- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 5
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH, Side Dish
கருவாட்டுத் தொக்கு அப்படின்னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே கருவாட்டு தொக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அந்த காலத்தில் எல்லாம் எல்லாராலயும் மீன் வாங்க முடியாது அவங்க எல்லாரும் இந்த கருவாட்ட தான் சமைச்சு சாப்பிட்டு இருக்காங்க. இந்த கருவாட்டுக் குழம்பு கருவாட்டுத் தொக்கு எல்லாமே வாய்க்கு ருசியா காரசாரமா செஞ்சு சாப்பிட்டு இருக்காங்க. இன்னைக்கு நிறைய பேர் வீட்ல கருவாடு செய்வது ஏன் விட்டுட்டாங்க ஆனா ஒரு சிலர் வீட்ல இன்னுமே காரசாரமா சூப்பரான கருவாட்டு தொக்கு செஞ்சு சாப்பிட்டு தான் இருக்காங்க. பெரும்பாலும் கிராமங்கள்ல அதிகமா வாரத்துக்கு ஒரு தடவையாவது கருவாட்டு குழம்பு வச்சு சாப்பிட்டு வாங்க. இந்த கருவாட்டுக் குழம்பு நம்ம சாதம் தோசை இட்லி எல்லாத்துக்கும் சைடிஷா வச்சு சாப்பிடலாம். அதுக்கு மேல பழைய சாதத்துக்கு கருவாட்டு குழம்பு ஊத்தி சாப்பிடும் போது அவ்ளோ ருசியா இருக்கும்.
பழைய சாதத்துக்கு மட்டுமில்லாம கேப்ப கலி செய்து அதுலையும் இந்த கருவாட்டு குழம்பு ஊத்தி சாப்பிடும்போது அவ்ளோ ருசியா இருக்கும். ஒரு சிலர் கருவாட்டு குழம்புல மொச்சை பயிறு கத்திரிக்காய் முருங்கைக்காய் எல்லாமே சேர்த்து வைப்பாங்க அந்த குழம்பு அவ்வளவு ருசியா இருக்கும். மூணு நாளைக்கு கூட வச்சு சாப்பிடலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான சிம்பிளான கருவாட்டு தொக்கு செய்யப் போறோம்.வீட்ல பழைய சாதம் நிறைய இருக்கு ஆனா யாருமே சாப்பிட மாட்டேங்கிறாங்க அப்படின்னா கவலையே படாதீங்க. இந்த சிம்பிளான கருவாடு தொக்கு மட்டும் செஞ்சு வச்சுடுங்க அதுக்கப்புறம் வீட்ல இருக்குற எவ்ளோ பழைய சாதமா இருந்தாலும் அது சட்டுனு நிமிஷத்துல காலியாகிவிடும்.
இந்த கருவாட்டுத் தொக்கு ரெண்டு தட்டு சாப்பாடு கேப்பாங்க. அந்த அளவுக்கு ருசியான இந்த கருவாட்டு தொக்கு செய்வதற்கு நிறைய நேரமும் ஆகாது ரொம்ப ரொம்ப குறைவான நேரங்களே போதும்.. உங்க வீட்ல இருக்குற குழந்தைகளுக்கு கருவாட்டு குழம்பு பிடிக்கலைன்னா கூட இந்த மாதிரி செஞ்சு கொடுத்தீங்கன்னா ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. வீட்ல இருக்குற பெரியவங்களுக்கு சொல்லுது தேவையில்ல கருவாட்டு குழம்பு சொன்னாலே போதும் ஓடி வந்துடுவாங்க அந்த அளவுக்கு கருவாட்டு குழம்போட வாசனை சூப்பரா இருக்கும். அதே அளவுக்கு ருசி கருவாடு தொக்குளையும் இருக்கும் இந்த மாதிரி மட்டும் ஒரு தடவை உங்க வீட்டுல கருவாட்டு தொக்கு செஞ்சு பாருங்க அதுக்கப்புறம் எப்பவுமே இப்படித்தான் செய்வீங்க அந்த அளவுக்கு ஒரு எளிமையான ரெசிபி தான் இந்த கருவாடு தொக்கு ரெசிபி. இது வாங்க இந்த கருவாடு தொக்கு ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : ருசியான நெத்திலி கருவாடு வறுவல் இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! வீட்ல பழைய சாதம் இருந்தா அதன் கூட சாப்பிட்டு பாருங்க இதன் ருசியே தனி தான்!
Ingredients
Method
ஒரு பாத்திரத்தில் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லி தூள் கரம் மசாலா மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
அதில் கருவாட்டுத் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஊறவைத்துள்ள கருவாடுகளை போட்டு பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
அதே கடாயில் எண்ணெய் சேர்த்து நீளவாக்கில் நறுக்கிய பெரிய வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து நன்றாக வதக்கவும் அதனில் காஷ்மீர் மிளகாய்த்தூள் சேர்த்து ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு அதில் பொறித்து வைத்துள்ள கருவாட்டு துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறக்கினால் சுவையான கருவாட்டு தொக்கு தயார்.





