  • 1 கைப்பிடி கறிவேப்பிலை
  • 1 கைப்பிடி கொத்துமல்லி தழை
  • உப்பு தேவைக்கேற்ப
  • நல்லெண்ணெய் தேவைக்கேற்ப

அரைக்க

  • 1/2 கப் தேங்காய்
  • 1/2 டீஸ்பூன் மிளகாய் பொடி
  • 1/2 டீஸ்பூன் மல்லி பொடி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் பொடி

தாளிக்க

  • 1 டீஸ்பூன் எண்ணெய்
  • 1/2 டீஸ்பூன் கடுகு
  • 1/2 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 1/2 டீஸ்பூன் கடலை பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்

Instructions

  •  கொத்தவரங்காயை தண்ணீரில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
  • மிக்ஸியில் தேங்காய், மிளகாய் பொடி மல்லி பொடி, மஞ்சள் பொடி ஆகியவற்றை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து எடுத்து கொள்ளவும்.
  • வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி, பின் வெங்காயம், தக்காளி, தேவையான உப்பு சேர்த்து வதக்கவும்
  • பின்னர், அரைத்து வைத்த கலவையை ஊற்றி , கொதிக்க விடவும். வேகவைத்த காயை சேர்த்து. எண்ணெய் பிறிது வந்ததும், இறக்கிவிடவும்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: இந்த குழம்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம்

Nutrition

Serving: 100g | Calories: 153kcal | Carbohydrates: 20g | Protein: 7g | Fat: 6g | Sodium: 402mg | Fiber: 5g
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

18 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago