- Prep
- 20 min
- Cook
- 20 min
- Total
- 40 min
- Serves
- 4
- Cuisine
- Indian, TAMIL
- Course
- Breakfast, dinner
பொதுவாக வார கடைசி நாட்களில் எப்பொழுதும் போல் சிக்கன் மட்டன் மற்றும் மீன் போன்ற அசைவ உணவுகளை வாங்கி சாப்பிடுவதற்கு பதில் இது போன்று ஒரு முறை இறால் வாங்கி அதில் இந்த தேங்காய்பால் இறால் குழம்பு செய்து சாப்பிடுங்கள். இந்த தேங்காய்பால் இறால் குழம்பை நீங்கள் பரோட்டா இட்லி, தோசை மற்றும் சோறு என்று எது கூட வேண்டுமானாலும் வைத்து சாப்பிடலாம். மேலும் இந்த இறால் குழம்பை இன்னும் வற்ற
இதையும் படியுங்கள் : மொறு மொறுனு இறால் பஜ்ஜி எப்படி செய்வது ?
வைத்து கிரேவியாக எடுத்தால் இதை நீங்கள் ரசம் சாதம் மற்றும் தயிர் சாதம் போன்றவற்றுடன் வைத்து சாப்பிடுவதற்கு அட்டகாசமான முறையில் தயாராகி விடும். உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள் அந்த அளவிற்கு இந்த தேங்காய்பால் இறால் குழம்பு ருசியாக இருக்கும். அதனால் இன்று இந்த தேங்காய்பால் இறால் குழம்பு எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகளை என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்
Ingredients
Method
முதலில் நாம் வாங்கி வைத்திருக்கம் இறாலை சுத்தம் செய்து இரண்டு மூன்று முறை அலசிக்கொள்ளுங்கள். பின்பு நாம் வைத்திருக்கும் காய்கறிகளை பொடி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பின் ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக போட்டு நன்றாக வதக்கி குளிர வைக்கவும்.
பின் நாம் வதக்கிய பொருட்கள் நன்றாக குளிர்ந்ததும் அதை ஒருை மிக்ஸி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல அரைத்து கொள்ளுங்கள்.
பின் மறுபடியும் கடாயை அடுப்பில் வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும் அதில் பெருஞ்சீரகம், கடுகு, பட்டை, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
தாளித்ததும் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். பின் வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வதங்கி வந்ததும் அதில் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பின் தக்காளி நன்றாக வதங்கி மசிந்து வந்ததும் அதில் நாம் அரைத்த மசாலா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் அதில் புளிக்கரைசல் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடுங்கள்.
பின்பு குழம்பு நன்கு கொதித்து மசாலா வாசனை போனவுடன் அதில் இறால்களை சேர்த்து தீயை குறைத்து வைத்து 10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். பின் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். அவ்வளவு தான் சுவையான தேங்காய்பால் இறால் குழம்பு தயார்.






