- Advertisement -
அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். மீன்களில் நிறைய வகை உள்ளது அதில் ஒரு வகைதான் சங்கரா மீன் அதில் குழம்பு, மற்றும் வறுவல் செய்து சாப்பிடலாம். அதிலும் குழம்பு வைத்தால் அவ்வளவு சுவையாகவும் இருக்கக்கூடும். மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும்.
-விளம்பரம்-
இதையும் படியுங்கள் : கமகமக்கும் சுவையான மீன் மிளகு மசாலா இப்படி செஞ்சி பாருங்க ?
- Advertisement -
விடுமுறை நாட்களில் மீன் குழம்பு வைத்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வீட்டிலேயே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம். இந்த குழம்பு எப்படி செய்யலாம் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
சங்கரா மீன் குழம்பு | Sankara Fish Kulambu Recipe In Tamil
அசைவ பிரியர்களுக்கு மீன் என்றாலே மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்று ஏனென்றால் அவ்வளவு சுவையாக இருக்கக்கூடும். மீன்களில் நிறைய வகை உள்ளது அதில் ஒரு வகைதான் சங்கரா மீன் அதில் குழம்பு, மற்றும் வறுவல் செய்து சாப்பிடலாம். அதிலும் குழம்பு வைத்தால் அவ்வளவு சுவையாகவும் இருக்கக்கூடும். மீண்டும் மீண்டும் சாப்பிட தோன்றும். விடுமுறை நாட்களில் மீன் குழம்பு வைத்து இட்லி, தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். வீட்டிலேயே சுலபமாகவும், குறைந்த நேரத்திலும் செய்து விடலாம்.
Yield: 4 people
Calories: 245kcal
Equipment
- 1 கடாய்
- 1 குழம்பு பாத்திரம்
தேவையான பொருட்கள்
தேவையான பொருட்கள்:
- ½ கிலோ சங்கரா மீன் எந்த வகை மீன் இருந்தாலும் செய்யலாம்.
- புளி எலுமிச்சை அளவு
- எண்ணெய் தேவையான அளவு
- 10 சின்ன வெங்காயம்
- 6 பூண்டு
- 1 டேபிள் ஸ்பூன் இஞ்சி பொடியாக நறுக்கியது
- 2 தக்காளி நறுக்கியது
- உப்பு தேவையான அளவு
- ½ டீஸ்பூன் சோம்பு
- ½ டீஸ்பூன் சீரகம்
- ½ டீஸ்பூன் மிளகு
- ¼ டீஸ்பூன் மஞ்சள் தூள்
- 1 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
- 2 டேபிள் ஸ்பூன் மல்லி தூள்
- 1 டேபிள் ஸ்பூன் குழம்பு பொடி
தாளிக்க தேவையானவை
- 1½ டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய்
- 1 டீஸ்பூன் கடுகு
- ¼ டீஸ்பூன் வெந்தயம்
- 1¼ கப் சின்ன வெங்காயம் நறுக்கியது
- 2 பச்சை மிளகாய் கீறியது
- கறிவேப்பிலை கொஞ்சம்
- ½ கப் தேங்காய் பால் தேவைப்பட்டால்
- மாங்காய் தேவைப்பட்டால்
செய்முறை
செய்முறை:
- முதலில் மீனின் செதில்களை நீக்கி பின் துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் வைத்து இரண்டு முறை சுத்தமாக கழுவி எடுத்துக்கொள்ளவும். அப்படியே குழம்புக்கு தேவையான புளியை ஊறவைத்து கொள்ளவும்.
- அதன் பின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து சூடானதும் அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சின்ன வெங்காயம் சேர்த்து பொடியாக நறுக்கிய இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். பின் தக்காளி சேர்த்து நன்கு கொலைய வதக்கி சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ளலாம்.
- பின் தக்காளி வதங்கியதும் சோம்பு, சீரகம், மிளகு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். பிறகு அதனை ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்து ஆறவிடவும்.
- பொருட்கள் ஆறியதும் அதனை மிக்சியில் சேர்த்து அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள், குழம்பு பொடி சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் நைசாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுத்து ஒரு சட்டியை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய், ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், சேர்த்து பொரிந்ததும், 5 பல் பூண்டு, நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய், கறிவேப்பிலை, சேர்த்து நன்கு வதக்கவும், பிறகு பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயம் பொன்னிறமாக வதக்கவும்.
- வதங்கியதும், அரைத்த விழுதை சேர்த்து தண்ணீர் ஊற்றாமல், எண்ணெய் பிரியும் வரை வதங்க விடவும்.
- பிறகு வதங்கியதும் 1½ கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி புளி கரைசலும் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து தேங்காய் பால் ஊற்றி கலந்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
- பின் குழம்பு நன்கு கொதித்ததும் மீன் துண்டுகளை சேர்த்து மிதமான தீயில் வைத்து 10 நிமிடம் வேகவிடவும். அவ்வளவு தான் மீன் குழம்பு தயார்.
Nutrition
Serving: 700G | Calories: 245kcal | Protein: 35g | Saturated Fat: 0.1g | Cholesterol: 1mg | Potassium: 609mg