- Advertisement -
வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். சிலர் வார இறுதி நாளை சிறப்பாக அமைக்க வெளியில் சென்று உணவகங்களில் உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் மாலை நேரங்களை சிறப்பாக அமைக்க இந்த முட்டை பப்ஸ் ஒரு முறை செய்து பாருங்கள்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : ருசியான ரோட்டு கடை முட்டை கொத்து பரோட்டா இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
- Advertisement -
உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கம். அதனால் இந்த சுவையான முட்டை ப்பஸை சுலபமான முறையில், நம் வீட்டிலேயே, எப்படி தயார் செய்வது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம்.
முட்டை பப்ஸ் | Egg Puffs Recipe in Tamil
வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்ய முடியுமா? என்ற சந்தேகம் நம் எல்லோருக்கும் இருக்கும். சிலர் வார இறுதி நாளை சிறப்பாக அமைக்க வெளியில் சென்று உணவகங்களில் உணவு சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். உங்கள் மாலை நேரங்களை சிறப்பாக அமைக்க இந்த முட்டை பப்ஸ் ஒரு முறை செய்து பாருங்கள். உங்கள் வீட்டில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விருப்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கம்.
Yield: 4 People
Calories: 225kcal
தேவையான பொருட்கள்
- 1/4 KG மைதா மாவு
- 1 tbsp நெய்
- 1 tbsp எலுமிச்சை சாறு
- 6 முட்டை
- 1 பெரிய வெங்காயம்
- 3 பச்சை மிளகாய்
- 1 tsp கரம் மசாலா
- 1/4 tsp மிளகாய் தூள்
- 1 கைப்பிடி கொத்தமல்லி இலை
- உப்பு தேவையான அளவு
செய்முறை
- முதலில் மைதா மாவுடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கொள்ளவும்.
- பின் பூரி மாவு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து பத்து நிமிடம் குளிர்சாதன பெட்டியில் ஊற வைத்து கொள்ளவும்.
- பின் 10 நிமிடம் கழித்து வெளியில் எடுத்து பூரிக் கட்டையில் தேய்க்கவும். பிறகு நெய்யை தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியின் மேல் தடவி நான்காக மடித்து கொள்ளவும்.
- பின் அதை மறுபடியும் குளிர்சாதனப் பெட்டியில் பத்து நிமிடம் வைக்கவும் எல்லா மாவையும் இதேபோல் செய்து வைக்கவும்.
- மூன்றாவது முறையாக ரொட்டியை தேய்த்து நெய்யை தடவி மடித்து சமமாக தேய்த்து செவ்வக துண்டுகளாக போடவும். பின் ஐந்து முட்டைகளை வேகவைத்து தோலை உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.
- பின் ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, கொத்தமல்லி தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி வைக்கவும்.
- பிறகு பப்ஸ் துண்டுகளில் முட்டை துண்டினை ஒரு புறம் வைத்து அதனுடன் வதக்கிய கலவையை சேர்த்து வைத்து மறு புறத்தை மூடவும். பிறகு அவனில் வைக்ககூடிய தட்டில் பப்ஸ்ஸை பரப்பி வைத்து அவனை 400 டிகிரிக்குள் சூடாக்கி அரைமணி நேரம் வைக்கவும்.
- பிறகு அவனின் வெப்பத்தை பாதியாக குறைத்து வைத்து பத்து நிமிடம் வைத்திருக்கவும் பின் பப்ஸ் நன்கு வெந்து பொன்னிறமாக ஆனவுடன் வெளியில் எடுத்து பரிமாறவும்.
Nutrition
Calories: 225kcal | Carbohydrates: 46g | Protein: 10g | Fat: 1.2g | Saturated Fat: 0.5g | Cholesterol: 1.5mg | Sodium: 0.5mg | Fiber: 2g | Sugar: 0.5g