மறந்தும் கூட வீட்டின் சமையல் அறை மேடையில் இந்த 6 பொருளை வைக்காதீர்! மீறி வைத்தால் பெரிய பண கஷ்டம் வரும்!

- Advertisement -

நாம் சமையலறையில் சமையலுக்கு பயன்படுத்துவதற்காக பல டப்பாக்களை வைத்து அதில் எல்லாம் சமையலுக்கு தேவையான பொருட்களை எல்லாம் போட்டு தனித்தனியாக பிரித்து வைத்திருப்போம். அது மட்டும் இல்லாமல் நாம் சமையலுக்கு உதவியாக இருக்கும் சின்ன சின்ன பொருட்களை கூட சமையல் மேடயில் தான் வைத்திருப்போம். இப்படி நாம் சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து பொருட்களும் அன்னபூரணி தேவியின் ஆசீர்வாதம் பெற்ற பொருள்கள் தான் இருந்தாலும் கூட நாம் சில பொருட்களை சமையலறை மேடையில் வைக்கும் போது அந்த பொருட்களால் நமக்கு பெரும் பணம் கஷ்டம், குடும்ப கஷ்டம் வர வாய்ப்புள்ளது அது என்னென்ன பொருட்கள் என்று நாம் இந்த ஆன்மீகம் குறித்த தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள்.

-விளம்பரம்-

கருவாடு

முதலாவதாக ஒரு சிலர் வீட்டில் எப்போதும் கருவாட்டு பொருள்களை சேமித்து வைத்திருப்பார்கள் அதாவது. நெத்திலி கருவாடு, மத்தி மீன் கருவாடு எப்படி சில கருவாடு வகைகளை வீட்டில் எப்போதும் இருக்கும் படி வைத்திருப்பார்கள். மறந்தும் கூட இப்படி நாம் வைத்திருக்கும் கருவாடு டப்பாவை சமையல் மேடையில் வைக்க கூடாது ஏன் சமையல் மேடையின் அருகில் உள்ள அலமாரிகளில் கூட வைக்க கூடாது. இதை நீங்கள் சமையல் மேடைக்கு கீழ் உள்ள அலமாரி மற்றும் சமையல் மேடையின் கீழ் பக்கம் இது போன்ற இடங்களில் வைத்துக் கொள்ளலாமே தவிர சமையல் மேடையின் மேல் பக்கமும் சமையல் மேடையிலும் வைக்க கூடாது.

- Advertisement -

கருப்பு உளுந்து, கருப்பு எள், எண்ணெய்

பொதுவாக சமையல் அறையில் அடுப்பின் பக்கத்தில் நாம் சில பொருட்களை மட்டும் நாம் வைத்துக் கொள்ளலாம் அது என்னவென்றால் கல் உப்பு, தூள் உப்பு ஏன் மஞ்சள், மஞ்சள் பொடியை கூட நம் சமையல் அறையின் சமையல் மேடையில் அடுப்பின் அருகில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். ஏனென்றால் இந்த பொருட்கள் நமக்கு மங்களத்தை கொடுக்கக்கூடிய பொருட்கள். அதேபோல் சமையல் மேடையில் கருப்பு உளுந்து, கருப்பு எள்ளு, எண்ணெய் வகைகள் மற்றும் ஊறுகாய் இது போன்ற பொருட்களை எல்லாம் சமையல் மேடையில் மற்றும் சமையல் மேடையின் மேல் பக்கத்தில் வைப்பதை கூட தவிர்த்துக் கொள்ளுங்கள்.

எந்த பொருட்கள் வைக்கலாம்

சமையலறை மேடையில் எப்போதும் ஒரு சொம்பு நிறைய தண்ணீர் வைத்திருக்க வேண்டும். மேலும் உங்கள் சமையலறையில் அடுப்பின் வலது பக்கமாக நீங்கள் கல் உப்பு, தூள் உப்பு, மஞ்சள், நெய் போன்ற இந்த பொருட்களை வைக்கும்போது உங்கள் வீட்டிற்கு மங்களம் உண்டாவதோடு, லட்சுமி கடாட்சமும் சேர்ந்து கிடைக்கும். சிலர் கல் உப்பை சமையலறையில் வேறு ஏதாவது ஒரு இடத்தில் வைத்திருப்பார்கள். இதில் ஒன்றும் பெரிய தவறு கிடையாது இருந்தாலும் நீங்கள் சமையலறையில் அடுப்பின் வலது பக்கம் ஒரு சிறிய கிண்ணத்தில் ஆவது சிறிது கல் உப்பு போட்டு வைத்திருப்பது சிறப்பானதாக இருக்கும் ஏன் உங்கள் வீட்டில் பண வரவை கூட இது அதிகரிக்கும்.

பெண்கள் இரவு இதை மறக்காமல் செய்யுங்கள்

நமது வீட்டில இருக்க கூடிய பெண்கள் அதிகம் நேரம் செலவிடுவது சமையலறையில் தான் அந்த சமையலறையை எப்போதும் சுத்த பத்தமாக வைத்து இருக்க வேண்டும். இன்னும் சில பெண்கள் சமையலறையே பூஜை அறை போல வைத்திருப்பார்கள். மேலும் வீட்டில் உள்ள பெண்கள் இரவு தூங்குவதற்கு முன்பாக உங்கள் வீட்டில் இருக்கும் எச்சில் பாத்திரங்களை முழுவதுமாக சுத்தம் செய்து வைத்துவிட்டு உங்கள் சமையல் மேடையையும் நன்கு சுத்தம் செய்துவிட்டு தூங்க சொல்லும்போது உங்களுக்கு நிம்மதியான தூக்கமும் கிடைக்கும் உங்கள் வீட்டிற்கு ஒரு லட்சுமி கடாட்சமும் சேர்த்து கிடைக்கும்.

-விளம்பரம்-

அன்னபூர்ணி

மேலும் சமையல் அறையில் தென்கிழக்கு மூலையில் அன்னபூரணி தேவியின் புகைப்படத்தை வைத்திருப்பது இன்னும் சிறப்பானதாக இருக்கும். சமையல் அறையில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்களை நீங்கள் சரியாக செய்து வந்தால் உங்கள் வீட்டில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கே இடம் இருக்காது சொல்லப்போனால் நான் மேலே சொன்ன விஷயங்களை நீங்கள் சரியாக செய்து வந்தால் உங்கள் வீட்டில் பண வரவு என்பது அதிகரிக்கும், சேமிப்பு இல்லாமல் இருக்கும் உங்கள் வீட்டில் சேமிக்க ஆரம்பித்து விடுவீர்கள். அதனால் உங்கள் வீட்டில் நிம்மதியும் சந்தோஷமும் பெருசாகவே இருக்கும் நம்பிக்கையோடு இந்த விஷயங்களை செய்து பார்க்கலாம் நல்ல பலனை உங்களுக்கு கிடைக்கும்.

இதையும் படியுங்கள் : பணம் தடையே இல்லாமல் உங்களிடம் சேர்ந்து கொண்டே இருக்க வேண்டுமா ? உங்கள் கையில் 5 மிளகு இருந்தால் மட்டும் போது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here