இட்லி மீதமாயிடுச்சுனா முட்டை இட்லி இந்த மாதிரி செஞ்சு பாருங்க!

- Advertisement -

நைட்டு சுட்ட இட்லி மீதம் இருந்துச்சுன்னா இட்லி உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா அதையே அசைவமா மாத்தி முட்டை சேர்த்து முட்டை இட்லியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க சைடு டிஷ்ஷே தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம் இல்லனா தேங்காய் சட்னி வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் சூப்பரா இருக்கும். அந்த இட்லிய அப்படியே சாப்பிடறதுக்கு ஒரு சிலருக்கு பிடிக்காது சில பேரு சூடு பண்ணி சாப்பிடுவாங்க ஒரு சிலருக்கு அதுவே பிடிக்காது அந்த மாதிரி இருந்தா அந்த இட்லியை தூக்கி கீழே போடாம சூப்பரான இந்த இட்லி வச்சு முட்டை இட்லி செஞ்சுட்டீங்கன்னா எல்லாருமே சூப்பரா சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. சுடச்சுட சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும்.

-விளம்பரம்-

வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே விரும்பி சாப்பிடுவாங்க. ரெண்டு முட்டை இருந்தா போதும் ஆறு இட்லிய உப்புமா செஞ்சிடலாம். இட்லி இன்னும் கொஞ்சம் நிறைய இருந்துச்சுன்னா மூணு இட்லிக்கு ஒரு முட்டை அப்படின்னு சேர்த்துக்கோங்க. சுவை ரொம்ப ரொம்ப அருமையா இருக்கும். இதுல நிறைய மசால் பொடி சேர்க்கப் போறது இல்ல அதனால குழந்தைகள் தாராளமா சாப்பிடலாம். மிளகுத்தூள் மட்டும் போட்டு செஞ்சாலே அவ்ளோ ருசியா இருக்கும்.

- Advertisement -

ஒரு சிலருக்கு இட்லி உப்புமா அப்படின்னாலே ரொம்ப ரொம்ப பிடிக்கும் அதுக்கு சர்க்கரை வச்சு சாப்பிடுவாங்க. இன்னும் ஒரு சிலர் அந்த உப்புமாவுக்கு சாம்பார் தக்காளி சட்னி வச்சு சாப்பிடுவாங்க ஆனா இந்த முட்டை இட்லியா அப்படியே சாப்பிட்டாலே போதும். குழந்தைகளுக்கு பிரேக் பாஸ்டாவும், லஞ்ச் பாக்ஸ்க்கும் கூட இதை கொடுத்துவிடலாம். மீந்துபோன இட்லியில் தான் இதை பண்ணனுமா அப்படின்னு கேட்டா கிடையாது. சுட சுட செஞ்ச இட்லியும் இந்த முட்டை இட்லியை முயற்சி செஞ்சு பார்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை இட்லி எப்படி செய்யறதுன்னு பாக்கலாம்.

Print
No ratings yet

முட்டை இட்லி | Egg Idly Recipe In Tamil

நைட்டு சுட்ட இட்லி மீதம் இருந்துச்சுன்னா இட்லி உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா அதையே அசைவமா மாத்தி முட்டை சேர்த்து முட்டை இட்லியா செஞ்சு சாப்பிட்டு பாருங்க சைடு டிஷ்ஷே தேவைப்படாது. அப்படியே சாப்பிடலாம் இல்லனா தேங்காய் சட்னி வச்சு சாப்பிடலாம் டேஸ்ட் சூப்பரா இருக்கும். அந்த இட்லிய அப்படியே சாப்பிடறதுக்கு ஒரு சிலருக்கு பிடிக்காது சில பேரு சூடு பண்ணி சாப்பிடுவாங்க ஒரு சிலருக்கு அதுவே பிடிக்காது அந்த மாதிரி இருந்தா அந்த இட்லியை தூக்கி கீழே போடாம சூப்பரான இந்த இட்லி வச்சு முட்டை இட்லி செஞ்சுட்டீங்கன்னா எல்லாருமே சூப்பரா சாப்பிட்டு முடிச்சிடுவாங்க. சுடச்சுட சாப்பிடும் போது அவ்வளவு ருசியா இருக்கும்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Breakfast, dinner
Cuisine: Indian, TAMIL
Keyword: egg idly
Yield: 4 People
Calories: 87kcal

Equipment

  • 1 பவுல்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 5 இட்லி
  • 1 பெரிய வெங்காயம்
  • 1/4 டீ ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 2 காய்ந்த மிளகாய்
  • 2 முட்டை
  • 1 கொத்து கறிவேப்பிலை
  • கொத்தமல்லி சிறிதளவு
  • 1 டீஸ்பூன் கடுகு உளுத்தம்பருப்பு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு உளுந்தம் பருப்பு கருவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
  • பிறகு காய்ந்த மிளகாய் பெரிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்.
  • உப்பு போட்டு மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ளவும். முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக கிளறவும்.
  • முட்டை வெந்த பிறகு இட்லியை கையால் நன்றாக மசித்து சேர்த்து கிளறவும்.
  • இறுதியாக கொத்தமல்லி இலைகள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான முட்டை இட்லி தயார்.

Nutrition

Serving: 450g | Calories: 87kcal | Carbohydrates: 3.9g | Protein: 6.46g | Fat: 4.57g | Potassium: 189mg | Vitamin C: 72mg | Calcium: 24mg | Iron: 9.1mg

இதனையும் படியுங்கள் : இட்லி, தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற மற்றும் இரும்புச்சத்து அதிகம் நிறைந்த முருங்கை கீரை கார சட்னி இப்படி செய்து பாருங்கள் இரண்டு இட்லி அதிகமாகவே சாப்பிடுவார்கள்!!!