பொதுவா கருவாடு வச்சு கருவாட்டு குழம்பு கருவாடு ப்ரை இதுதான் அதிகமாக செய்வாங்க ஆனா கருவாடு வச்சு ஒரே மாதிரி செய்யாமல் இந்த மாதிரி ஒரு தடவை சூப்பரான கருவாடு சம்பல் செஞ்சு பாருங்க. சுடு சாதத்துக்கு போட்டு சாப்பிடுவதற்கு சூப்பரா இருக்கும். உங்க வீட்டில பழைய சாதம் நிறைய இருந்துச்சுன்னா குச்சி கருவாடு வாங்கி நல்ல வறுத்து அதுகூட சில பொருட்கள் எல்லாம் சேர்த்து மிக்ஸி ஜார்லையோ இல்லனா அம்மிலையோ வச்சு அரைச்சு பழைய சாதத்துக்கு தொட்டுக்க வச்சுக்கிட்டீங்கன்னா பழைய சாதம் இருந்த இடமே தெரியாது அந்த அளவுக்கு சட்டு சட்டுன்னு காலி ஆகிடும்.
மீன் குழம்பு வச்சு அதுக்கு தொட்டுக்க இந்த கருவாடு சம்பல் செய்யலாம். வீட்ல இருக்க கூடிய பெரியவங்க அந்த காலத்துல எல்லாம் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிடுவாங்க. அந்த காலத்துல ரெடிமேடா எந்த மசாலா பொருட்களும் கிடைக்காது அதனால வீட்ல இருக்க கூடிய பச்சை மிளகாய் காய்ந்த மிளகாய் இது எல்லாத்தையும் சேர்த்து கருவாடு கூட வச்சு கொரகொரப்பா அரைச்சு அததான் சாதத்தில் போட்டு பிசைஞ்சு சாப்பிடுவாங்க. அதே மாதிரி நீங்களும் ஒரு தடவ செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சாப்பிடுறதுக்கே அவ்ளோ ருசியா இருக்கும்.
அசைவம் சாப்பிடணும் போல இருக்கு ஆனா வீட்ல கருவாடு தவிர வேற எதுவுமே இல்ல அப்படின்னா கண்டிப்பா இந்த கருவாடு சம்பல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு ருசியா இருக்கும். கருவாடு பிடிக்காதவங்க கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இதோட டேஸ்ட் எப்படி இருக்கும்னு யோசிக்காதீங்க நிறைய மசாலாக்கள் இருக்காது தான் ஆனா இதோட டேஸ்ட் எந்த குறையும் இல்லாம அவ்வளவு ருசியா இருக்கும்.
உங்க வீட்ல இருக்கக்கூடிய பெரியவங்களுக்கு இதை செஞ்சு கொடுத்தீங்கன்னா சாப்பிட்டு அசந்து போயிடுவாங்க. அந்த காலத்துல இருக்கிறவங்களுக்கு சாப்பாட்டு விஷயத்துல இந்த மாதிரி செஞ்சு கொடுத்தா தான் அவங்கள நீங்க இம்ப்ரஸ் பண்ண முடியும். அதனால உங்க வீட்ல இருக்கறவங்க பெரியவங்கள நீங்க இம்ப்ரஸ் பண்ணனும் அப்படின்னு நினைச்சீங்கன்னா இந்த மாதிரி ஒரு தடவை கருவாடு சம்பல் செஞ்சு கொடுத்துடுங்க. இப்ப வாங்க இந்த சுவையான பாரம்பரியமான கருவாடு சம்பல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
கருவாடு சம்பல் | Dry Fish Sambol Recipe In Tamil
Equipment
- 1 பவுள்
- 1 கடாய்
- 1 மிக்ஸி
தேவையான பொருட்கள்
- 50 கி குச்சி கருவாடு
- 4 பல் பூண்டு
- 10 சின்ன வெங்காயம்
- புளி நெல்லிக்காய் அளவு
- 2 வர மிளகாய்
- 2 பச்சை மிளகாய்
- 1 கொத்து கறிவேப்பிலை
- கொத்தமல்லி சிறிதளவு
- 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு தேவையான அளவு
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை
- ஒரு பாத்திரத்தில் கருவாடு சேர்த்து சுடுதண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைத்து எடுக்கவும்.
- ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கருவாடு சேர்த்து மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே கடாயில் எண்ணெய் சேர்த்த சின்ன வெங்காயம் பூண்டு காய்ந்த மிளகாய் பச்சை மிளகாய், புளி, உப்பு கருவேப்பிலை கொத்தமல்லி இலைகள் சேர்த்து வதக்கி எடுக்கவும்.
- மிக்ஸி ஜாரில் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்தால் கருவாடு சம்பல் தயார்.
Nutrition
இதனையும் படியுங்கள் : பழைய சாதம், சுடு சாதத்துடன் சாப்பிட ருசியான நெத்திலி கருவாடு தொக்கு ஒரு முறை இப்படி ட்ரை பண்ணி பாருங்க!