- Prep
- 10 min
- Cook
- 10 min
- Total
- 20 min
- Serves
- 4
- Cuisine
- Indian
- Course
- snacks
ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிடுவதற்கு நீங்க பெரிய பெரிய ரெஸ்டாரண்டுக்கு தான் போய் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா இனிமேல் ஃபிஷ் ஃபிங்கர் சாப்பிடணும்னு ஆசையா இருந்துச்சுன்னா ஹோட்டல் ரெஸ்டாரன்ட்னு போய் சாப்பிடாம இந்த மாதிரி சிம்பிளா வீட்டிலேயே செஞ்சு சாப்பிடுங்க. வீட்ல செஞ்சு சாப்பிடுறதுதான் ஆரோக்கியமானதும் கூட. மீன் எடுத்தா எப்போவுமே மீன் குழம்பு மீன் ஃப்ரை மீன் புட்டு என்ன செஞ்சு சாப்பிடாம ஒரு தடவை மீன் எடுத்து குழந்தைகளுக்கு பெரியவங்களுக்கு எல்லாருக்குமே ரொம்ப புடிச்ச ஃபிஷ் ஃபிங்கர் ரெசிபி செஞ்சு கொடுங்க.
நீங்க எடுக்கிற மீன்ல கொஞ்சமா பிரிட்ஜ்ல எடுத்து வச்சு ஈவினிங் டைம்ல கூட இதை செஞ்சு கொடுக்கலாம் டீ காபியோட சாப்பிடும்போது செம டேஸ்டா இருக்கும். இதுகூட தக்காளி சாஸ் மையோனைஸ் இதெல்லாம் வெச்சு சாப்பிடும்போது டேஸ்ட் அற்புதமா இருக்கும். உங்க வீட்ல இருக்கக்கூடிய எல்லாருமே கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க. உங்களுக்கு ஃபர்ஸ்ட் ட்ரை பண்ணும் போது பயமா இருந்துச்சு அப்படின்னா கொஞ்சமா ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா நல்லா தான் வரும் அடுத்த தடவ செய்யும் போது நிறைய செஞ்சு எல்லாருக்கும் கொடுங்க.
முதல் தடவை இதே மாதிரி செய்முறை அளவுகளை பின்பற்றி செய்தீர்கள் என்றால் கண்டிப்பாக சுவை அருமையா இருக்கும். சாப்பிடுவதற்கு நல்ல மொறு மொறுன்னு உள்ள சாஃப்டா புளிப்பு காரமா அவ்வளவு ருசியா இருக்கும். உங்க வீட்ல இருக்கக்கூடிய குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க. ஃபிஷ் ஃபிங்கர் ரெசிபி வீட்ல செய்ய முடியுமா அப்படின்னு நிறைய பேருக்கு ஒரே குழப்பமா இருக்கும் ஆனா கண்டிப்பா செய்ய முடியும்.
இந்த செய்முறையில் செஞ்சீங்கன்னா இது செய்றது ரொம்ப ரொம்ப ஈஸி தான் ஆனா உங்களுக்கு ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ல அப்படியே கிடைக்கும். எப்படி வரும் அப்படின்னு யோசிக்கலாம் வேண்டாம். கண்டிப்பா நம்பி செஞ்சு பாருங்க சூப்பரா கிடைக்கும். வீட்ல இருக்குறவங்களே சாப்பிட்டு விட்டு இது வீட்டில் செஞ்சதா இல்ல கடையில் வாங்கினதானு உங்க கிட்ட கேப்பாங்க. இத செஞ்சு வெச்சிட்டீங்கன்னா முடியல சட்டு சட்டுன்னு காலியாகிவிடும்.அந்த அளவுக்கு இது ருசியா இருக்கும். இப்ப வாங்க இந்த ருசியான ஃபிஷ் ஃபிங்கர் ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : வித்தியாசமான இந்த மீன் பொடிமாஸ் ஒரு தடவை உங்க வீட்ல ட்ரை பண்ணி பாருங்க!
Ingredients
Method
அதிகம் முள் இல்லாத மீனை நீளவாக்கில் வெட்டி எடுத்து கழுவிக்கொள்ளவும்.
அதில் மஞ்சள் தூள் மிளகு தூள் மிளகாய் தூள் எலுமிச்சை சாறு இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு சோள மாவு சேர்த்து நன்றாக கலந்து ஊற வைக்கவும்.
பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் பிரெட் சேர்த்து அரைத்து அதனுடன் சிறிதளவு உப்பு மற்றும் காஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
ஊற வைத்துள்ள மீனை பிரட் கிரம்ஸில் தோய்த்து அரை மணி நேரம் ஃப்ரிட்ஜுக்குள் வைத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான பிஷ் பிங்கர் தயார்.






