- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- dinner, LUNCH
முட்டை சம்மந்தி பேரே வித்தியாசமா இருக்குன்னு யோசிக்கிறீங்களா அதே மாதிரி தான் இதோட டேஸ்ட்டும் வித்தியாசமா சூப்பரா இருக்கும். இத ஈவினிங் டைம்ல ஸ்னாக்ஸா செஞ்சு சாப்பிடலாம். ஈவினிங் டைம்ல டீ காபி குடிக்கும் போது உங்களுக்கு ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிடணும் போல இருந்துச்சுன்னா எப்பவும் போல ஒரே மாதிரியா போண்டா வடைன்னு செஞ்சு சாப்பிடாம இந்த மாதிரி உங்க வீட்ல முட்டை இருந்துச்சுனா அதுல முட்டை சம்மந்தி செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செஞ்சு சாப்பிடுவீங்க. ஒரு சிலர் இந்த முட்டை சம்மந்தி கேள்விப்பட்டிருப்பீங்க. ஆனா எப்படி செய்றதுன்னு தெரியாம இருந்திருக்கும் இது செய்றது ரொம்ப ஈஸி தான். நாலு முட்டை இருந்தாலே ஈஸியா செஞ்சு முடிச்சிடலாம். வீட்ல இருக்குற பொருட்களே போதுமானது தான். இப்ப வாங்க இந்த சூப்பரான டிஃபரண்டான முட்டை சம்மந்தி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : மதிய உணவிற்கு முருங்கை பூ முட்டை வறுவல் இப்படி செய்து பாருங்கள் மிகவும் ருசியாக இருக்கும்!!!
Ingredients
Method
முதலில் முட்டையை வேகவைத்து ஆற வைத்து உரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி இலைகள் சிறிதளவு உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
அரைத்த விழுதை ஒரு பாத்திரத்தில் சேர்த்து முட்டையின் மஞ்சள் கருவையும் அதனுடன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்பொழுது முட்டையின் மஞ்சள் கரு இருந்த இடத்தில் கலந்து வைத்துள்ளதை வைத்து கொள்ளவும்.
மற்றொரு பாத்திரத்தில் கடலை மாவு அரிசி மாவு மஞ்சள் தூள் கரம் மசாலா மிளகாய் தூள் சிறிதளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
தயார் செய்து வைத்துள்ள முட்டைகளை கடலை மாவு கரைசலில் சேர்த்து நன்றாக பிரட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான முட்டை சம்பந்தி தயார்.






