பௌர்ணமி நாட்களில் நாம் செய்யும் அனைத்து காரியங்களும் நல்ல பலன்களை நமக்கு வழங்கும். பெளர்ணமி நாளில் தெய்வக சக்திகள் அதிகரித்து காணப்படும் என்பதால், அந்த நாளில் நாம் செய்யும் பரிகாரங்கள் மற்றும் தெய்வங்களையும் வழிபடுவதால் நம்முடைய குடும்பத்தில் நலம் பெருகும். குறிப்பாக இந்த நாளில் பெண் தெய்வ வழிபாடு செய்வது அதிக பலனை கொடுக்கக் கூடியதாகும். ஐப்பசி பௌர்ணமி பொதுவாக அசுவனியில் வரும். ஐப்பசி பௌர்ணமி அன்று சிவபெருமானுக்கு அன்னாபிசேகம் நடத்தப் பெறுகிறது. இன்றைய தினத்தில் விளக்கு ஏற்றி வழிபட விருப்பங்கள் நிறைவேறும். வரங்கள் அதிகம் கிடைக்கும். எல்லா காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். அந்தவகையில் இந்த ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தினத்தில் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

ஐப்பசி மாத பௌர்ணமி ஏன் அவ்வளவு சிறப்பு வாய்ந்தது?
ஒவ்வொரு மாதமும் வரும் பெளர்ணமி ஒவ்வொரு வகையில் சிறப்புடையது என்றாலும் ஐப்பசியில் வரும் பெளர்ணமி விரதம் என்பது பல மடங்கு பலன்களை பெருக்கிக் கொடுக்கக் கூடியதாகும். திங்களை முடி மீது சூடியவருக்கு, முழு மதி ஒளிரும் நாளில் சிறப்பு வழிபாடு செய்வது இதனால் தான் சிறப்பானதாயிற்று. ஐப்பசியில் வரும் பெளர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் பசி, பிணிகள் நீங்கும், வெண் பொங்கங், சர்க்கரை பொங்கல் படைத்து அம்பிகைக்கு நெய் விளக்கேற்றி வழிபாடு செய்வதால் அனைத்து விதமான நன்மைகளும் நிகழும். இந்த சிறப்பு வாய்ந்த அன்னாபிஷேக திருநாளில் சிவபெருமானை அபிஷேக கோலத்தில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பாகும்.
பௌர்ணமியன்று செய்ய வேண்டிய பரிகாரம்
ஏலக்காய் சிறந்த மூலிகை பொருளாக, நறுமண பொருளாக, மருத்துவ பண்புகளை கொண்டு விளங்குவதால் ஏலக்காயின் நன்மைகள் எண்ணில் அடங்காதவை. ஏலக்காய் தாந்திரீகங்களில் பெருமளவு பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது. இது பண வசியம் செய்ய அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. ஏலக்காய் என்பது மகாலட்சுமியின் அம்சமாக விளங்குகிறது. மகாலட்சுமியை ஈர்க்கக்கூடிய சக்தி இந்த ஏலக்காய்க்கு உண்டு. அந்த வகையில் ஏலக்காய் வைத்து இந்த பௌர்ணமி நன்நாளில் பண பிரச்சனையை எப்படி தீர்ப்பது என்பது பற்றி இந்த ஆன்மிகப் பதிவில் பார்க்கலாம்.

சனிக்கிழமை பௌர்ணமி தினத்தில் தான் இந்த ஏலக்காய் கொண்டு பரிகாரம் செய்ய வேண்டும். இந்த பரிகாரம் செய்யும் முன் வீட்டை துடைத்து நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த பரிகாரம் செய்வதற்கு 5 முழு ஏலக்காய்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஏலக்காயிலும் 571 என்ற எண்ணை எழுதிக் கொள்ளுங்கள். உங்களுக்கு இருக்கும் கடன் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என மனதார வேண்டிக் கொண்டே இந்த எண்ணினை ஏலக்காயில் எழுத வேண்டும்.
இந்த ஏலக்காயை ஒரு பேப்பரில் மடித்து உங்கள் வீட்டில் இருக்கும் மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்னால் வைத்து உங்கள் வீட்டில் நிலவும் பண பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்து பணவரவு வரவேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். பின் இதனை எடுத்து நீங்கள் பணம் புழங்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இந்த எண்ணிற்கு பணத்தை ஈர்க்கும் சக்தி அதிகம். அதனால் உங்கள் வீட்டில் பணப்புழக்கம் தாராளமாக இருக்கும். அடுத்து வரும் பௌர்ணமி தினத்தில் இதில் இருக்கும் ஏலக்காயை கால் படாத இடத்தில் போட்டு விட்டு, அதற்கு பதில் புதிய ஏலக்காயை வைத்து இந்த பரிகாரத்தை செய்யுங்கள்.
இதனையும் படியுங்கள் : பணம் கையில் தாராளமாக புரலும் கையில் வெறும் வால் மிளகு இருந்தால் மட்டும் பொதும்!
இந்த பரிகாரம் செய்த பின் இதிலிருந்து வரக்கூடிய வாசம் மகாலட்சுமியின் சுபீர்சத்தை உங்களுக்கு கொடுக்கும், இதனால் பணம் வீண் விரயமாவது தடுக்கப்படும். பொருளாதாரமானது உயர ஆரம்பிக்கும். ஆனால் இந்த பரிகாரத்தை முழுமனதோடும் நம்பிக்கையுடனும் செய்தால் அதற்கான பலன்கள் நிச்சயமாக கிடைக்கும்.


