- Prep
- 15 min
- Cook
- 15 min
- Total
- 30 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner
நகர்ப்புறங்களில் ரோட்டுக்கடை உணவுகளுக்கு மிகப் பெரிய வரவேற்பு உள்ளது. அது சாம்பாரில் தொடங்கி சட்னி, குருமா, சால்னா என தொடர்கிறது. கையேந்தி பவன் என சொல்லப்படும் ரோட்டுக்கடை உணவுகளின் ருசி பிடித்துவிட்டால் போதும், மக்கள் அடுத்தமுறை தேடி சென்று அந்த கடையில் உணவை உண்பார்கள். பெரிய பெரிய ஹோட்டல்களை காட்டிலும் கையேந்தி பவன்களில் இருக்கும் ருசியும் தரமும் மக்களை கவர்கிறது. அந்த வகையில் இந்த பதிவில் ரோட்டுக்கடையில் பரிமாறப்படும் ஸ்பெஷல் சிக்கன் சால்னா எப்படி செய்வது என்பதை பற்றி பார்ப்போம்.
இன்று இரவு உங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யப் போகிறீர்களா? விடுமுறை என்பதால் அந்த சப்பாத்திக்கு சற்று ஸ்பெஷலான சைடு டிஷ் செய்து சாப்பிட நீங்கள் நினைக்கலாம். அதுவும் சப்பாத்திக்கு சிக்கன் சைடு டிஷ் உங்களுக்கு பிடிக்குமானால், வழக்கமாக செய்யும் சிக்கன் கிரேவியை செய்யாமல், ரோட்டு கடை சிக்கன் சால்னாவை செய்யுங்கள். இந்த சிக்கன் சால்னா கடைகளில் கொடுக்கப்படும் சால்னாவைப் போன்று நல்ல மணத்துடனும், சுவையுடனும் இருக்கும். மேலும் இது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறும் இருக்கும்.
சொல்லப்போனால் இந்த சால்னாவை நீங்கள் வீட்டில் செய்தால், ஒரு சப்பாத்தி சாப்பிடும் உங்கள் குழந்தைகள் 2 சப்பாத்தியை கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். இது சிம்பிள் ரெசிபியாக இருந்தாலும் இதை இட்லி, பரோட்டா, சப்பாத்தி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். எனவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சிக்கன் சால்னாவை எளிய செய்முறையில் வீட்டிலேயே சுவையாக எப்படி செய்யலாம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ரோட்டுக்கடை ஸ்டைலில் சுவையான மற்றும் மொறு மொறுவென்ற இந்த நெத்திலி மீன் ஃப்ரை செய்து பாருங்கள் இனி இப்படித்தான் மீன் வறுவல் செய்வீர்கள்!!
Ingredients
Method
முதலில் சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து விட்டு சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் இவை ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு சேர்த்து தாளிக்கவும்.
பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய், நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
பின் தக்காளியை சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து தக்காளி மசியும் வரை நன்கு வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்.
பின் எண்ணெய் பிரிந்து வந்ததும் சிக்கனை சேர்த்து நன்கு கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு 5 நிமிடங்கள் மூடி வைத்து வேக விடவும்.
சிக்கன் முக்கால் பதம் வெந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு பத்து நிமிடங்கள் கொதிக்க விடவும்.
சால்னா சுண்டி வந்தவுடன் கொத்தமல்லி இலை தூவி அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான ரோட்டுக்கடை சிக்கன் சால்னா தயார்.






