வாழ்க்கையில் முன்னேற செய்ய வேண்டிய வஸ்திர தானம்!!

- Advertisement -

சாஸ்திர முறைப்படி நம்முடைய வஸ்திரத்தை தானம் செய்வது மிகப்பெரிய தானமாக கருதப்படுகிறது. வஸ்திர தானத்தில் இரண்டு வகை உள்ளது ஒன்று புதியதாக ஆடைகள் எடுத்துக் கொடுப்பது மற்றும் பழைய ஆடைகளை மற்றவர்களுக்கு தானமாக கொடுப்பது. ஒரு சிலருக்கு பழைய ஆடைகளை தானமாக கொடுப்பது நல்லதா கெட்டதா என்ற சந்தேகம் இருக்கும். அந்த சந்தேகத்திற்கான விடையை பற்றி இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-

புதிய ஆடைகள் தானம்

பொதுவாக சாஸ்திரங்கள் புதிய ஆடைகளை தானம் செய்வதையே தர்மமாக கூறுகிறது. பித்ரு திதி ஹோமங்கள் மத சடங்குகள் போன்ற தர்மப்பணிகளில் வஸ்திர தானம் செய்வது ஒரு சிலருக்கு வழக்கமாக இருக்கும். பழைய ஆடைகளை ஒரு சிலர் உபகார பணியாக நினைத்து செய்வார்கள். ஒருவருக்கு மனம் உவந்து புண்ணியத்திற்காக புதிய வஸ்திரங்களை தானம் செய்தால் அதுதான் மிகச் சிறப்பான ஒன்று. பழைய வஸ்திரங்களை உபயோகப்படுத்தி விட்டு தானம் செய்வது கருணையின் அடிப்படையில் செய்யக்கூடிய ஒரு உதவியாக கருதப்படுகிறது அது தர்மமாக கருதப்படாது.

- Advertisement -

ஏழைகள் ஆதரவற்றோர்களுக்கு தானம்

பொதுவாக பழைய துணிகளை நம் சமூகத்தில் அதிகமாக இருக்கக்கூடிய ஏழைகள், ஆதரவற்றோர்கள், அகதிகள், முதியோர் இல்லங்கள் போன்றவைகளுக்கு தானமாக கொடுப்பது வழக்கம். நல்ல நிலையில் இருக்கக்கூடிய துணிகளை தானம் செய்வது சமூக கடமையாக கூட கருதப்படுகிறது. ஒருவருடைய குப்பை மற்றவர்களுக்கு புதையல் என்று கூறுவார்கள். அதேபோலத்தான் நம்முடைய பழைய வஸ்திரங்கள் ஒரு சிலருக்கு புதியதாக தெரியும். மனப்பூர்வமான கருணை கொண்டு செய்யும் உதவியாகத்தான் இந்த பழைய ஆடைகளை தானம் செய்யும் பழக்கம் கருதப்படுகிறது. இத்தகைய செயல் மன அமைதியையும் ஆனந்த உணர்வையும் கொடுக்கும் பழைய துணிகளை தர்மமாக வழங்குவது சாஸ்திர ரீதியாக தானமாக கருதப்படாவிட்டாலும் வாழ்க்கையில் அது ஒரு மிகப்பெரிய உதவியாகவும் நல்ல செயலாகவும் உள்ளது.

கிழிந்த ஆடைகள் தானம்

நாம் ஆதரவற்றவர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுக்கக்கூடிய வஸ்திரமானது மிகவும் கிழிந்த நிலையில் இருக்கக் கூடாது. அப்படி மிகவும் கிழிந்த நிலையில் இருக்கக்கூடிய துணிகளை கொடுப்பது பாவமாக கருதப்படுகிறது. ஒரு சிலர் மிகவும் மோசமான நிலையில் இருக்கக்கூடிய துணிகளை மற்றவர்களுக்கு கொடுப்பார்கள். இது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது இது வஸ்திர சாபத்தை உண்டாக்கும். ஆதரவற்றவர்களுக்கு உங்களுடைய வஸ்திரத்தை தானமாக செய்தாலும் அது நல்ல நிலையில் உள்ளதா என்பதை பார்த்துவிட்டு பிறகு கொடுக்க வேண்டும். ஆதரவற்றவர்களுக்கு வஸ்திர தானம் செய்வது புண்ணியத்தை சேர்த்து கொடுக்கும்.

இதனையும் படியுங்கள் : தானமாக கொடுக்கக் கூடாத சில பொருட்கள்!

-விளம்பரம்-