- Advertisement -
விடுமுறை நாட்களில் வாய்க்கு ருசியாக சமைத்து சாப்பிட விரும்புவோம். அதுவும் நீங்கள் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் அப்படியானால் இந்த வார இறுதில் இந்த இறாலை கொண்டு ஒரு சுவையான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு
இதையும் படியுங்கள் : சுவையான தேங்காய்பால் இறால் குழம்பு செய்வது எப்படி ?
- Advertisement -
இந்த காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள். அதனால் இன்று இந்த இறால் பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் காணலாம் வாருங்கள்.
-விளம்பரம்-
இறால் மிளகு வறுவல் | Prawn Fry Recipe In Tamil
நீங்கள் கடல் உணவு பிரியர்களாக இருந்தால் அப்படியானால் இந்த வார இறுதில் இந்த இறாலை கொண்டு ஒரு சுவையான காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடுங்கள். உங்கள் வீட்டில் உள்ள அனைவரும் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த காரைக்குடி இறால் பெப்பர் ப்ரை அட்டகாசமான சுவையில் இருக்கும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள் ஒரு பிடி பிடித்து விடுவார்கள்.
Yield: 4 people
Calories: 115kcal
Equipment
- 1 கடாய்
- 1 பெரிய பவுள்
தேவையான பொருட்கள்
- ¼ கிலோ இறால்
- 6 பல் பூண்டு பொடியாக நறுக்கியது
- 3 பச்சை மிளகாய்
- 15 மிளகு
- கருவேப்பிலை சிறிதளவு
- ½ டீஸ்பூன் சீரகத்தூள்
- ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய்
- உப்பு தேவைக்கேற்ப
செய்முறை
- முதலில் இறாலை தண்ணீரால் கழுவி சுத்தம் செய்துக் கொள்ளவும்.
- பிறகு சுத்தம் செய்த இறாலுடன் சீரகத்தூள், மஞ்சள் தூள் சேர்த்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.
- அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் கருவேப்பிலை, சேர்த்து தாளித்து, பூண்டு, பச்சை மிளகாய், சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இத்துடன் ஊறவைத்த இறால் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கி மூடி போட்டு வேகவிடவும்.
- இறாலில் ஏற்கனவே தண்ணீர் இருப்பதால் மீண்டும் தண்ணீர் சேர்க்க தேவையில்லை.
- இறால் நன்றாக வெந்ததும், மிளகாய் ஒன்றிரண்டாக பொடித்து தூவி நன்கு புரட்டி இரண்டு நிமிடம் விட்டு இறக்கவும்.
- இப்பொழுது சுவையான இறால் மிளகு வறுவல் தயார்.
Nutrition
Serving: 4g | Calories: 115kcal | Protein: 1.1g | Cholesterol: 11mg | Sodium: 47mg | Potassium: 8.5mg