தோசை தென்னிந்தியாவின் மிகப் பழமையான உணவு வகைகளில் ஒன்றாகும். குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய உணவுப்பட்டியலில் முக்கிய இடம்பெற்றுள்ள இட்லியும் தோசையும் தான். அதில் பல வீடுகளில் குட்டீஸ்களின் விருப்பமாக உள்ளது தோசை தான். இவை மிகவும் பிரபலமான மற்றும் பலரால் விரும்பி உண்ணப்படும் காலை உணவு. இதை வெகு எளிதாக செய்துவிடலாம். இன்று நாம் ஒரு அட்டகாசமான மற்றும் அற்புதமான சுவையில் இருக்கும் ஒரு தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நாம் வீட்டில் அடிக்கடி தோசை சுட்டு இருக்கிறோம். அதிகபட்சமான அளவு முட்டை தோசை மட்டும் தான் செய்திருப்போம். ஆனால் இன்று மிகவும் வேகமாகவும், எளிமையாகவும் செய்யக்கூடிய வெள்ளரிக்காய் தோசை ரெசிபி பற்றி தான் பார்க்க போகிறோம்.
பெரும்பாலும் காலை உணவாக இட்லி, தோசை போன்றவற்றை தான் காலை உணவாக செய்வோம். இந்த காலை டிபனுக்கு எப்போதும் ஒரே மாதிரி தோசை செய்து போரடித்து விட்டதால் புதுவிதமான தோசை செய்து சாப்பிட விரும்புகிறீர்களா. அப்படியென்றால் இந்த புதுவிதமான ‘வெள்ளரிக்காய் தோசை’ ரெசிபி உங்களுக்காக தான். வெள்ளரிக்காய் மருத்துவ குணம் நிறைந்த காய். இது மற்ற காலங்களை விட கோடை காலத்தில் அனைவரும் அதிகம் உட்கொள்ளப்படும். ஏனென்றால், இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே, உடலில் நீர்சத்து குறையாமல் இருக்க உதவும். செரிமானத்தை தூண்டும் பண்பு இதற்கு உண்டு. எடை குறைப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். இதில், சோடியம், கால்சியம், மக்னேசியம், இரும்பு, பாஸ்பரஸ், கந்தகம், சிலிகன், குளோரின் போன்ற தாதுப்பொருட்கள் உள்ளது. அந்தவகையில் குழந்தைகளுக்கு ஏற்ற ஒரு தோசையை வெள்ளரிக்காய் வைத்து எப்படி செய்வது என இந்த பதிவில் பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் தோசை | Cucumber Dosa Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 மிக்ஸி
- 1 தோசை கல்
தேவையான பொருட்கள்
- 2 வெள்ளரிக்காய்
- 1 கப் ரவை
- 1/4 கப் அரிசி மாவு
- 1/4 கப் தயிர்
- 4 பச்சை மிளகாய்
- 1 டீஸ்பூன் மிளகு
- 1 டீஸ்பூன் சீரகம்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- முதலில் வெள்ளரிக்காய் தோல் சீவி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் நறுக்கிய வெள்ளரிக்காய், தயிர், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- பின் இதை ஒரு பவுளுக்கு மாற்றி ரவை, அரிசி மாவு, உப்பு, மிளகு, சீரகம் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கட்டிகள் இல்லாமல் கலந்து சிறிது நேரம் ஊற விடவும்.
- பின் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் அதில் ஒரு கரண்டி மாவை தோசையாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு இரண்டு பக்கமும் வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- அவ்வளவுதான் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெள்ளரிக்காய் தோசை தயார். இதற்கு வெல்லம் தொட்டு சாப்பிட்டால் மிகவும் அருமையாக இருக்கும்.
Nutrition
இதனையும் படியுங்கள் : இந்த வெயிலுக்கு ஏற்ற வெள்ளரிக்காய் ஜூஸ் இப்படி செஞ்சு டெய்லி குடிங்க!