- Prep
- 10 min
- Cook
- 15 min
- Total
- 25 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- LUNCH
முட்டை குழம்பு என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடித்த குழம்பாகும். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். முட்டையில் உடலுக்கு தேவையான நன்மைகள் அடைங்கியுள்ளது. முட்டையில் அத்தியாவசிய தாதுக்கள் வைட்டமின்கள் உள்ளன. இதனால் தான் முட்டையை சூப்பர் ஃபுட் என்று சொல்வார்கள். அதனால் சுவையான முட்டை மசாலா குழம்பு எப்படி செய்வதென்று பார்க்கலாம். இந்த முட்டை மசாலா குழம்பு மிகவும் சுலபமான குழம்பு வகை. இது இட்லி, தோசை, சப்பாத்தி, ரொட்டி, சாதம், சிக்கன் பிரியாணி, வெஜிடபிள் பிரியாணி, சீரக சாதம், ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
முட்டை குழம்பு சுவையுடன் கூடிய ஆரோக்கியம் மிகுந்த உணவு வகை. முட்டை குழம்பு பல விதங்களில் செய்யப்படுகிறது. வெங்காயம், தக்காளி கொண்டு மசாலா போல் செய்து அதனுடன் முட்டை சேர்த்துக் கலக்கலாம். இந்த குழம்பை முட்டை தவிர வேகவைத்த காய்கறிகள், உருளைக்கிழங்கு, போன்றவற்றை கொண்டும் செய்யலாம். ஒவ்வொருவரும் முட்டை குழம்பினை பல ஸ்டைலில் செய்வார்கள்.
பெரும்பாலும் முட்டை குழம்பை நாம் மசாலா அரைத்து ஊற்றி கொதித்தவுடன், அதில் வேக வைத்த முட்டையை போட்டு கொதிக்க வைத்து சுவைப்போம். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் குழம்பு கொஞ்சம் வித்தியாசமான ஒன்றாகும். நாம் டேஸ்டியான முறையில் முட்டை மசாலா குழம்பு எப்படி செய்யலாம்னு பார்க்கலாம். இந்த முட்டை குழம்பு சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்திக்கும் அற்புதமாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இந்த குழம்பு இருக்கும்.
இதனையும் படியுங்கள் : எப்பவும் ஒரே மாதிரியா முட்டை குழம்பு வச்சு போர் அடிச்சு போச்சுன்னா இந்த மாதிரி முட்டை ஆம்லெட் கறி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!
Ingredients
Method
முதலில் ஒரு பவுளில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதில் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்கு கலந்து சின்ன சின்ன கிண்ணங்களில் ஊற்றி ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வர மிளகாய், தனியா, சீரகம், கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.
இவை நன்கு ஆறியதும் இதனை ஒரு மிக்ஸி ஜாரில் அதனுடன் மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், துருவிய தேங்காய் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கொதிக்க ஆரம்பித்ததும் உருளைக்கிழங்கை நான்கு துண்டுகளாக வெட்டி சேர்த்து மூடி வைத்து வேக விடவும். உருளைக்கிழங்கு பாதி வெந்ததும் உப்பு மற்றும் வேகவைத்த முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொதிக்க விடவும்.
பின் ஒரு தாளிப்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து தாளித்து கொதிக்கும் குழம்பில் சேர்த்து அடுப்பை அணைத்து விடவும். அவ்வளவுதான் சுவையான முட்டை மசாலா குழம்பு தயார்.





