- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- dinner
பரோட்டா பலருக்கும் பிடிக்கும். சுடச் சுடச் பரோட்டா செய்வதைப் பார்த்தாலே நாக்கில் எச்சில் ஊறும். சில கடைகள் பரோட்டாவிற்கு என்றே பெயர் போனதாக இருக்கும். எந்த உணவாக இருந்தாலும் சைட் டிஷ் மிக முக்கியம். அதுபோல் பரோட்டாவிற்கு சால்னா தான். சிக்கன் குழம்பு, மட்டன் குழம்பு வைத்து சாப்பிட்டாலும் நன்றாக இருக்கும். இருந்தாலும் சால்னா தனி சிறப்பு தான். சிலர் வீட்டுகளில் பரோட்டா செய்வர். சால்னா செய்யத் தெரியாமல் இருக்கலாம். அந்த வகையில் இங்கு மட்டன் சால்னா எப்படி செய்வது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி அல்லது பரோட்டா செய்யப் போகிறீர்களா? அதற்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். அதுவும் மட்டன் சைடு டிஷ் உங்களுக்கு பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் மட்டன் கிரேவியை செய்யாமல், இந்த முருங்கைக்காய் மட்டன் சால்னாவை செய்யுங்கள். இந்த மட்டன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த மட்டன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை சிக்கன் சால்னா ஒருமுறை இப்படி செய்து உங்கள் வீட்டில் உள்ளவர்களை அசத்தி விடுங்கள்!!
Ingredients
Method
முதலில் மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக குக்கரில் சேர்த்து நறுக்கி இரண்டு விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, சோம்பு, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி, முருங்கைக்காய் சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பிறகு சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்து அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து மிளகாய்த்தூள், கரம் மசாலா தூள், சிக்கன் மசாலா சேர்த்து ஐந்து நிமிடங்கள் வரை மூடி வைத்து நன்கு வதக்கவும்.
பின் நாம் அரைத்து வைத்துள்ள விழுது, உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி 4 விசில் விட்டு இறக்கவும். பின் குக்கரை திறந்து கொத்தமல்லி தழை தூவி கலந்து விடவும். அவ்வளவுதான் சுவையான முருங்கைக்காய் மட்டன் சால்னா தயார்.





