ருசியான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

- Advertisement -

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில்

-விளம்பரம்-

இதையும் படியுங்கள்:நாவில் எச்சி ஊறும் சுவையான காய்கறி ஆம்லெட் செய்வது எப்படி ?

- Advertisement -

இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Print
No ratings yet

முட்டை ஓட்ஸ் ஆம்லெட் | Egg Oats Ambleat Recipe in Tamil

நம்மில் பெரும்பாலானோர் காலை உணவிற்கு பெரிதாக முக்கியத்துவம் அளிப்பதில்லை. இப்படி காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு, சீக்கிரமாக செய்யக்கூடியதும், சத்து நிறைந்ததுமான இந்த முட்டை ஓட்ஸ் ஆம்லெட்டை செய்து கொடுப்பது மிக சுலபம். தினமும் பிடித்த உணவுகளை யோசித்து செய்வது என்பது சற்று கடினமான விஷயம் தான். ஆனால் வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை இது போன்ற முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து கொடுத்து பாருங்கள். ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Prep Time15 minutes
Active Time10 minutes
Total Time25 minutes
Course: Breakfast, dinner, LUNCH
Cuisine: Indian, TAMIL
Keyword: Egg ots Ambleat, முட்டை ஓட்ஸ் ஆம்லெட்
Yield: 4 People
Calories: 658kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 தோசை கரண்டி

தேவையான பொருட்கள்

  • 1 cup ஓட்ஸ்
  • 4 முட்டையின் வெள்ளைக்கரு
  • 1 tsp மிளகுத் தூள்
  • ½ cup பால்
  •  tbsp ஆலிவ் ஆயில்
  • 1 tsp உலர்ந்த கற்பூரவள்ளி
  • tbsp துருவிய சீஸ்
  • 5 gm கொத்தமல்லி
  • தேவையான அளவு உப்பு                             

செய்முறை

  • முட்டை ஓட்ஸ் ஆம்லெட் செய்ய முதலில் கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பாலை ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிதமான தீயில் வெது வெதுப்பாக சூடேற்றி இறக்க வேண்டும்.
  • பின் அதில் ஓட்ஸ் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். அடுத்து அதில் முட்டையின் வெள்ளை கருவை ஊற்றி நன்கு கிளறி விட வேண்டும்.
  • பின்னர் அதில் மிளகுத் தூள், உப்பு சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, அதில் ஆலிவ் ஆயில் ஊற்றி சூடானதும், 
  • அதில் கலந்து வைத்துள்ள முட்டை கலவையை ஆம்லெட் போன்று ஊற்ற வேண்டும். 
  • அதன் மேல் உலர்ந்த கற்பூரவள்ளி, சிறிது சீஸ் மற்றும் கொத்த மல்லியை தூவி, முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், முட்டை ஓட்ஸ் ஆம்லெட் ரெடி.

Nutrition

Serving: 350gm | Calories: 658kcal | Carbohydrates: 23g | Protein: 5.9g | Cholesterol: 1.2mg | Sodium: 356mg | Potassium: 421mg | Calcium: 12mg

LEAVE A REPLY

Recipe Rating




Please enter your comment!
Please enter your name here