ரசம் சாதத்துக்கு இந்த மாதிரி ஒரு முட்டை வறுவல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

- Advertisement -

பொதுவா அசைவம் இல்லாத போது நமக்கு முட்டைதான் அசைவமாய் இருக்கும். டக்குனு கடையில போய் முட்டை வாங்கிட்டு வந்த அதை வச்சு ஈசியா ஏதாவது ஒரு ரெசிபி செஞ்ச நான்வெஜ் மாதிரி நினைச்சு சாப்பிட்டுக்கலாம். ஒரு சிலரெல்லாம் முட்டை இல்லாம தினமும் சாப்பிடவே மாட்டாங்க. அந்த வகையில மசாலா வறுத்து அரைச்சு செஞ்ச சிம்பிளான முட்டை வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும். ரசம் சாதத்துக்கு ஒரு பர்ஃபெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். அதுமட்டுமில்லாம நீங்க சிக்கன் மட்டன் அப்படின்னு விருந்து வைக்கும்போது இந்த முட்டை மசாலா செஞ்சு வச்சீங்கன்னா சூப்பரா இருக்கும்.

-விளம்பரம்-

அவித்த முட்டையை அப்படியே வைக்கிறதுக்கு பதிலா இந்த மாதிரி ஒரு சிம்பிளான முட்டை வறுவல் செஞ்சு வெச்சீங்கன்னா சிக்கன் மட்டன விட இததான் விரும்பி சாப்பிடுவாங்க. அவ்ளோ டேஸ்டியான ஒரு ரெசிபி தான் இந்த முட்டை வறுவல். டேஸ்ட்டான இந்த ரெசிபிய ஒரு தடவை செஞ்சு பார்த்துட்டீங்கன்னா அதுக்கு அப்புறமா அடிக்கடி செய்வீங்க. குழந்தைகளுக்கு ஸ்கூல் லன்ச் பாக்ஸ்ல ரசம் சாத வச்சு தொட்டுக்க இந்த சூப்பரான முட்டை வறுவல் செஞ்சு கொடுக்கலாம். அவிச்ச முட்டை சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவாங்க.

- Advertisement -

இந்த முட்டை வறுவல அப்படியே சுட சுட சாதத்துக்கு போட்டு பிசைஞ்சு சாப்பிடலாம் டேஸ்ட்டா அட்டகாசமா இருக்கும். பத்து நிமிஷத்துல செய்யக்கூடிய இந்த முட்டை மசாலா கண்டிப்பா உங்க வீட்லயும் ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. ரசம் சாதத்துக்கு மட்டுமில்லாமல் தயிர் சாதம், தக்காளி சாதம் புளி சாதம் லெமன் சாதம் எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷன் இருக்கும். இப்ப வாங்க இந்த சுவையான முட்டை வறுவல் ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

Print
No ratings yet

முட்டை வறுவல் | Egg Varuval Recipe In Tamil

பொதுவா அசைவம் இல்லாத போது நமக்கு முட்டைதான் அசைவமாய் இருக்கும். டக்குனு கடையில போய் முட்டை வாங்கிட்டு வந்த அதை வச்சு ஈசியா ஏதாவது ஒரு ரெசிபி செஞ்ச நான்வெஜ் மாதிரி நினைச்சு சாப்பிட்டுக்கலாம். ஒரு சிலரெல்லாம் முட்டை இல்லாம தினமும் சாப்பிடவே மாட்டாங்க. அந்த வகையில மசாலா வறுத்து அரைச்சு செஞ்ச சிம்பிளான முட்டை வறுவல் இந்த மாதிரி செஞ்சு பாருங்க சுவை அட்டகாசமா இருக்கும். ரசம் சாதத்துக்கு ஒரு பர்ஃபெக்ட்டான காம்பினேஷனா இருக்கும். அதுமட்டுமில்லாம நீங்க சிக்கன் மட்டன் அப்படின்னு விருந்து வைக்கும்போது இந்த முட்டை மசாலா செஞ்சு வச்சீங்கன்னா சூப்பரா இருக்கும் அவித்த முட்டையை அப்படியே வைக்கிறதுக்கு பதிலா இந்த மாதிரி ஒரு சிம்பிளான முட்டை வறுவல் செஞ்சு வெச்சீங்கன்னா சிக்கன் மட்டன விட இததான் விரும்பி சாப்பிடுவாங்க. அவ்ளோ டேஸ்டியான ஒரு ரெசிபி தான் இந்த முட்டை வறுவல்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Total Time20 minutes
Course: Side Dish
Cuisine: Indian, TAMIL
Keyword: Egg Varuval
Yield: 4 People
Calories: 76kcal

Equipment

  • 1 பவுள்
  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 4 முட்டை
  • 1 டீஸ்பூன் சீரகம்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • 1 டீஸ்பூன் மிளகு
  • 4 வர மிளகாய்
  • 1 டீஸ்பூன் மல்லி
  • 4 பல் பூண்டு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

செய்முறை

  • முட்டையை வேக வைத்து தோல் உரித்து வைத்துக் கொள்ளவும்‌.
  • ஒரு கடாயில் மல்லி விதைகள் சீரகம், சோம்பு, பூண்டு, மிளகாய் மிளகு அனைத்தையும் சேர்த்து வறுத்து ஆற வைத்து அரைத்துக் கொள்ளவும்.
  • அதே கடாயில் எண்ணெய் சேர்த்து முட்டையை நறுக்கி சேர்த்து வதக்கி அதனுடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து கொள்ளவும்.
  • பிறகு ஒரு தக்காளியை அரைத்து சேர்த்து உப்பு சேர்த்து எண்ணெயிலேயே நன்றாக வேக வைத்து எடுத்தால் சுவையான முட்டை வறுவல் தயார்.

Nutrition

Serving: 400g | Calories: 76kcal | Carbohydrates: 3.9g | Protein: 7.64g | Fat: 2.7g | Sodium: 91mg | Potassium: 138mg | Fiber: 172g | Vitamin C: 154mg | Calcium: 16.9mg

இதனையும் படியுங்கள் : காரசாரமான செட்டிநாடு முட்டை பிரியாணி இது போன்று சுலபமாக வீட்டில் செய்து கொடுங்க! ஒரு பருக்கை சாதம் கூட மிஞ்சாது!